Truth Never Fails

Thursday, September 3, 2020

காலனி காப்பான்

 நான் எப்பொழுதுமே சிறு வியாபாரிகளிடம் அவர்களை குறித்து விசாரிப்பேன். இன்று அப்படி ஒரு இளநீர் வியாபாரியிடம் நீங்க எந்த ஊர் என்று விசாரித்தேன்..

அவர் சொல்லிய ஊர் பெயரில் இன்னொரு இளநீர் வியாபாரி உள்ளார் என்று அவரிடம் அந்த வியாபாரியை தெரியுமா என்றேன்.


அதற்கு அவர் அவன் காலனி ஆளுங்க என்று மெதுவாக என் காது கடிக்க சொன்னார்.


இப்படி நெல்லிக்குப்பதில் காவல் நிலையம் எதிரே உள்ள கடைகள் ஒருமுறை காலியாக உள்ளதை கண்டு அதன் வாடகை என்னவென்று விசாரித்தேன்..


ஐய்யோ சார் இங்க வாடகைக்கு கடை வைக்காதீங்க 

காலனி பசங்க வந்து கடையை உடைப்பானுங்க என்று ஒரு பெரியவர் சத்தமாக சொன்னார்..


எனக்கு நடந்த விபத்து மற்றும் அறுவை சிகிச்சை முடிந்து விசாரிக்க வந்த நபர்.


காலனி பசங்க தான் இடிச்சி இருப்பானுங்க

அவனுங்க தான் வேகமா வண்டியில போராணுங்க என்றார்.


?÷÷÷÷÷÷?


இப்படி பல கதைகள் உண்டு


இதில் நான் சொல்லியவைகள் சில..


இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதே காலனிகளின் காப்பானிடம் தான் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.


உடலை பார்த்தால் சாதி தெரியாது

மனதை பார்த்தால் தெரிந்துவிடும்

ஏனென்றால் அங்கு தான் சாதி வாழ்கிறது.


(இவர்கள் இப்படி தான் பேசிக்கொண்டே இருப்பார்கள் சாகும்வரை அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது)


 அவர்கள் சொல்வதை நான் உள்வாங்கிக்கொள்வேன்

இரத்தம் கொதிக்க விடுவேன்

Caste discrimination 

சாதி ஒழிக்க

என் யோசனைகள் உலகத்தை கடக்கும்.

No comments:

Post a Comment