Truth Never Fails

Sunday, July 30, 2023

தூக்கிய பங்குகள்

 இந்த பதிவை பதிந்த அடுத்த நாள் NLC பங்குகளை தமிழக அரசு வாங்கியது.


அதுவரை யாருக்கும் அப்படி தோன்றவில்லை.


ஒரு மாநில அரசால் மத்திய அரசின் பங்குகளை வாங்க முடியுமா என்று ?


முடியும் மத்திய அரசு தருகிற நிதியை வைத்தே மத்திய அரசின் பங்குகளை மாநில அரசு வாங்க முடியுமென்று அதுவரை யாருக்கும் தெரியாது சிந்தித்து கூட இருக்கமாட்டார்கள்.


Reliance வாங்குவதற்கு பதில் மாநில அரசு வாங்கிவிட கூடாதா என்கிற எதிர்பார்ப்பில் பதிந்தேண்..

சில செய்தி நிறுவனங்களை tag செய்தேன்.


அடுத்த நாள் NLC பங்குகள் வாங்கப்பட்டது.


(வருடாந்திர கூட்டத்துக்கு share holders வரலாம் வந்து சில முடிவுகளை எடுக்கலாம் அது ஏன் தமிழக அரசாக இருக்க கூடாது என்கிற சிந்தனை அப்பொழுது)


தற்பொழுது ஆளுகிற நபர்களுக்கு இதற்கு பின்னால் இருக்கும் சிக்கல்கள் புரியவில்லை என கருதுகிறேன்.


இதற்கு பின்னால் லாபம் தரக்கூடிய மிக பெரிய அரசியல் இருக்கிறது.


அவைகளை சொன்னால் இந்த பதிவு பத்தாது.


கமிஷன் share contract தான் NLC அரசியல் .


தொழிலாளர் நலன் நிலம் இழந்தவர்களுக்கு வேலை என்பதெல்லாம் தற்பொழுது இல்லை.


எனக்கே NLC ஒரு லட்சம் வரை பணம் பாக்கி வைத்துள்ளது..


சென்ற வருடம் கூட அதன் தலைவருக்கு கடிதம் போட்டேன் அவரும் பதில் எழுதினார்

தர இயலாது என்று.


இது இப்படியே போகுது

என்றாவது எல்லாம் முடிவுக்கு வரும்.


உதாரணத்துக்கு நானும் 10 நபர்களை அழைத்து சென்று போராடினால் அழைத்து பேசுவார்கள்

எவ்வளவு வேண்டுமென்று 

அவ்வளவு பணம் உள்ளது .


இப்படி அவ்வப்பொழுது மிரட்டி பணம் வாங்கும் அரசியல்வாதிகளும் உண்டு.

தொழிற் சங்கங்களும் உண்டு.




Saturday, July 29, 2023

தமிழகம் vs தமிழ்நாடு : பாரத் vs இந்தியா

 Tamilnadu vs Thamilagam: India vs barath

தமிழ்நாடு vs தமிழகம் : பாரத் vs இந்தியா


ஒன்னுமில்லை தமிழ்நாடு என்பது மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு உருவான பெயர் (சிலர் முன்பே இப்படி பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லி போராடியும் வந்தார்கள்)


அப்போ தமிழகம்னா என்னப்பா என்றால்

ஒன்னுமில்லை பழைய மெட்ராஸ் மாகாணம் இருந்ததுல அதுபோல மிக பெரிய பகுதி

அது ஆந்திரா,கர்நாடகா,கேரளா வரை இருந்த பகுதியை தான் தமிழகம் என்று சொல்லியுள்ளார்கள்.


தற்பொழுது தமிழகம் என்ற சொல்லை பயன்படுத்தலாமா என்றால் ?

பயன்படுத்தலாம் தவறு இல்லை


இதை  புரிஞ்சிக்க இன்னொரு உதாரணம் தான் இது.


பாரத் vs இந்தியா


அகண்ட பாரதம் என்பது கைபர் கணவாய் தொடங்கி ஹிந்து குஷ் வரை சென்று தாய்லாந்து கடந்து குமரி வரை வருகிறது இல்லையா ?


ஆனால் அதுவே இந்தியா எனும்போது காஷ்மீர் முதல் குமரி வரை மட்டுமே உள்ள நாடு தானே


ஆனால் அதை நாம் பழைய பெயரான பாரதம் (பாரத்) என அழைப்பது இல்லையா ?


அதுபோல தமிழகம் என பொதுவில் அழைப்பது தவறு இல்லை

ஆனால் அரசு கோப்புகளில் மாநில பெயரான தமிழ்நாடு என அச்சிடுவது தான் சரியாக இருக்கும்


தமிழ்நாடு என்றால் அது ஒரு நில வரையறைக்குள் இருக்கும் இந்தியா போல


தமிழகம் என்றால் நில வரையறை இல்லாமல் இருக்கும் பாரதம் போல .


