நான் குடிப்பதில்லை என்றாலும் ஒரு சில சந்திப்புகள் உயர்ரக மதுபான பாரில் தான் அமைகிறது.
வெறும் எங்கும் சந்திக்க வர அவர்கள் விரும்பவில்லை
இப்படி சென்ற ஆண்டு வெளிநாட்டில் இருந்து வந்த நபர் உங்களை பார்க்க வேண்டும் என்றார்..
வாங்க உணவகம் சென்று சாப்பிடலாம் என்றேன்.
அவரோ மதுபான விடுதிக்கு அழைத்தார் நான் வருவது கடினம் என்றேன்..
உடனே அவர் அப்போ சந்திக்க வேண்டாம் என்று சுலபமாக சொல்லிவிட்டார்..
எனக்கோ தர்ம சங்கடமாக இருந்தது.
இதற்கு முன்பு ஒருவரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பார்த்து
நீ ஏன் அங்க போற என்று என் குடும்ப உறுப்பினர் கேட்க எனக்கு கஷ்டமாக இருந்தது.
முன்பு பூங்கா , மைதானம் குட்டி சுவர்களில் கடை வீதிகளில் சந்திப்போம்..
இது கடந்த 20 ஆண்டுகளில்
காலம் மாறி
தற்பொழுது அனைவருமே மதுபான விடுதிகளில் தான் சந்திக்கிறார்கள் .
அங்கு தான் போதையில் மனம் விட்டு பேசுகிறார்கள்.
குடிக்காத நான் அப்படிபட்டவர்களை சந்திக்க நான் அங்கு செல்ல வேண்டியுள்ளது
எனக்கு ஏதாவது தின்பண்டம் குளிர் பானங்கள் வாங்கி தருவார்கள் .
No comments:
Post a Comment