Truth Never Fails

Wednesday, July 8, 2020

வரன் தேடும் புதிய தலைமுறை பெண்கள்

#Socialife #Tamilnadu (தமிழக வாழ்வியல் பற்றிய பதிவு)

 2004 முதல்  30000rs 40000ரூ மாத சம்பளம் வாங்கும் நபர்களை தான் திருமணம் செய்வதில் பெண்கள் (குடும்பம்) முன்னுரிமை கொடுத்தார்கள,

அதற்கு குறைவாக இருந்தால் அரசு ஊழியராக இருக்க வேண்டும்.

அதிலும் US மாப்பிளை என்பது 90களிலேயே தொடங்கிவிட்ட பழக்கம்..

அரசு ஊழியர் மாப்பிளை  என்பது 80 களிலேயே தொடங்கிவிட்ட பழக்கம்..
÷÷÷÷

ஆனால் தற்பொழுது கோரோனா ஊராடங்கிறக்கு பிறகு இந்த பொருளாதார அடிப்படையில் வரன் தேடும் விஷயத்தில் மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது.

அதை புரிந்துகொள்ளவும் கடினமாக உள்ளது..

தற்போதைய இளம் பெண்களின் மனநிலை மாறி இருக்கிறது..

இது எனக்கு
குழப்பமாகவும் இருக்கிறது.
(Can't able to over come from past stereotype mindset)

÷÷÷÷÷÷÷÷

கடந்த 3 மாதமாக பெரும்பாலும் திருமணங்கள் நடைபெறவில்லை (நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக) இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதனால் இளம் பெண்களின் மனநிலை மாறிவிட்டதோ என்று தோன்றுமளவுக்கு சில சம்பவங்கள் நிகழ்கிறது..

எப்பொழுதுமே மாப்பிள்ளை தேடும் அல்லது தன் துணை தேடும் விஷயத்தில் முன்னோக்கி செல்லவே பெண்கள் விரும்புவார்கள் ..
சுருக்கமாக சொன்னால் மேற்கத்திய நாகரீகத்தை ஒட்டியே
அல்லது
நகரத்தை நோக்கியே நகர்வார்கள்.

ஆனால் தற்பொழுது பின்னோக்கி வருகிறார்கள் ..

இது என்னை மட்டுமல்ல பல ஆண்களை குழப்பமடைய செய்துள்ளது..

÷÷÷÷÷÷÷

மாதம் 1 லட்சம் சம்பாதிக்கும் பெண் கூட
உள்ளூரில் 10000 ரூ ஈட்டும் மாப்பிள்ளையை தேடி வர தொடங்குகிறார்கள்..

ஒருவேளை இது பெண் வீட்டில் தரப்பட்ட அழுத்தமா
அல்லது
வேறு ஏதாவது பெண்ணுக்கு பிரச்சனையா (Even no ex relationship)

என்று எல்லா பக்கமும் அலசி ஆராய்ந்து பார்த்தாலும் அப்படி ஒன்றுமில்லை..

இந்த மாற்ற நிலையை புரிந்துகொள்ள முடியவில்லை..

இது குறித்து அந்த சம்பந்தப்பட்ட பெண்களிடம் கேட்டால்

அதான் நான் சம்பாதிக்கிறேன்
பிறகு என்ன என்கிறார்கள்..

இந்த மாற்றம் எப்படி நடந்தது ?

அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில்..

÷÷÷÷÷÷÷

வழக்கமாக உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள்
இல்லையா?

அதைப்பற்றி கூட இந்த பெண்கள் கவலைகொள்ளவே இல்லை..

There is a generation change..

ஆனால் இதிலும் ஒரு பழமை உள்ளது

உள்ளூரில் தன் சாதி மாப்பிள்ளையை தேடுகிறார்கள்..

(இதுவும் மாறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்)

÷÷÷÷÷÷

குறைந்தபட்சம் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்ததற்கு பின்னால் பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது..

அது பெண் பிள்ளையின் தேர்வை மறுப்பு இன்றி அங்கீகரிக்கும் நவீன பெற்றோர்கள்..

மாப்பிள்ளையின் வேலையும் சம்பளமும் குறைவாக இருந்தாலும் தன் பெண் தேர்வு செய்துவிட்டாள் என்பதற்காக அவளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்கள்..

இது மாற்றமில்லையா ?

÷÷÷÷÷÷

அடுத்த தலைமுறை மாற்றத்தில் சாதி மாறி பெண் பிள்ளைகள்  தன் துணையை தேர்வு செய்தாலும் பெற்றோர்கள் ஏற்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு பிறக்கிறது..

÷÷÷÷÷÷

மேலே சொன்னது சமீபத்தில் நடக்கும் நிச்சய திருமணங்கள் குறித்த பதிவு (காதல் திருமணங்கள் அல்ல)

÷÷÷÷÷÷

பாவும் எங்கள் கால பெண்கள் சாதி + பொருளாதாரத்தின் பின் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டார்கள் .. (நிச்சய திருமணங்கள் மட்டும்)

++++++

#blog

÷÷÷÷÷÷÷

இதுவரை நல்ல வேலை அல்லது நல்ல பொருளாதாரம் இல்லாத காரணத்தால் திருமணமாகாத 90s கிட்ஸ் ஆண்கள் இருந்தால் get ready 

என்பேன்.

Best Brides available

Try out if you're lucky you'll get it

÷÷÷÷÷÷

இது சமீபத்தில் நடந்த சில நிச்சய திருமணங்களை வைத்து நான் செய்த சமூக சோதனை .
(காதல் திருமணங்கள் அல்ல note this point)

வரதட்சணையாக பைக் கார் வாங்கிய தலைமுறை முடிந்துவிட்டது
 இது
எலெக்ட்ரிக் வாகன கால மாற்றங்கள்

என்று நகைச்சுவையாக சொல்லி முடிக்கிறேன்

No comments:

Post a Comment