2018 என் வீடு அருகே ஒரு பொண்ணு வேலைக்கு சென்று கொண்டு இருந்தது..
எங்க அம்மா சென்று அந்த பெண்ணிடம் என் பையனை கல்யாணம் பண்ணிக்கிரியா என்று கேட்க..
நான் மம்மி என்ன பண்ற என்றேன்..
நான் சொல்லவும் அந்த சரி என்று தலையை ஆட்டவும் சரியாக இருந்தது..
அங்கிருந்தே என் அம்மா அந்த பொண்ணு சரி சொல்லிடுச்சி டா என்றார்..
(இப்படி தான் கிண்டல் செய்வார்)
நான் சென்று அந்த பெண்ணிடம் sorry கேட்டேன்..
அந்த பெண் சிரித்து கொண்டே சென்றுவிட்டது..
அதன்பின் தினமும் அந்த பெண் என்னை பார்த்து வெட்கத்துடன் சிரித்து கொண்டே சென்றது..
அடுத்து நான் விபத்தில் சிக்கிய பின்..
2 ஆண்டுகளுக்கு பின் அந்த பெண்ணை பார்த்தேன்..
என்னை பார்த்தவுடன் தலையை குனிந்து நடந்து சென்றது ..
ஒரு நாள் என் அம்மாவிடம் கேட்டேன்..
அங்க பாரு மம்மி நீ கேட்ட பொண்ணு என்றேன்..
அதற்கு என் அம்மா
அந்த பொண்ணுக்கு திருமணமாகிவிட்டது என்றார்
நீ தான் வேண்டாம்னு சொல்லிட்டல என்றார்.
தற்பொழுது அந்த பெண்ணின் தந்தையை பார்த்தேன்..
அவரும் குனிந்த தலையுடன் செல்கிறார்.
அந்த பெண் நன்றாக தான் இருந்தார்..
நான் தான் நமக்கு ஒரு பெண் காத்துக்கொண்டு இருக்கிறது என்று என் அம்மாவின் தேர்வை வேண்டாம் என்றேன்.
அவளுக்கும் பல மாப்பிள்ளைகள் பார்த்து இருப்பார்கள்
அவளும் வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பாள்..
இருவரும் இப்படி தான் காத்துக்கொண்டு இருக்கிறோம்.
+++++
இது போல என் அம்மா
எனக்காக 4 பெண்கள் பார்த்துள்ளார்..