Truth Never Fails

Sunday, June 23, 2024

கள்ள குடியால் இழப்பு

 உங்களுக்கு சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன்..

என் பதிவில் தேடினால் கிடைக்கும்.


2003ம் ஆண்டு ஒருமுறை கல்லூரி அருகே 10 ரூபாய்க்கு சாராயம் விற்பதை பார்த்து..

100 க்கு அழைத்து புகார் தெரிவித்தேன்


சிறிது நேரம் கழித்து


Local சிதம்பரம் எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது..


மிரட்டலாக


ஆனால் அதன்பின் அந்த இடத்தில் சாராயம் விற்கபடவில்லை..


அதுக்கப்பறம் 


நம்ம பயணத்தில் பல விசியங்களை பார்த்தாச்சு..


இன்னொரு சம்பவம்..


இது ஏதோ குறுக்கு வழியா இருக்கு இப்படியே போவோம் என்று கருவேல காட்டு வழியாக வந்தேன் .


என் வண்டி வரும் சத்தம் கேட்டு 


திடீர் என்று 

பலர் காட்டுக்குள் இருந்து தெறித்து ஓடினார்கள்..


நான் பயந்தே விட்டேன்


என்னவென்று பார்த்தால்..


சாராயம்..


எனக்கு அதுக்கப்பறம் போக வழி தெரியவில்லை ..


யாரிடம் கேட்பது

ஓடியவர்கள் திரும்பி வருவதற்குள்..


கிடைத்த வழியில் வண்டியை செலுத்தி வெளியே வந்தேன்..


இன்னொரு சம்பவம் இருக்கு..

அதை பொதுவில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை..


மிகப்பெரிய அரசியல் சிக்கல் வந்துவிடும்..


இந்த விஷ சாராயத்தை ஒழிக்க எளிய வழி..


புதுவை மாநில ஃபார்முலா ஒன்று உள்ளது அதை பின்பற்றலாம்..


அல்லது


வேறொன்று உள்ளது

ஆனால் அதை இலவசமாக சொல்ல முடியாது.


புதுவை ஃபார்முலா : 


சாராய கடையை அரசே நடத்தும்


கள் இறக்க அனுமதி உண்டு..


அப்போ காசு வருமானம் இல்லாத மக்கள் அங்கு சென்று விடுவார்கள்


காசு உள்ளவர்கள் பெரிய பார்களுக்கு செல்வார்கள்.


+++++(


டாஸ்மாக் வழியாக ஸ்பிரிட் என்று சொல்லப்படும் சாராயத்தை 60 ரூபாய்க்கு விற்றால் 

கள்ள சாராயம் குடிக்க போகமாட்டார்கள்..


அரசு விற்கும் சாராயத்தில் விஷம் இருக்காது என்று நம்பி வாங்குவார்கள்...

ஆனால் போதை இல்லையென்றால் மீண்டும் விஷ சாராயம் குடிக்க சென்றுவிடுவார்கள்..


மது ஒழிப்பு தான் என் லட்சியம் என்றாலும்..


ஆட்சியாளர்களுக்கு  வருமானம் வேண்டி சாராயம் விற்பதால்


ஒரே இடியாப்ப சிக்கலாக இருக்கிறது.


60 பேர் இறந்த பிறகும்


சாராயம் விற்கும் நபர்கள் திமிராக தான் உள்ளார்கள்..


ஆகவே அவர்களை சாராய நிறுவனம் தொடங்க செய்து


அவர்களிடம் இருந்து அரசு சாராயம் ஸ்பிரிட் கொள்முதல் செய்து


டாஸ்மாக் வழியாக விற்க வேண்டும்..


(என்னவெல்லாம் சொல்ல வேண்டி உள்ளது பாருங்க)


குடியால் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது 


அவனவன் திருந்தினால் போதும்..



No comments:

Post a Comment