Truth Never Fails

Wednesday, June 12, 2024

Wrap the Trap Tax

 91H2741


Ji Tax 

வாங்குற சம்பளத்துக்கு வரி பற்றி பலருக்கு தெரியும்..


முதலீட்டு வரி

வர்த்தக வரி

பங்கு சந்தை வரி

இன்னும் பல வரிகள் உள்ளது..



இவைகள் பலருக்கு தெரியாது..


குறிப்பாக பங்கு சந்தை வரி மிக வேடிக்கையாக உள்ளது..


எதை தொட்டாலும் வரி


நேற்று 4 ரூபாய் நஷ்டதுக்கு ஒரு பங்கை விற்றேன் 

அதற்கு 18% GST போட்டார்கள்..


எதுவும் வேண்டாமென்று Exit செய்தாலும் வரி


வரியோ வரி...

🤣


செம வேடிக்கையாக உள்ளது.


அய்யய்யோ என்பது போலவும் உள்ளது..



ஆகவே நேற்று இரவு முதல் அது குறித்து தெரிந்துகொள்ள தொடங்கினேன்..


Microscopeபில் பார்ப்பது போல பார்த்து பார்த்து வரி விதிப்பு செய்துள்ளார்கள்.


இவ்வளவு வரி தேவையே இல்லை..


லூசு தனமாக உள்ளது..


வரி நாடு

Tax country 


என்று முன்பு எழுதியுள்ளேன்


அதை நிரூபிக்கும் அளவுக்கு உள்ளது


இந்திய வரி விதிப்பு..


Total gain tax மட்டும் போதும்..


Mutual fund களில்


Short term tax 15%

Long term tax 10%


என்று வைத்துள்ளார்கள்..


இது பலரை mutual fund முதலீட்டுக்குள் வராமல் தடுக்கும் செயல்.


அனைவரும் short term முதலீடு தான் விரும்புவார்கள்..


ஆகவே கண்ணி வைப்பது போல 15% வரி வைத்துள்ளார்கள்..


இவர்கள் வரியை கண்ணியாக பயன்படுத்துகிறார்கள் .



நீ இப்படி தப்பிச்சி போக பார்க்கிறியா இந்தா இங்க ஒரு கண்ணி 


நீ அப்படி தப்பிச்சி போக பார்க்கிறியா இந்தா அங்க ஒரு கண்ணி 


என்று எல்லா பக்கமும் வைத்துள்ளார்கள்..



ஆகவே தான்..

பலர்

துபாய் சிங்கப்பூர் என வர்த்தகம் செய்ய ஓடுகிறார்கள்..


அங்கிருந்து இந்தியாவில் வரி இல்லாமல் முதலீடு செய்கிறார்கள்.



இவர்கள் பிடிப்பது எல்லாம் Retail individual low budget investors ..


பெரிய பெரிய யானைகள் எல்லாம் வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறது காரணம் அதிகமான கண்டபடியான வரி விதிப்பு.


இதை 

கண்ணி வரி என்கிறேன்..


அல்லது


லூசு தனமான வரி விதிப்பு.



சிறு முதலீடுகளின் மூலம்

மக்களை லாபம் அடையவிடாமல் செய்யும் முறை


Economy finance Auditing Accounts Tax பற்றி படிக்க படிக்க 

அட பாவிங்களா 

நம்மளை மாயையான பொருளாதார சிறையில் இந்த நாடு வைத்துள்ளது என்பது புரிகிறது.



இந்த நாடு என்பது நிலமல்ல

Finance அமைச்சர்கள் அதிகாரிகள்

இவர்களை தான் குறிப்பிடுகிறேன்


பொருளாதார சீர்திருத்தம் தேவை


வரியை குறைங்க

வட்டியை குறைங்க

பண வீக்கத்தை குறைங்க .


நம்மை வைத்து தான் பல நாடுகள் சம்பாதிக்கிறது


நம்ம அறிவும் திறமையும் உழைப்பும் அங்கே போகிறது

உள்நாட்டில் வேலை இல்லாமல் போகிறது.



நுண்ணிய வரி விதிப்புகளை அகற்றுங்கள்.


Ease the tax system. 



+++++++

(பொருளாதார வரி விதிப்பு சிந்தனையில் இருந்து சமூக வளர்ச்சியை (சீர்திருத்தத்தை ) பார்க்க கூடாது

சமூக சீர்திருத்தத்தில் இருந்து தான் பொருளாதார விதிமுறைகளை செயல்படுத்தனும் 

இங்கிருந்து பார்க்கும்போது தான் பொருளாதார விதிமுறைகளில் உள்ள தவறுகள் தெரிகிறது.)

இந்த பொருளாதார வடிவமைப்பு மக்களை நஷ்ட்டமடைய செய்வதாகவும்
இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதாகவும் நான் கருதுகிறேன்.



(People only think about Easing the tax payment methods its also essential
But
They don't think about Easing the tax system methods )

























No comments:

Post a Comment