எலும்புகள் தூள் தூளாக உடைந்தால் வலி எப்படி இருக்கும் ?
பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு தான் இருக்கும்..
உடனே வீக்கம் கொண்டு அந்த இடம் ஒருவகையான அழுத்தத்தில் இருக்கும்..
வலி இருக்கும் ஆனால் குறைவாக இருக்கும்..
ஆனால் சிகிச்சைக்கு பிறகு தான்
பிரச்சனை..
எனது கைகளில் drill செய்து கம்பிகள் வைத்திருந்தார்கள்
Drill செய்த்தபோது மயக்கத்தில் இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை..
ஆனால் 50 நாட்கள் அந்த கம்பிகளுடன் பட்ட வேதனை மிக பெரியது..
கம்பி எதிலும் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..
சிகிச்சை முடிந்து கம்பியை வெளியே எடுக்கும்பொழுது மயக்க மருந்து தரமாட்டார்கள்..
முதல் கம்பியை எலும்புகளில் இருந்து பிடிங்கியபொழுது..
என் பின் கழுத்தில் உள்ள நரம்புகள் துடிக்க தொடங்கியது..
அதுதான் உச்சகட்ட வலி..
உடனே அடுத்த கம்பியை பிடுங்கிட வந்தவரிடம் எனக்கு ஒரு 5 நிமிடம் நேரம் கொடுங்க என்று கேட்க..
அவர் பொருக்கவே இல்லை
அதே வலியோடு இன்னொரு கம்பியை பிடுங்கி எடுத்தார்..
நிறைய தண்ணீர் குடித்துவிட்டு தான் அந்த அறைக்குள் வந்தேன்
ஆனால் உச்சகட்ட வலியால்
தண்ணீர் தாகமே எடுத்துவிட்டது..
அதைத்தாண்டி மீதமிருந்த கம்பிகளை பிடுங்கி எடுத்தார்..
நான் எனக்கு அடுத்து ஒருவர்
20 கம்பிகளுடன் படுத்துகிடைந்தார்..
அவரை எண்ணிப்பார்த்தேன்..
×÷××÷
விபத்துக்கள் கொடூரமான வலிகளை (வழிகளை) விட்டு செல்கிறது..
அதை தாண்டி வருவது மிக கடினம்..
இதுதான் Reality ..
#Accident

No comments:
Post a Comment