Truth Never Fails

Friday, August 12, 2022

அரசு வங்கிகளை தவறான கடன் மூலம் அழிக்கிறார்கள்

 இந்திய அரசு வங்கிகள் 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் தருவதை நிறுத்த வேண்டும் .


அதேபோல் ஏற்கனவே கொடுத்த கடன்களில் ..

100 கோடிகளுக்கு மேல் இருந்தால் உடனே அதனை வசூலிக்க வேண்டும்..


 எக்காரணம் கொண்டும் தள்ளுபடியோ .. நிறுவனம் திவாலோ செய்ய கூடாது..


÷÷÷÷÷÷÷÷


மக்கள் கட்டிய வரி பணம் மக்கள் நலனுக்கு செலவிட படாமல்..


பெரிய தனியார் நிறுவனங்களுக்கு சுமார் 10 லட்சம் கோடிகள் வரை வங்கிகள் மூலமாக கடனாக கொடுக்கப்பட்டுள்ளது..


அவர்களும் அதை திருப்பி செலுத்துவதாக இல்லை..


அவர்கள் நிறுவனங்கள் ஒழுங்காக நடத்தாமல் திவால் செய்யும் நோக்கிலேயே நடத்துகிறார்கள்..


இதன்மூலம் இறுதியில் வங்கி கடனில் இருந்து எளிதில் விடுப்பட்டுவிடுகிறார்கள்..


இதற்கு இடையே பல பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்துவிடுகிறார்கள்..

அந்த பொருட்களுக்கான பணம் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறது..


(இந்தியர்கள் கட்டிய வரி பணம் 

வங்கிகள் மூலம் கடனாக கொடுக்கப்பட்டு..

இறக்குமதிகள் மூலம் வெளிநாடு செல்கிறது..)


பெரிய நிறுவனங்கள் தனியார் வங்கிகளிடம் கடன் வங்கட்டும்..


அரசு வங்கிகள் 100 கோடிகளுக்கு மேல் கடன் தருவதை நிறுத்தட்டும்..


10 லட்சம் கோடிகள் வரை மக்கள் வரி பணத்தை இதுவரை வீண் செய்து இருக்கிறார்கள் என்கிற தகவலை நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார் ..

இவர் முன்னாள் IRS என்பது குறிப்பிடத்தக்கது..




 


No comments:

Post a Comment