Truth Never Fails

Monday, November 11, 2019

நீதி சாதிகள் கடந்து

 கற்பனை 2019 உச்சநீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு வருகிறது : 

பட்டியல் பிரிவை சேர்ந்தவரை  ஒரு ஊர் கோவிலில் நுழைய விடாமல்  தடுக்கிறார்கள் என்கிற வழக்கு..


அதற்கு தீர்ப்பு : 


பெரும்பான்மையான அந்த ஊர் ஹிந்துக்கள் பட்டியல் பிரிவு மக்கள் கோவிலுக்குள் வருவதை விரும்பவில்லை..


ஆகவே அந்த ஊரில் 5 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு தருகிறோம் அதில் உங்களுக்கென ஒரு கோவில் கட்டிக்கொள்ளுங்கள் ..


2 கோவில்களிலும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்ய ஒரு பூசாரி நியமிக்கப்படுவார்..


அனைவரும் இந்த தீர்ப்பை ஏற்று அமைதிகாக்க வேண்டும்..


(சமூக வலைதளத்தில் பின்னுட்டமிடும் சாதியவாதியின் கருத்துப்போல்..

ஒரு நீதிபதியின் கருத்து அமைந்தால் இப்படித்தான் இருக்கும்)


÷÷÷÷÷÷÷÷÷


மாறாக civil rights பாதிக்கும் வகையில் பட்டியல் பிரிவு மக்களை கோவிலுக்குள் விடாமல் தடுத்த நபர்களை கைது செய்து 


கோவிலில் நுழைய வைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு ஆணை பிறப்பித்து ..

உத்தரவிடும் தீர்ப்பு சரியானதா ?


++××++


எங்கே உரிமை மறுக்கப்படுகிறதோ

அதை அங்கே பெற்று தருவது தானே நீதி


அதற்கு மாறாக நீ கீழே அமர்ந்துக்கொள்

அவன் மேஜை மீது அமர்ந்துக்கொள்ளட்டும்

ஆனால் இருவரும் ஒரு வகுப்பறையில் தானே பாடம் படிக்கீறீர்கள் என்கிற மழுப்பல் சொல் சம தர்ம நீதியா ?


நான் படிக்கும் பள்ளியில் இவன் படிப்பதா ?

நான் அருந்தும் தேநீர் கோப்பையில் இவன் அருந்துவதா ?

என் வீதிகளில் இவன் செருப்பு அணிவதா ?

நான் பிணத்தை எரிக்குமிடத்தில் இவனும் எரிப்பதா ?


இப்படியான அதிகார எண்ணங்களால் நீதிமன்றங்களில் குவிந்த வழக்குகள் கோடி..

அதில் நீதி தவரியதும் கோடி..


அதிகார வர்க்கத்திற்காக நீதி ஒருபுறம் தலை சாய்வது இந்தியாவுக்கு புதிதல்ல..


இதில் அயோத்தி வழக்கும் அப்படிப்பட்டது தான்..


காலம் மாறும்

காட்சிகள் மாறும்

வையத்தின்

நீதி மட்டும் மாறாது

என்பதை மானுடம் உணர்ந்துவிட்டால்

மனிதன் எழுதும் நீதி எம்மாத்திரம்..


#caste #law #ayodhya 


Krishna Kumar G

No comments:

Post a Comment