+++++++


இந்த பதிவை பதிய ஒரு மாதமானது.

அதுவரை மூளையில் மூலையில் வைத்து தகவல்களை சேகரித்து கொண்டு இருந்தேன்.


ஜனவரி மாதம் இந்த பிரச்சனை தமிழ்நாடு அரசியலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இந்திய அரசியலிலும் உள்ளது.


Its a timing shot 





Thursday, July 27, 2023

ஆபத்தின்போது நம்மை alert செய்யும் காகம்

 நேற்று இரவு வீட்டில் சின்னதாக ஒரு kitchen fire accident நடந்தது..

அந்த smell காலை வரை இருந்தது..

காலை 4 மணிக்கு வெளியே அமர்ந்து இருந்தேன்..


5 மணிக்கு ஒரு காகம் வந்தது..

பயங்கர பரபரப்பாக என்னை நோக்கி கத்த தொடங்கியது..


இங்கும் அங்கும் அலைமோதியது வாசல் சுவற்றில் முட்டியது..


நான் புரிந்து கொண்டேன்..

அது உள்ளே தீ வாசம் வருவதால் என்னை alert செய்கிறது என்று..


நான் நகராமல் அதை பார்த்துக்கொண்டே இருந்தேன்..


கொஞ்சம் நேரம் பரபரப்பாக இருந்துவிட்டு 

அருகே இருந்த மரத்தில் அமர்ந்து கரைத்துகொண்டே இருந்தது.


நான் வீட்டின் உள் 6 மணிக்கு சென்றது..

சத்தமிடுவதை நிறுத்தி விட்டது.


++++++


முதலில் அது பரபரப்பாக கத்தும் போது அருகே ஏதாவது பாம்பு இருக்கிறதா என முதலில் பார்த்தேன்..


அதன் பின் தான் உணர்ந்தேன் அது தீ வாசதை கண்டு நம்மை எச்சரிக்கிறது என்று.


இயற்கையோடு இணையும் தருணம் மிக அற்புதமானவை.


அதை புரிந்துகொள்வது தான் கடினம்..

Wednesday, July 26, 2023

புளிப்பு மாயா

 இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும்.

Psychologically இது சரி தான்..


மனதுக்கு பிடித்தவர்கள் விலகி செல்லும்போதும் ஏமாற்றம் அடையும் போதும் சரியாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் உடல் எடை குறையும்.



ஒரு வாரத்தில் 6 கிலோ கூட குறைந்து இருக்கிறது.

அதே நேரத்தில் ஜிம்மில் அதே கிலோவை குறைக்க 6 மாதம் கூட ஆகும்.


இது யாருக்காக என்று சொல்லாமல் விட்டால்

அவரவர்கள் தனக்காக என்று நினைத்து கொள்வார்கள் என்று எண்ணி சஸ்பென்ஸ் செய்து சொல்லாமல் விடுகிறேன். 😂



Friday, July 21, 2023

தட்டி தூக்கி போடு

மணிப்பூர் கலவரம் : 

மணிப்பூர் கலவரத்திற்கு அடிப்படை காரணமானது சாதி.


ஆகவே  சாதி ஒழிப்பு பற்றி நாடாளுமன்றத்தில் பேசணும் மாறாக சாதி வன்முறையால் நிகழ்ந்த நிகழ்வுகளை மட்டும் பேசுவது ஒட்டுமொத்த  சங்கதிகளுக்கும் தீர்வு ஆகாது.


இது வெறும் நிவாரணம் தேடும் நிகழ்வாகவே அமையும் .


நிவாரணமா நிரந்தர தீர்வா ?

Thursday, July 20, 2023

Stop social media market place

 Facebook,Instagram போன்ற சமூக வலைதளங்கள் இந்தியாவில் பொருட்கள் விற்க்க அனுமதி வாங்கியுள்ளார்களா ?

(Market place போல பலர் பயன்படுத்திக்கொள்ள )


அப்படி வாங்கவில்லை என்றால் அந்த நிறுவனங்கள் பொருட்கள் விற்க்க/அதன் ஊடாக விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்.


அமெரிக்கா அனுமதி கொடுத்துவிட்டால் கண்ணை மூடிக்கொண்டு இந்தியாவில் விட்டுவிடுவதால் பல சிக்கல்கள் வருகிறது.

மவுன ஆயுதம் தொடுக்கிறார்கள்

 பெண்களிடம் இருக்கும் ஒரே பலமான ஆயுதம் மவுனம் .

இதை காதலியும் பயன்படுத்துகிறாள்

சகோதரியும் பயன்படுத்துகிறாள் 

++

தாய் மட்டும் பயன்படுத்துவதில்லை .

தாயிடம் பயன்படுத்தினால் அவள் தாங்குவதுமில்லை விடுவதுமில்லை .


