சமீபத்தில் EU ஐரோப்பிய யூனியன் குறித்து நம் வெளியுறவு துறை அமைச்சர் குறை சொல்லும் காணொளி ஒன்றை பார்த்தேன்.
மேற்கத்திய நாடுகளின் குரலாக அவர் ஒலித்து இருந்தார்...
அதில் குறிப்பாக ஐரோப்பிய யூனியன் என்கிற வார்த்தையை அவர் பயன்படுத்தாமல் ஐரோப்பிய நாடு என்றார்..
(27 நாடுகள் உள்ளது அதில் எந்த நாடு என அவர் சொல்லவில்லை)
ஐரோப்பிய யூனியன் தரநிலை என்பது உலகின் சிறந்த தரநிலை..
நம் இந்தியாவில் பெரும்பாலான பொருட்கள் வாகனங்கள் எல்லாம் இந்த தரநிலையில் தான் இருக்கும்.
ஐரோப்பிய யூனியன் என்பது அரசியல் மற்றும் பொருளாதார கூட்டமைப்பு..
NATO போல் இராணுவ கூட்டமைப்பு கிடையாது..
EU சமீபத்தில் Apple phone கூட C type charger கொண்டுவந்தால் மட்டுமே எங்கள் நாடுகளில் விற்க முடியும் என்று சொல்ல Apple நிறுவனம் C-Type charger தயாரிக்கிறது.
Deep fake தொழிநுட்பத்தை கண்டறிந்து தடை செய்யாத.
Facebook, Google, ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 6% அபராதம் கட்ட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.
Android OS உள்ள போன்களில் Pre loaded apps இருக்க கூடாது என்றும் சொல்லியுள்ளார்கள்.
இன்னும் ஏன் Automobile துறையில் சில தொழிநுட்ப சாதனங்கள் எல்லாம் வாகன நிறுவனங்களுக்கு ஏற்பட்டாற்போல் மாறாமல் ஒன்று போலவே இருப்பதற்கும் EU சட்டத்திட்டமே காரணம்.
இப்படி பல பெருமைகள் கொண்ட EU வில் நாம் தொழில் செய்ய வேண்டுமென்றால் அந்த EU standard கண்டிப்பாக இருக்க வேண்டும்..
இந்த standard இல்லாத இந்திய ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் அங்கு நுழைய முடியாது.
அது என்ன இந்தியாவா..
இங்கு வந்தவன் எல்லாம் கடை போடுகிறான்.
எதையாவது கலந்து லேகியம் என விற்கிறான்.