ஒரு பில்லியன் டாலர் பணம் ஈட்ட கூடிய நிறுவனத்தின் தலைமையகம்
குடிசை மாற்று வாரியம் வழங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் 4 வது மாடியில் ஒரு வீட்டில் இயங்கினால் எப்படி இருக்கும் ?
இது சட்டபடி தவறு இல்லை...
ஆனால் நம்பும்படி இருக்காது இல்லையா ?
இப்படி தான் சீனாவின் பல நிறுவனங்கள் இயங்குகிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ?
200 b டாலர் வர்த்தகம் US stock exchange listed ஆனால் ஒரு சாதாரண தெருவில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதல் தளத்தில் ஒரு வாடகை வீட்டில் தலைமையகம் உள்ளது ..
இப்படி செய்ய உலகளாவிய அறிவு தேவை..
ஒரு காலத்தில் பிரிட்டிஷ் இந்த முறையை பயன்படுத்தி உலகை கைப்பற்றினார்கள்..
பின் அமெரிக்கர்கள் செய்தார்கள் யூதர்கள் செய்கிறார்கள் தற்பொழுது சீனர்கள் செய்கிறார்கள்
பல நாட்டின் சட்ட திட்டங்களை அறிந்து அவைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொழில் செய்வது.
Ireland நாடடில் நிறுவனத்தை பதிவு செய்து அதன் துணை நிறுவனம் என்று சீனா வங்கியில் கடன் வாங்கி அமெரிக்காவில் நுழைந்து அங்கு ஒரு அறையில் நிறுவனத்தை நடத்தி அமெரிக்க பங்கு சந்தையில் நுழைந்து உள்ளார்கள்..
அமெரிக்கர்கள் அந்த நிறுவன பொருட்களை வாங்கும் அளவுக்கு செய்துவிட்டார்கள்..
மேலே சொன்னது சின மாடல்..
தற்பொழுது இந்திய மாடல்..
ஒரு நிறுவனம் இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி இந்தியாவின் அனைத்து பெரிய ஒப்பந்தன்களையும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணையுடன் கைபற்றி பணத்தை ஈட்டி
அமெரிக்க பங்குசந்தையில் நுழைந்தது..
இவர்கள் எந்த பொருளையும் தயாரிக்கவும் இல்லை விற்கக்கவும் இல்லை..
கடன் வாங்குவது லஞ்சம் கொடுப்பது ஒப்பந்தங்களை கைப்பற்றுவது என்கிற நூதன மோசடியை மட்டுமே செய்துள்ளார்கள்.
ஆகவே இதை சட்ட ரீதியாக எந்த நாடும் கண்டுபிடித்து தடுத்துவிடும்.
அவனும் ஏமாத்துறான் இவனும் ஏமாத்துறான் ஆனால் அவன் தப்பித்துவிடுவான் இவன் மாட்டிகொள்வான்
No comments:
Post a Comment