Truth Never Fails

Friday, September 30, 2022

குழப்பத்தில் திராவிட கருத்தியல்

 திராவிடம் நிலப்பரப்பு என என் வலைப்பூவில் எழுதியது 


பலர் அதே பாணியில் பேசுவதை பல வலைதள காணொளிகளில் பார்க்கிறேன்..


அடுத்து..


திராவிடம் நிலப்பரப்பு..


மதமல்ல ... இனமல்ல... மொழியல்ல 


ஆனால் அரசியல் கருத்தாக வாழ்கிறது..


தற்போதைய சூழலில் தமிழ் மொழியால் திராவிட சொல் அரசியலில் வாழ்கிறது.


அரசியலுக்கு திராவிட மாடல் என்கிற சொல்லையும் உருவாகியுள்ளார்கள்..


அது என்ன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது.


அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இதுதான் 'திராவிட மாடல்' என்பது.


இது வெறும் அவரின் அரசியல் கருத்து ..


தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் இஷ்டம்..


÷÷÷÷÷÷÷÷÷÷


தமிழில் கிடைக்கும் கல்வெட்டுகளை திராவிட கல்வெட்டு என சொல்வது சதி ..


வரலாற்றை மாற்றும் செயல் .


மைசூரில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகளை திராவிட கல்வெட்டு என அடையாளம் படுத்தியுள்ளது தமிழக அரசு..

திராவிடம் எனபது அரசியலோடு இருக்க வேண்டும் வரலாற்றில் புகுத்த கூடாது.

அப்பொழுது அந்த சொல் பயன்பாட்டில் இருந்திருக்காது.


திருக்குறள் திராவிட நூல் அல்ல தமிழ் நூல்.

இல்லை அது திராவிட நூல் என்றால்

திராவிட மகாசன சபையை நடத்திய அயோதிதாசரே ஏற்க மாட்டார் 

அவர் தந்தை தான் திருக்குறள் ஓலைசுவடியை மீட்டு அச்சு ஏற்றியவர்..


அவர் தான் திராவிட சொல்லை அரசியலுக்குள் புகுதியவர்..


அவர் தீண்டாமையை ஒழிக்க

ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க

திராவிட சொல்லை பயன்படுத்த தொடங்கினார்.


இன்று இந்த சொல்ல 

அனைத்திற்கும் கட்டுபாடில்லாமல் பயன்படுத்தப்படுகிறது..


திராவிட இட்லி கடைகளில் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


குறிப்பு : இன்று பயன்பாட்டில் உள்ள சொல்லை 500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுக்கு எடுத்து செல்லாதீர்கள்..


அதேபோல் ஹிந்து என்கிற சொல்லையும் வரலாற்றுக்கு எடுத்து செல்லாதீர்கள்..

 

இந்த சொற்கள் எல்லாம் பிரிட்டிஷ் காலத்தில் தொகுக்கப்பட்டவை..


÷÷÷÷÷÷


மனு ஸ்மிருதி

(வர்ணாசிரம்)  ஹிந்து நூல் அல்ல 

அது ஒரு இன குழுவின் நூல்..


பிற்காலத்தில் அதை ஏற்றுக்கொண்ட மன்னர்களால் வர்ணாசிரமம் கொண்ட மனு ஸ்மிருதி பரவலாக்கப்பட்டு 

தற்போதைய ஹிந்து என்கிற சொல்லுக்குள் மாட்டியுள்ளது..


ஹிந்து என்கிற சொல்லுக்குள் இந்தியவில் இருந்த பல்வேறு மதங்கள் மட்டியதைப்போல..


குழப்ப நிலையில் மத,இன, மொழி,வரலாற்று கருத்தியல்கள் பரிமாறப்படுகிறது.


இதை தொண்டதொண்ட குழப்பம் தான் மிஞ்சும்.


ஆகவே இதைவிட்டுவிடுங்கள்


தற்போதைய நிலையில் அரசியல் ஆட்சி தான் முக்கியம்..



 


 


No comments:

Post a Comment