நேற்று :
ஒரு வயதானவர் பஸ் ஆட்டோ வராத சாலையில் நின்றுகொண்டு lift கேட்டார்..
அவரை ஏற்றிகொண்டு செல்கையில்..
ஏதாவது ATM மில் நிறுத்த சொன்னார்..
ஆள் ஏதோ கிராமத்தில் இருந்து வந்துள்ளதை போல தோற்றம் இருந்ததால்..
நீங்க எந்த ஊர் என்றேன்.
ஊர் பெயரை சொன்னதும்..
உங்க பெயர் என்ன என்றேன்.
XX ரெட்டி என்று சாதி பெயருடன் சொன்னார் .
நீங்க எங்க லோக்கலா என்றார்.
ஆமாம் ஆனால்
நானும் அந்த ஊர் தான் என்றேன்..
எந்த ஊர் என்று என்னை கேட்டார்..
இப்ப சொன்னீங்களே அந்த ஊர் தான் என்றேன்.
அங்க எங்க என்றார்.
நீங்க மேல்பாதி
நான் கீழ் பாதி என்றேன்
அவர் நம்பவில்லை
அதன்பின் என் அப்பா தாத்தா பெயர்களை சொன்னேன்.
அவரிடம் மவுனம் கனத்தது.
நா ஊருக்கு வந்தது இல்லை
அதுனால உங்களுக்கு என்னைய தெரியாம இருக்கலாம் என்றேன்.
அவர் இறங்க வேண்டிய இடம் வந்தபோது..
எங்க வீட்டுக்கு பால் ஊத்துறவங்க அங்க இருந்து தான் வராங்க
என்று சொல்லி
அவரை அறுதல் படுத்திகொண்டார்..
அவரை இறக்கிவிட்டு
ATM எப்படி போகனும்
திரும்ப எப்படி பஸ் ஏறுவது என்று சொன்னேன்.
அவர் என் முகத்தை உற்று பார்த்துக்கொண்டே இருந்தார்..
நான் வருகிறேன் என்று கிளம்பிவிட்டேன்..
+++++++
அவருக்கு என்ன என் அப்பாவை விட 2-3 வயது தான் அதிகமாக இருக்கும்.
கண்டிப்பாக அவருக்கு தெரிந்து இருக்கும்.
கடைசியாக என் தாத்தா இறந்த்போது ஊருக்கு சென்றேன்.
நான் தான் இறுதி சடங்கு செய்தேன்.
அப்பொழுது உயர் சாதியினர் இருக்கும் தெரு வழியாக சவம் செல்லும்போது மேலத்தை நிறுத்த
நான் ஏன் என்றேன்..
சாதி காரணமாக.
இது ஊர் வழக்கம் என்றார்கள்.
இன்று அந்த தெருவில் இருந்து ஒருவர் என் வாகனத்தில் வர வேண்டும் என்று விதி அமைந்தது பாருங்கள்.
என் தாத்தா பாட்டி காலத்தில் செய்த அட்ராசிட்டிகள் எல்லாம் அந்த பெருசுக்கு நினைவில் வந்து இருக்கும்.
என் சந்திச்சிட்டாருல
இனி முக்தி தான்.
நான் தான் முடிவுரை எழுதனும்னு இருக்கு போல.
No comments:
Post a Comment