Truth Never Fails

Friday, June 16, 2017

தமிழனா திராவிடனா

நான் தமிழில் தான் கவிதை எழுதுகிறேன்,ஆனால் நான் தமிழில் தான் எழுதுகிறேன் என்று என் கவிதைகளில் சொல்லியது கிடையாது.
சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது.
திருக்குறள் தமிழில் தான் இருக்கிறது
இருந்தாலும்
திருக்குறளில் தமிழ் என்கிற சொல் குறிப்பிடப்படவில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.
சங்க இலக்கியத்தில் திராவிடம் என்கிற சொல் கிடையாது...
என்று சொல்பவருக்கும் இதே பதில் தான்.
ஆனால் இது சற்று வேறுபடும்.
தமிழ் தமிழன் என்றால் ஒரு இனம் ஒரு மொழிக்குள் அடங்கிவிடும் ..
திராவிடம் என்றால் பல இனம் பல மொழிகள் இருக்கிறது...
பொதுவாக திராவிட இனம் என்கிற ஒற்றை சொல்லில் தற்போது விலிம்பினாலும் அது மொழி அடிப்படையில் ஒற்றை இனம் கிடையாது...
எப்படி தமிழன் என்றால் ஒரு தேசத்தை சேர்ந்தவன் இல்லையோ... அதுபோல...
என்னது ஒரு தேசத்தை சேர்ந்தவன் இல்லையா என்றால் ஆமாம் ...சேர சோழ பாண்டியன்... மூன்று தேசம்..
அதுபோல திராவிடத்தில் பல தேசம் பல மொழி பல இனம் ஆனால் ஒரே ஒற்றை பெயர் திராவிடன் ...
இதில் கலப்பு அதிகம்...
வட தேசத்தில் இருந்து இவனை வரலாற்று ரீதியில் தனித்து காட்டவே திராவிடன் ..என்று வரலாற்று ஆசிரியர்களும் மற்றும் பல வட நாட்டு எழுத்தாளர்களாலும் சொல்லப்படுகிறது...
இந்த நிலப்பரப்பில் குறிப்பாக பல தேசங்கள் இருந்தது ...அப்படி அதில் ஒரு தேசத்தில் இருந்தவன் எப்படி மற்ற தேசத்தில் இருப்பவனோடு தன்னை இணைத்து திராவிடன் என்று சங்க இலக்கியத்தில் எழுதி இருக்க முடியும்...
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக தான் இருந்தது...
ஆனால் தற்போது பிரிந்து விட்டது...
ஒரு காலத்தில் பாகிஸ்தான் மக்கள் இந்தியர்கள் தான்...
அதற்காக தற்போது அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்வார்களா அல்லது.. நீங்கள் தான் அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா ? ...
வரலாற்றை உங்கள் கூற்றால் திரிக்க முயறசிக்காதீர்கள் ...
(இன்னும் நிறையா சொல்லுறேன் ஆனா type அடிக்க முடியல)

திராவிடம் என்பது பிற்காலத்தில் வந்த் பெயர்
முற்காலத்தில் வேறு ஏதாவது பெயர் கூட இருந்திருக்கலாம்.


No comments:

Post a Comment