Truth Never Fails

Monday, September 21, 2020

Agri act India my opinion

 Farms act: என் தாத்தா பருத்தி,மிளகாய் விளைவித்து அவரே அதை பண்ரூட்டி எடுத்து சென்று  விற்றுவிட்டு வந்துவிடுவார், 


அதன் பின் காலத்தில் விளைநிலத்திற்க்கே வியாபாரிகள் வர தொடங்கிவிட்டார்கள்.


அதையும் தாண்டி விவசாயிகள் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு விற்க ஒழுங்குமுறை கூடம் உள்ளது.


உழவர் சந்தை வேறு வந்தது.


இப்ப நான் மேலே சொன்னது தமிழ்நாட்டு கதை.

....×××××.....


ஆனால் இதே நிலை வேறு மாநிலங்களில் இல்லை. 

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இது மாறுபடும்.


ஏன் ஒவ்வொரு விளை பொருட்களுக்கும் இது மாறுபடும்.


×××××÷÷÷×××××


விவசாயிகளுக்கு நஷ்டம் வராமல் இருந்தால் சரி.


÷÷÷÷÷÷÷÷÷÷÷


சரி வாடிக்கையாளர் பக்கம் வருவோம்.

என் தாத்தா விவசாயி

என் அம்மாவும் விளைநிலத்தில் வேலை செய்தவர்

ஆனால் நான் வாடிக்கையாளர்.


வாடிக்கையாளராகிய நான்


இனி Food processing industry யை நம்பி தான் இருக்க நேரிடும்.


ஒரு கிலோ வெங்காயத்தை பாக்கெட்டில் வாங்குவேன்

என் வீட்டின் அருகே விளைந்தாலும்.


நான் அதை வாங்க முடியாது.


காரணம் அந்த உழவன் பெரு நிறுவனத்திடம் contract பேசி கொடுத்துவிடுவான்.


அவன் 10 ரூபாய்க்கு 1 கிலோ வெங்காயத்தை கொடுத்து இருப்பான்.

அவன் அருகே இருக்கும் நான் கடைகளில் பாக்கெட் வெங்காயத்தை 40 ரூபாய்க்கு வாங்குவேன்.


இதற்கே அதில் chemical processing செய்திருப்பார்கள்.


÷÷÷÷÷÷


அமெரிக்காவில் கனடாவில்,இங்கிலாந்தில் இந்தியர்கள் எப்படி காய்கறிகளை வாங்குகிறீர்களோ அதுபோல் மாறும்.


(Even they've farm market other than super market isn't it? )

Luckily Tamilnadu has farmers market similar to that . But only small farmers are using it.


Big farmers with first quality yield will go to corporate.


××××××××


இந்த சட்டம் நல்லதா கெட்டதா என்று சொல்லவே முடியாது.


காரணம் ஒவ்வொரு மாநிலத்திற்கு இது மாறும்

அதேபோல் ஒவ்வொரு விளைபொருட்களுக்கும் மாறும் 


ஒரு இடத்தில் லாபமும் மறு இடத்தில் இழப்பும் உண்டாக்கும்.


இது ஓட்டுமொத்தத்தில் விலைவாசி உயர்வை உருவாக்கும்.


இடை தரகர்கள் இருந்த இடத்தில் பெரு நிறுவனங்கள் தற்பொழுது அமர்கிறார்கள் அவ்வளவு தான் வித்தியாசம்.


÷÷÷÷÷÷


என் கணிப்புபடி


சிறு விவசாயிகளுக்கு தான் நஷ்டம் 

பெரு விவசாயிகளுக்கு லாபம்


வாடிக்கையார்கள் விலை உயர்வை சந்திப்பார்கள்.


÷÷÷÷÷÷÷


(இதேபோல சர்க்கரை,முந்திரி, மீன் வியபாரங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளது.)


Business idea :

Start a food processing industry

(I've many pharm professionals in my friends list they can try, you will get license soon)

No comments:

Post a Comment