'சாம்பார் வாலியும் பிரியாணி அண்டாவும்
'
இதை வைத்து நம்ம ஆளுங்க innovationல எவ்வளவு பின்தங்கி இருக்கங்கன்னு என்னால சொல்ல முடியும்.
சொல்லட்டுமா ?
கொதிக்க கொதிக்க சாம்பார் வாலியில் உள்ள சாம்பாரை பந்தியில் பரிமாறி சாம்பார் தீர்ந்தவுடன் அதை refill செய்ய செல்லும் நபர் அங்கு ஒரு பெரிய அண்டாவில் கொதிக்கும் சாம்பாரில் வாலியின் அடி பாகத்தை இடது கையில் பிடித்து முக்கி அதை வெளியே எடுப்பார் இல்லையா ?
அல்லது ஒரு வாலியில் இருந்து இன்னொரு வாலிக்கு சூடாக உள்ள குழம்பை மாற்ற தடுமாறுவார்கள் அல்லவா ?
இங்க Stop பண்ணுங்க.
இங்க ஒரு சின்ன Alteration செய்தால் கொதிக்கும் சாம்பாரில் கை படாமல் சாம்பாரை மாற்ற/அள்ள முடியும்.
(காட்சி)
அதேபோல் பிரியாணி அண்டா தம் கட்டிய பிறகு இறக்கி வைக்க அல்லது வேறு இடத்திற்கு எடுத்து செல்ல முடியாமல் கொதிக்க கொதிக்க உள்ள பாத்திர முனையில் காகிதத்தை மடித்து பிடித்து தூங்குவார்கள்.
இங்க Stop பண்ணுங்க.
இங்க ஒரு சின்ன Alteration செய்தால்.
பேப்பர் மடித்து முனையில் பிடிக்காமல் பிரியாணி அண்டாவை சுலபமாக தூக்க முடியும்.
(காட்சி)
இவையெல்லாம் மிக மிக சிறிய மாறுதல்கள் தான் ஆனால் அதை பாத்திரம் தாயாரிப்பவர்களும் முயல்வதில்லை அதை விற்பவரும் முயல்வதில்லை பயன்படுத்துபவரும் முயல்வதில்லை
காரணம் புதுமையை முயற்சிப்பதில்லை
×××
ஒன்று உற்று கவனித்தால் தெரியும் நாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய சாதனங்களை விட மிக கேவலமான சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம்.
(ரயில் பத்திரம் கூட உதாரணம்)
எதையுமே அதை நாம் கண்டு பிடிக்கவில்லை மாறாக அயல் நாடுகளில் இருந்து வாங்குகிறோம்.
இது பாத்திரங்களுக்கும் பொருந்தும். காலம்காலமாக ஒரே வடிவ பாத்திரங்களையே பயன்படுத்துகிறோம்.
மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப கூடுதலாக நாம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
நம்ம ஆளு copper ஸ்டீல் இவைகளை ஒரே பிரஸ்சில் அழுத்திக்கொண்டே இருக்கிறான். ஒரே லேத்தில் ஒட்டிக்கொண்டே இருக்கிறான்.
இவன் மண் பானையை எடுத்துக்கிட்டு வெளிநாடு போனான் அங்கு அவன் Pot Holder உருவாக்கி இவன் கிட்டேயே வித்துட்டான்.
நான் சொல்லியவைகளை உங்களுக்கு காட்சி படுத்தவில்லை.
காரணம் அதை பார்த்துவிட்டால் உங்கள் மனதில் ச்சி இவ்வளவு தானா என்று தோன்றும்.
(Alternative methods என்கிற தலைப்பின் கீழ் உள்ள சிறு பகுதி இது)
No comments:
Post a Comment