Truth Never Fails

Monday, November 11, 2019

நீதி சாதிகள் கடந்து

 கற்பனை 2019 உச்சநீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு வருகிறது : 

பட்டியல் பிரிவை சேர்ந்தவரை  ஒரு ஊர் கோவிலில் நுழைய விடாமல்  தடுக்கிறார்கள் என்கிற வழக்கு..


அதற்கு தீர்ப்பு : 


பெரும்பான்மையான அந்த ஊர் ஹிந்துக்கள் பட்டியல் பிரிவு மக்கள் கோவிலுக்குள் வருவதை விரும்பவில்லை..


ஆகவே அந்த ஊரில் 5 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு தருகிறோம் அதில் உங்களுக்கென ஒரு கோவில் கட்டிக்கொள்ளுங்கள் ..


2 கோவில்களிலும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்ய ஒரு பூசாரி நியமிக்கப்படுவார்..


அனைவரும் இந்த தீர்ப்பை ஏற்று அமைதிகாக்க வேண்டும்..


(சமூக வலைதளத்தில் பின்னுட்டமிடும் சாதியவாதியின் கருத்துப்போல்..

ஒரு நீதிபதியின் கருத்து அமைந்தால் இப்படித்தான் இருக்கும்)


÷÷÷÷÷÷÷÷÷


மாறாக civil rights பாதிக்கும் வகையில் பட்டியல் பிரிவு மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த நபர்களை கைது செய்து 


கோவிலில் நுழைய வைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு ஆணை பிறப்பித்து ..

உத்தரவிடும் தீர்ப்பு சரியானதா ?


++××++


எங்கே உரிமை மறுக்கப்படுகிறதோ

அதை அங்கே பெற்று தருவது தானே நீதி


அதற்கு மாறாக நீ கீழே அமர்ந்துக்கொள்

அவன் மேஜை மீது அமர்ந்துக்கொள்ளட்டும்

ஆனால் இருவரும் ஒரு வகுப்பறையில் தானே பாடம் படிக்கீறீர்கள் என்கிற மழுப்பல் சொல் சம தர்ம நீதியா ?


நான் படிக்கும் பள்ளியில் இவன் படிப்பதா ?

நான் அருந்தும் தேநீர் கோப்பையில் இவன் அருந்துவதா ?

என் வீதிகளில் இவன் செருப்பு அணிவதா ?

நான் பிணத்தை எரிக்குமிடத்தில் இவனும் எரிப்பதா ?


இப்படியான அதிகார எண்ணங்களால் நீதிமன்றங்களில் குவிந்த வழக்குகள் கோடி..

அதில் நீதி தவரியதும் கோடி..


அதிகார வர்க்கத்திற்காக நீதி ஒருபுறம் தலை சாய்வது இந்தியாவுக்கு புதிதல்ல..


இதில் அயோத்தி வழக்கும் அப்படிப்பட்டது தான்..


காலம் மாறும்

காட்சிகள் மாறும்

வையத்தின்

நீதி மட்டும் மாறாது

என்பதை மானுடம் உணர்ந்துவிட்டால்

மனிதன் எழுதும் நீதி எம்மாத்திரம்..


#caste #law #ayodhya 


Krishna Kumar G

Wednesday, November 6, 2019

Free Trade Tamilnadu

 Now Chennai becoming Geographic Centrality (for SEA,China,Japan,Russia, Australia)  Trade


But there is no political stability (No freedom for diplomatic decisions and lots of Scams making downfall )


And there is no ease of doing business (Indian political system over shadows state autonomy)


Free Tamilnadu Free Trade will lead to become next Singapore 


Krishna Kumar G

Tuesday, November 5, 2019

Cheating corporates custom is casted

 ஒரு நாள் swiggyல  சாப்பாடு வாங்கிட்டு காத்திருந்தேன்.. 


கடையில் சாப்பாட்டை எடுத்த அதன் பணியாளர் என்னை அழைத்து  அவனது தனிப்பட்ட எண்ணிற்கு ஒரு missed கால் கொடுங்க கிட்ட வந்ததும் அழைக்கிறேன் என்றான்..

நான் முன்னெச்சரிக்கையாக ஒரு Screenshot எடுத்துவிட்டு missed கால் கொடுத்தேன்..


அடுத்த நொடியே food delivered என்று வந்து order closeசாகி விட்டது..


பிறகு நிறுவனத்திடம் நடந்ததை சொல்லி முறையிட்டேன்..

பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார்கள்..


அடுத்த 30 நிமிடத்தில் அதே உணவை வீட்டுக்கு வர வைத்துவிட்டார்கள்..

அந்த பையனை வேலையை விட்டு அனுப்பி இருக்க கூடும்..


ஆனால் அந்த பையன் என்ன தில்லுமுல்லு பண்ணாண்ணு தெரியல..

ஆனா ஏதோ பண்ண போறான் என்று தான் முன்னெச்சரிக்கையாக screenshot எடுத்தேன்..


நிறுவனத்தையும் ஏமாற்றி இருக்கான் மக்களையும் ஏமாற்றி இருக்கான்..


இந்த மாதுரி நிறுவனம் நடத்துறது சாதாரண விஷயமல்ல..


தினமும் 100 பணியாளர் ஏமாற்றுவார்கள் 100 வாடிக்கையாளர்களும் ஏமாற்றுவார்கள்..  

இதில் சில patternகளை அவர்கள் study செய்திருப்பார்கள்..


இதுபோன்ற கர்பொரேட் நிறுவனங்களில் பணிக்கு சேர்ப்பார்கள் நம்மை பற்றி நிறுவனத்திற்கு எதுவும் தெரியாது என்று எண்ணாதீர்கள்..


உங்களை போல பலரை பார்த்தவர்கள் எந்த ஆடு எப்படி மேய்யும் எப்படி தண்ணி காட்டனும் என்று நன்கு அறிந்திருப்பார்கள்.. Analytics by AI


உண்மையாக வேலை செய்தால் நல்ல பலனையும் கொடுப்பார்கள்..


ஆனால் ஆடு என்றுமே பலியாடு தான்..


அதற்கு எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் layoff 


#Infosys #cognizant

Friday, November 1, 2019

தமிழ்நாடு நாள்

 

Tamilnadu Naal

Karnataka Rajyotsava

Kerala Piravi

Pondy liberation day

But not Andhra formation day today

÷÷÷÷÷÷÷÷

மொழிவாரியாக சில மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்

××××××××

1 Nov 2021

தமிழ்நாடு நாள் தேர்ந்தெடுக்கும் முறை : 

முதன் முதலில் தமிழ்நாடு என்கிற பெயர் எங்கு ஒலிக்கப்பெற்றது 


அதன் காலம் என்ன 


சொல்லியது யார் 


எப்பொழுது அது வீரியமானது 


எப்பொழுது

சட்டமன்றத்தில் முன்மொழிய பட்டது


எப்பொழுது நிறைவடைந்தது/அதிகாரபூர்வமானது.


மாநிலமானதா / தனி நாடானதா ?


மாநில நாள் கொண்டாடுகிறோமா / 

நாட்டின் நாள் கொண்டாடுகிறோமா?


அல்லது ஒட்டுமொத்த (உலக) தமிழர்களுக்கென ஒரு நாள் கொண்டாடுகிறோமா


இப்படி பல கேள்விகள் என்னுள்..