Truth Never Fails

Monday, December 20, 2021

இந்திய இலங்கை சீனா பாலம்

 இந்தியாவும் சீனாவும் இலங்கை இந்தியா இணைப்பு பாலம் கட்ட இருக்கிறார்கள் என கருதுகிறேன்..


சில நாட்கள் முன்பு

சீனாவுக்கான இலங்கை தூதர் வட இலங்கை தலைமன்னாரை பார்வையிட்டு படகில் 3ம் தீவு வரை சென்றார்.


கடந்த ஆக்டொம்பர் மாதம் இந்தியாவின் பெரும் பணக்காரர் அதானியும் வட இலங்கை மன்னார் சென்றார்..


இந்த இரு பயணங்கள் உட்பட இந்திய தூதரும் அங்கு சென்றுள்ளார்..


இது முழுக்க முழுக்க வர்த்தக நோக்கமே தவிர போர் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை..


போர் செய்ய ஏன் அதானி சென்று அங்கு பார்க்க வேண்டும் ?


ராணுவ தளபதிகள் அங்கு செல்லவில்லை தூதர்கள் தான் செல்கிறார்கள்..


÷÷÷÷÷÷÷


இந்திய இலங்கை பாலம்..


இந்த பாலத்தை சீனா கட்ட அதிக வாய்ப்பு உள்ளது..


இலங்கையில் இரண்டு துறைமுகம் வைத்துள்ள சீனா..


இந்தியாவுக்கான இறக்குமதியும் செய்ய உள்ளது..


அப்படி இறக்குமதி செய்யும் பொருட்களை  தரை வழியாக அல்லது ரயில் வழியாக இந்தியா எடுத்து வருவார்கள்..


அதேபோல் பொருளாதார ரீதியாக இலங்கையை கைப்பற்றியுள்ள சீனா..

அந்த பாலம் மூலம் இந்திய சுற்றலா பயணிகளை கையாளும்..

சுங்க கட்டணம் வசூலிப்பார்கள்..


÷÷÷÷÷÷÷÷


ஒருவேளை இந்தியா இந்த பாலத்தை கட்ட முயலலாம் ..


ஆகவே இந்தியாவின் ஆஸ்த்தான  கான்ட்ராக்டர் அதானி அங்கு சென்று பார்வையிட்டு இருப்பார்..


÷÷÷÷÷÷÷÷


என் கணிபுபடி இந்தியா இலங்கை பாலம் தான் வரவுள்ளது..


இதை 75ம் சுதந்திர தினத்தில் அறிவிக்க கூடும்..


மற்றவர்கள் யூகிப்பதைப்போல் 

போர் வர வாய்ப்பில்லை.


சீனா தற்பொழுது பணம் ஈட்ட தான் பார்க்கிறார்களே தவிர போர் செய்ய பார்க்கவில்லை..


÷÷÷÷÷÷÷


தற்பொழுது யார் பாலம் கட்டினாலும் சீனாவுக்கு லாபம் தான்.


புவியியல் படி அவர்கள் சரியான இடத்தில் துறைமுகம் அமைத்துவிட்டார்கள்..


அடுத்து கொழும்பு பொருளாதார மண்டலம்..

இந்திய Gambling பிரியர்களை சுண்டி இழுக்கும் என நான் கருதுகிறேன்..

தாய்லாந்தை தாண்டி அங்கு sex tourism இருக்கும்..


They're just making their revenue.. using land and people..


போர் செய்தல் இலங்கையை விட்டு வெளியேற நேரிடும்..

ஆகவே அதை செய்யமாட்டார்கள்.


No comments:

Post a Comment