நேற்று இரவு ஒரு தொலைபேசி அழைப்பு :
சார் நீங்க இன்னாருடைய பையனுக்கு அட்வைஸ் பண்ணிங்களா ?
யோசித்து ஆமாம் என்றேன்..
அவன் தற்கொலை செய்து இறந்துட்டான் என்றார்..
நான் வழிகாட்டியது
10 ஆண்டுகளுக்கு முன்
அதன் பின் அவன் கல்லூரி முடித்து
IT நிறுவனத்துக்கு வேலைக்கே சென்றுவிட்டான்..
அன்னைக்கு நான் அட்வைஸ் பண்ணதுக்கு
10 வருடம் கழித்து ஒருவன் எப்படி இறக்க முடியும்..
நல்ல வழி தானே காட்டினேன்..
என்று என்னுள் தோன்றினாலும்..
அந்த பையனின் தந்தையை நினைத்து பார்த்தேன்..
சென்ற மாதம் தன் மகனுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று என்னிடம் ஒரு ஒரு மணி நேரம் பேசி கொண்டு இருந்தார்..
திருமணம் செய்ய வேண்டிய நேரத்தில் அந்த பையன்
ஏன் தற்கொலை செய்துகொண்டான் என்கிற கேள்விகள் வேறு..
இன்று காலை அங்கு சென்றேன்
நான் செல்லவும் உடலை எடுக்கவும்
சரியாக இருந்தது..
அந்த பையனின் தந்தை
வாங்க கிருஷ்ணா சார் என்று அழுதார்..
என்னால் அவர் முகத்தை பார்க்க முடியவில்லை .
பத்து ஆண்டுகளுக்கு முன்
அந்த பையன் படித்த தனியார் பொறியியல் கல்லூரியில்
நிர்வாக ரீதியாக கட்டம் கட்டிவிட்டார்கள்
என்று என்னிடம் அவர் சொல்லும்போது நான் அறிந்து
தைரியமாக Drop out பண்ணுங்க.
அதையே கட்டிகிட்டு அழுவாதீங்க
வயசு போய்டும்
என்று என் அனுபவத்தையும் எடுத்து சொல்லி
கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரியில் சேர்க்க சொன்னேன்..
அதே போல சேர்த்தார்.
படித்தான் முடித்தான்
வேலைக்கு சென்றான்..
திருமண நேரத்தில் இப்படி நடந்துவிட்டது..
10 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்க்கையை நான் மாற்றிபோட்டு வேறு வழியை திறந்து வைத்தேன்..
அதை சொல்லி அழுதுள்ளார்கள்
அதை கேட்ட நபர்
என்னை தொலைபேசியில் அழைத்து
நீங்க அட்வைஸ் பண்ண பையன் தற்கொலை செய்து கொண்டான் என்று நுதன முறையில் என்னிடம் சொன்னது
எனக்கே அதிர்ச்சியாக இருந்தது.
அந்த பையன் வாழ்கையை ஏதாவது பெண் தான் கெடுத்து இருப்பார்..
என்னால் கெட்டவர்கள் யாரும் கிடையாது..
வீழ்ந்து கிடந்தவர்களுக்கு
வழி காட்டி விட்டாசி அவ்வளவு தான்
வாழ்வது அவர்கள் கைகளில்.
No comments:
Post a Comment