Truth Never Fails

Monday, June 15, 2020

நாம் தன்னிறைவு அடைவோம்

 சீன தயாரிப்புகளை நாங்கள் வாங்க மாட்டோம் என்று இந்தியர்களில் பலர் சொல்கிறார்கள் இப்படி சொல்லும்போது மற்ற உற்பத்தி நாடுகள் தங்களுக்கு சாதகமான வழி கிடைத்துவிட்டதாகவே கருதுவார்கள்.

ஆனால் அவர்களால் சீனாவை போல் குறைந்த விலையில் பொருட்களை விற்க முடியாது

அல்லது சீனாவை போல் Mass Production செய்ய இயலாது..


ஓட்டுமொத்தத்தில்


வெளிநாட்டு பொருட்களை வாங்க மாட்டோம் என்று இங்கு யாரும் சொல்லவில்லை


சீன பொருட்களை வாங்க மாட்டோம் என்றே சொல்கிறார்கள்..


இதே வருடம் மலேசிய பாமாயில் வாங்க மாட்டோம் என்றார்கள் 

ஆனால் இரண்டே மாதத்தில் வாங்கினார்கள்.


சொல்வதை ஏன் நம்மால் செய்ய முடிவதில்லை ?


வெளிநாட்டு பொருட்களை தவிர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல..


வெறும் வாய்ஜாலத்தால் செய்துவிட முடியாது..


முதலில் உற்பத்திகளை தொடங்க வேண்டும்..


உற்பத்தி செய்த பொருட்களின் விலை வெளிநாட்டு பொருட்களின் விலையை விட குறைவாகவும் தரம் அதிகமாகவும் இருக்க வேண்டும்..


பிறகு அதை மக்கள் வாங்க தொடங்க வேண்டும்..


இப்படி ஒவ்வொரு பொருளும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வியாபாரம் செய்யப்படும்போது தான்..


நாம் தன்னிறைவு அடைவோம் 


ஆனால் அதற்கு 20 ஆண்டுகள் வரை ஆகும்..


அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும்..


குறைந்தது கதர் ஆடைகளை வாங்க வேண்டும் உடுத்த வேண்டும்..


ஆனால் நிஜத்தில் 


எந்த கூட்டுறவு கைத்தறி விற்பனையாகத்திலும் யாரும் வாங்குவதில்லை அங்குள்ள ஆடைகள் எல்லாம் மடிப்பில் கறை படியுமளவுக்கு வியபரத்திற்காக காத்துகிடக்கின்றன..


அதையும் வாங்கி பயன்படுத்தும் நபர்களில் நானும் ஒருவன் என்பதால் சொல்கிறேன்.


தன்னிறைவுக்கும் நமக்கும் தொடர்பே இல்லை..


அது ஒவ்வொரு தனி மனித முயற்சியில் இருந்து தொடங்குகிற செயல்.


#Tamilnadu #India

No comments:

Post a Comment