Truth Never Fails

Thursday, April 16, 2020

சாதி ஒழிப்பின் இரண்டாம் நிலையில் நாம்

உள்ளூரை தாண்டாத நீ உலக அறிவை கற்று சாதி இல்லை என்கிறாய் உலகையே சுற்றி வந்து உள்ளூர் அறிவுடன் சாதி இருக்கு என்கிறார்கள்
இதில்
யார் அறிவாளி
யார் திறமைசாலி?
சாதி என்பது இல்லை என்று தெரிந்தாலும்
அதன் மூலம் தனுக்கு வருகிற ஆதாயத்தை ,பெயர் புகழை யாரு விட்டு தர மாட்டார்கள் .. (For them caste is economy and status)
அதற்காகவே சாதி தீயை பற்ற வைத்து வளர்ந்துகொண்டே தான் இருப்பார்கள்..
இந்த கோணத்தில் இருந்து பார்த்தால் தெரியும் சாதியை ஒழிப்பது எவ்வளவு கடினம் என்பது..
இதே கோணத்தில் இருந்து தான் சாதி ஒழிப்பை தொடங்கவும் வேண்டும்..
சாதியால் கிடைக்கும் பெயர்,புகழ்,அந்தஸ்து,வருமானம் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்..
சாதியின் நிமித்தம் எது கிடைத்தாலும் ஆபத்து என்கிற நிலையை உருவாக்க வேண்டும்..
.....
மாறாக பழைய தலைவர்கள் கடந்த நூற்றாண்டில் இருந்து மனம் திருந்துதல் முறையில் சாதியை ஒழிக்க எண்ணினார்கள்..
அது சிறிதளவே பயன் அளித்தது..
அது அடிப்படை தான்..
அது முழு வடிவமல்ல..
÷÷÷÷÷÷÷
நான் சொல்லிய வழிகளை பின்பற்றினால் தான் ..
ஒரு தெளிவான பாதையே கிடைக்கும்..
அந்த பாதையில் சென்று தான்
நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்..
÷÷÷÷÷÷÷
உதாரணத்துக்கு :
சாதியை வைத்து கல்லூரி/மருத்துவமனை/செய்தி நிறுவனம்/இதர சொத்துக்கள் கட்டி இருந்தால் பிடுங்கு அதை அரசுடமையாக்கு..
அனைத்தையும் நிர்மூலமாக்கு
வெறும் கையுடன் நிற்க வை..
இது தான் அடிப்படைக்கு மேல் உள்ள முதல் படி .
#Caste
2020க்கு பிறகு பிறக்கும் குழந்தைக்கு சாதி என்றால் என்னவென்றே தெரிய கூடாது..
இதை 2000 ஆண்டே செய்ய நினைத்தேன் முடியவில்லை.. (சிறு வயது அனுபவம் போதவில்லை)
20 ஆண்டுகள் கழித்து
நான் மட்டும் முயற்சிக்க போவதில்லை
நீங்களும் தான்..
#NoCaste
Krishna Kumar G

No comments:

Post a Comment