Truth Never Fails

Thursday, June 4, 2020

மாற்றி பேசும் மனிதர்கள்

 நான் கண்ட ஒரு காட்சியை மட்டும் சொல்லுறேன் அதை அப்படியே ஒரு குறும்படம் அல்லது திரைப்படத்தில் வைத்தால் சிறப்பு : 


ஒரு சந்தர்ப்பவாத நபர்


 இஸ்லாமியரை பார்க்கும்போது : பாய் மட்டுமில்லைன்னா நான் அவ்வளவு தான்.. எனக்கு வேலை கொடுத்ததே பாய் தான் என்று இஸ்லாமியரை புகழ்ந்து பேசுவார்.


ஒரு கிறிஸ்துவரை பார்க்கும்போது : 


நீங்க கிறிஸ்டியானா இருந்தாலும்  நம்ம இரண்டு பேரும் ஒரே சாதி தான்.என்ன மதம் தான் வேற வேற ஆனா நமக்குள்ள ஒரே ரத்தம் தான் ஓடுது..


ஒரு பட்டியல் இனத்தவரை பார்க்கும்போது :


நாமெல்லாம் ஹிந்து ஒரே நாடு இந்த பாய் கிறிஸ்டியான் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வந்தவனுங்க.. நாம எல்லாம் ஒண்ணா இருந்தா நல்லா இருக்கும் , இவனுங்களுட பொருள் வாங்க கூடாது..


தன் சாதி சங்கத்தில் :


உறவுகளே நாம மத்த பயலுங்க கூட கூட்டு வச்சிக்க கூடாது, வருவானுங்க பேசுவானுங்க அதோட முடிச்சிக்கணும்.. பிறகு வழக்கம்போல நம்ம வீட்டு பெண்களை நம்ம பசங்களுக்கு மட்டும் தான் கட்டி வைக்கணும், ஒருவேளை அவனுங்க கட்டுனா வெட்டனும்..


÷÷÷÷÷÷÷÷÷÷


இப்படி ஒரு நபர் தான் தன் ஒரே நாக்கை வைத்துக்கொண்டு தன் சந்தர்பத்திற்கு ஏற்றார் போல மாற்றி மாற்றி பேசுகிறார்.


இப்படி பேசுபவர்கள் இனி பிழைக்க கூடாது 

நூல் அறுந்து போகணும்


#caste #Religion 


இதை ஒரு திரைப்படத்தில் உங்கள் கற்பனை கலந்து காட்சியாக வைத்தால் நல்லது.


No copyrights.


Krishna Kumar G


No comments:

Post a Comment