இந்த மவுன ஆயுதத்தை வைத்து பல காரியத்தை ஆண்களிடம்/ஆண்களை வைத்து சாதிக்கிறார்கள்.


இது genetically இருக்கு .


இதே ஆயுதத்தை இன்னொரு பெண்ணிடம் அவர்களால் பயன்படுத்த முடிவதில்லை..

போடி மயிருன்னு போய்டுவா.


இது ஆண்களிடம் மட்டுமே சாத்திய படுகிறது

பாவும் பாசத்தால் அன்பால் காதலால் ஏமாந்துவிடுகிறார்கள்.


இந்த ஆயுதத்தின் நோக்கமே ஆணை கட்டுக்குள் கொண்டு அடிமை செய்வது தான்.


எப்பா முடியல..


போடி நீ இல்லைனா இன்னொருத்தி

என்று போகவும் முடியல




Wednesday, July 12, 2023

He is the magic

 Who he is ?

He is I'm to the he is who whereas he is I'm, I'm is the who.


Yes I'm a magic

You can find me but I'm not there with you

I'm with you but I'm not there with you.

Same way with you in there without there

I'm there


Panni kutty 


Wednesday, July 5, 2023

விபத்தில் தவறு இழைத்தவர்களை ஆதறிக்காதீர்கள்

 இந்த பிரபலங்கள் விபத்து ஏற்படுத்தும்போது அந்த காணொளிகள் வெளி வரும்போது சிலர்..


Bro don't worry we support you என்கிறார்கள்..


+++++


இப்படித்தான் என்னை குடித்துவிட்டு வந்து மோதி விபத்து ஏற்படுத்தியவனை

சிலர் support செய்து அவன் பெயர் FIR ல் கூட வராமல் காப்பாற்றிவிட்டார்கள் .


யார்ரா நீங்கள் எல்லாம் ..


இப்படி

தப்பு செய்பவர்களை ஆதரிக்காதீர்கள்..


உரியவர்களுக்கு இழப்பீடு கிடைக்காமல் போய்விடும்..


இது காயமடைந்தவர்களுக்கு / உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு மிக பெரிய இழப்பு .


நீதியும் நிதியும் கிடைக்காமல் போய்விடும்.

சவாலே சமாளி

 எனக்கு 2017-2018 சுத்தமாக நினைவில் இல்லை ஏதோ சில சில சம்பவங்கள் தான் நினைவில் உள்ளது.


ஆனால் இந்த காலகட்டத்தில் அதிக zero balance களை என் வங்கி கணக்குகள் சந்தித்துகொண்டு இருந்தது.


ஆனால் என் social media கணக்குகள் எந்த balance களும் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது.


அதிக உணவு

உடல் எடை கூடிய காலம்

அவள் என்னை உண்மையாக காதலிக்கிறாள் என்பதை உணர்ந்து விட்டேன்

ஆனால் அவள் தொடர்பில் இல்லை..

எங்கே சென்றாள் என்று தேடிக்கொண்டு இருந்தேன்..

2018 இறுதியில் ஒரு திருமணத்திற்கு சென்றேன்

அங்கே நண்பர்கள் என் பொருளாதார நிலையை பார்த்து கிண்டல் செய்தார்கள்..

அவர்களுக்கு சவால் விட்டேன்

உங்களை விட நல்ல நிலமைக்கு வந்து காட்டுகிறேன் என்று..

அடுத்த நாள் திருமணத்தில் கூட நான் கலந்து கொள்ளாமல் வீடு திரும்பினேன்.

மறக்க முடியாத நாள் அது 

அதன்பின் 2019ல் மே 6 எனக்கு விபத்து நடக்கும் வரை யாரும் என்னுடன் பேசவில்லை.

அன்று தான் மருத்துவமனையில் என்னை வந்து பார்த்தார்கள்..


மறுபுறம் விபத்தில் நான் படுகாயம் அடைந்ததால் .

அவர்களிடம் சிகிச்சைக்காக உதவிக்கு நின்றதால்

எனக்கோ சவாலில் நான் தொற்று விட்டது போல ஒரு உணர்வு.


இன்று மேஜைக்கு மேலே உணவு உள்ளது

ஆனால் அருகே துணையாக ஒரு இணை இல்லை என்கிற கவலை உள்ளது.


இருந்தாலும் காலம் போகிற வரை போவோம்

வாழ்க்கையே ஒரு சவால் தான்.






Tuesday, July 4, 2023

தோல் சுட்ட சூரியன்

 வெளியில் வெய்லில் சுற்றி சுற்றி sunburn வந்துவிட்டது..


மருத்துவர் sunscreen பயன்படுத்த சொல்லியுள்ளார்..


இது தான் முதல் முறை..


+++++


குறிப்பு : 75gms sunscreen 550 ரூபாய் 


கொஞ்சம் protective mode ல் இருந்திருக்கலாம் !