Truth Never Fails

Thursday, April 30, 2020

Tamilnadu bunker point

 உலகம் #COVID_19 கோரோனா நோய் காரணமாக முடங்கியதால் #Lockdown 


கச்சா எண்ணெயின் தேவை குறைந்துள்ளதால் ..


சரக்கு ஏற்றிய கப்பல்கள் ஆங்காங்கே அப்படியே நிற்கிறது..


எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்காத காரணத்தால் 

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ..

எண்ணெயை சேமிக்க இடமில்லாமல் தினருகிறார்கள் ..


ஆகவே தான் அவர்கள் ஒரு barrel ―39 டாலர் விலைக்கு விற்க நேரிட்டது..


அப்படியாவது நாடுகள் கப்பல்களில் உள்ள எண்ணெயை  வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தார்கள்.


கப்பல்கள் சரக்கை இறக்கிவிட்டு திரும்பி வந்தால் தான் ..

சேமிக்க இடமில்லாமல் நிரம்பி வழியும் கச்சா எண்ணெயை நிரப்ப முடியும்.

என்று எதிர்பார்த்தார்கள்..


ஆனால் அது நடக்கவில்லை..


+++++


நான் இங்கு சொல்லவந்தது அதுவல்ல..


கப்பல்துறையில் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது


தற்பொழுது கோரோனா கொள்ளை நோய் வந்ததால்..


கப்பல்கள் சிங்கப்பூர் துறைமுகத்தை விட்டால் அடுத்த பாயிண்ட் இந்தியா தான்..


இந்த தருணத்தை நாம் பயன்படுத்தலாம்..


வாய்ப்புகள் உள்ளது..


Bunker point


உலக தரத்தில் கப்பல்களுக்கு பங்கரிங் செய்தால்..

சிங்கப்பூர் இடத்தை பிடிக்கலாம்..


இயற்கையாக தமிழகத்திற்கு அந்த வாய்ப்பு உள்ளது.. என்பது சிறப்பு. 


#business #news #India #Tamilnadu


No comments:

Post a Comment