மில்லினேல்ஸ் ஒழுங்காக மருத்துவ பரிசோதனை அல்லது மருத்துவம் பார்ப்பதில்லை..
ஊசி போடுவதில்லை மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதில்லை
உள்நோய்யாளியாக மருத்துவமனையில் சேர்வதில்லை..
அவரவர் மருத்துவத்திற்கு எதிரான வெவ்வேறு கருத்தியல் கொண்டவர்களாக உள்ளார்கள்.
ஒருவனுக்கு 5 நாட்களாக வைரஸ் காய்ச்சல் உள்ளது மருத்துவர் உள் நோயாளியாக சேர சொன்னார்..
அவனோ இஞ்சி டீ குடித்து சரி செய்கிற முயற்சியில் இறங்கியுள்ளான்
உடல் எடை குறைந்து மிக சோர்வாக உள்ளான்
நானும் சொன்னேன் அவன் கேட்கவில்லை
அவனால் பலருக்கு ஆபத்து
வைரஸ் பரவும் இல்லையா..?
இது ஒரு உதாரணம் தான்
இதுபோல பல இளைஞர்களை பார்த்துள்ளேன்.
பெரிய அளவில் ரத்தம் வந்தால் தான் மருத்துவமனை மாறாக மற்ற விசியங்களுக்கு யூடியூப் கை வைத்தியம் தான் ..
எனக்கு காலையில் தலைவலி வந்தால் மதியம் மருத்துவமனையில் இருப்பேன்.
மாலையில் என் வேலையை பார்ப்பேன்..
(அப்படி சென்றே சில விசயங்களை சரி செய்ய முடியவில்லை அது வேறு)
மருத்துவ உலகம் வளர்ந்துள்ளது அதை முழுவதும் பயன்படுத்துங்கள்.
நல்ல மருத்துவரை/ மருத்துவமனையை பார்த்து .
++++++
No comments:
Post a Comment