இசை பெரிதா மொழி பெரிதா?
இசைக்குள் மொழி உண்டு
மொழிக்குள் இசை உண்டு
(மலராத மலருக்கு மொட்டு என பெயர் உண்டு
எழுத்து வடிவம் கொள்ளாத தாளத்துக்கு மெட்டு என பெயர் உண்டு)
😂
மொழி இசையுடன் இசைந்து செல்லும் வேளையில் மனம் இணைந்து செல்லும்
இசை இல்லாமல் மொழியும் உண்டு
மொழி இல்லாமல் இசையும் உண்டு
இரண்டும் இணைந்தால் ஒலியில் பரவும் புது வடிவம் கொண்டு.
ஒரு இசைக்குள் பல மொழிகள் உண்டு.
ஒரு மொலிக்குள் பல இசைகள் உண்டு..
இதை அறியாதவன் மண்டு
நான் மேலே எழுதியது மொழி வரி தான்
ஆனால் அதற்குள் இசை முகவரியும் உண்டு
வெறும் மொழியாக பார்த்தால் மொழி தெரியும்.
இசையாக பார்த்தால் இசை தெரியும்.
இதை இசை பாடலாக மாற்ற எனக்கு தெரியும்..
இசையை தந்தால் அதற்கு மொழி வடிவமும் கொடுக்க தெரியும்.
+(((((((++
அருணாசல பிரதேச மாநிலத்தில் ஒரு தூர மலை கிராமத்தில்..
ஒரு பழங்குடி மக்களின் பெயர் வெறும்
கூ கூ என்னும் குயில் இசை தான்..
அங்கு பெயரே இசை தான்..
அனைவருக்கும் ஒரே பெயர் தான் வெறும் மொழியாக பார்த்தால்
அதேவேளையில்
இசை ராகத்துடன் பார்த்தால் ஒவ்வொரு பெயருக்கும் ஒரு ராகம் உண்டு.
++++++
இசையும் மொழியும் காட்சியும் கலந்தால் மறப்போம் காலத்தின் நீட்சி மனகவலையின் மீட்சி அதற்கு நாமே சாட்சி..
Reels Shorts காட்சி
அவர்களுக்கு வேலை இல்லாமல் போச்சி
++++++
2 நாட்களாக சொல்லனும்னு தோணுச்சு
இப்பொழுது நேரம் கிடைத்தது..
No comments:
Post a Comment