ஒரு முழுமையான உரையாடல் யாருடனும் செய்ய முடியவில்லை பேச்சு தொடங்கும் போதே ( judgmental ) தீர்ப்பு சொல்லி விடுகிறார்கள்..
அதன் பின் எனக்கு பேசுவதற்கு பிடிக்கவில்லை
கோபம் தான் வருகிறது
என்ன சொல்ல வரோம் என்று கூட கேட்காமல்
இவர்களாகவே ஒன்று சொல்லி விடுகிறார்கள்.
உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருந்தாலும்
கொஞ்சம் என் அறியாமையை கேட்டு என்னை திருத்துகள்
அதை ஏற்க நான் தயார்
ஆனால் அதற்கு முன்பாகவே என் பேச்சை தட்டி கழிப்பது
முழுமையான உரையாடல் ஆகாது .
உங்களுக்கு தெரிந்ததை நானும் கற்க முடியாது
எனக்கு தெரிந்ததை நீங்களும் கற்க முடியாது
பரஸ்பர பகிர்வு தான் உரையாடலுக்கு அழகு
No comments:
Post a Comment