Truth Never Fails

Wednesday, November 20, 2019

Art in religion

கோவில் காம சிற்ப சிலைகளை இன்றைய ஹிந்து மதத்துடன் ஒப்பிடுவது தவறு அது சிற்ப கலை மட்டுமே மதமல்ல.

அது அடுத்த தலைமுறைக்கான ஒரு தொடர்பியல் பாடம்,
வான சாஸ்திரங்களையும்,
சித்தர் பாடல்களையும் நாம் ஆராய வேண்டுமே தவிர அதை ஒரு மதத்தின் கீழ் வைத்து சுருக்கிவிட கூடாது..

ஹிந்து மதம் என்பது பல மதங்களின் கலவை..

Brahmanism பிராமணிய மதத்துடன் பல மதங்களை இணைத்து ஹிந்து மதம் உருவாக்கப்பட்டதால்..
பல முரண்பாடுகள் நிலவுகிறது..

ஒருகாலத்தில் பிராமணிய மதம் என்கிற ஒன்று தனியாகவே இயங்கியது..
(இதை யாரும் மறுக்க முடியாது)

இதில் சனாதன தர்மம் என்பது பிராமணிய மதத்தின் வழி தோன்றலே..
அதை அனைத்து ஹிந்து மதத்தினரும் பின்பற்ற வேண்டியதில்லை..

ஆனால் ஏதோ ஒரு காலத்தில் சட்டத்தை அதுபோல் வடித்து..
ஒரே மதமாக செய்து இருக்கிறார்கள்.

ஹிந்து மதம் ஒரே மதம் அது சனாதன வர்ணாசிரம அடிப்படையில் மட்டுமே இயங்குவதாக பலர் எண்ணுகிறார்கள்..

Do some research

அண்மையில்
லிங்கியாத் என்கிற மதம் இந்த பிராமணிய கொள்கையை உதறி தள்ளி பிரிந்ததை நாம் அறியலாம்..
(இங்கு வர்ணாசிரம முறை கிடையாது)

வடலூர் சுத்த சைவ சன்மார்க்க மதமும் அப்படியே..
அங்கு சனாதன தர்ம முறையும் கிடையாது..
மற்றும் வர்ணாசிரம முறையும் கிடையாது.

ஆனால் அதையும் ஹிந்து மதத்துடன் இணைத்து வைத்துள்ளார்கள்..

காரணம் Hindu is a group of Religions

இதை சரியாக புரிந்துகொள்ளாமையால் பலர் தவறாக பேச கூடும்..

அது அவர்களது அறியாமையாக இருக்கலாம் அல்லது அரசியலாக இருக்கலாம்..

(Indigenous groups had many Gods , Even they're brought under a single large umbrella called Hindu)

Whatever else but the Dominant ruling group in Group of hindu Religions is Brahmanism .

So Varnasarama became a wide practice ..
According to their system ..
Which makes and keeps them dominant over the religious system.

இதைப்பற்றி பேசுவது எந்த வகையிலும் தவறு கிடையாது..

இதை எப்படி அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது என்கிற கட்டமைப்பை உருவாக்க இன்றைய ஹிந்துத்துவா அரசியல் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது..

பொய் வன்முறை என அவர்கள் செய்யும் அட்டகாசம் மக்களை சிந்திக்கவிடாமல் செய்கிறது..

#caste #religion

சிற்ப கலைகள் ஹிந்து மதத்தின் கீழ் இருப்பதால் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை..
அதை கலையாகவும் கல்வியாகவும் பார்க்க முயலுங்கள்..

அரசர்கள் அரிதான விஷயங்களை மதத்தின் ஊடாக கோவிலுக்குள் வைத்தால் தலைமுறைகள் கடந்தும் நிற்கும் என கருதி வைத்துள்ளார்கள்..

அதற்கும் மதத்திற்கும் நேரடி தொடர்பே கிடையாது..
என்பதே உண்மை..

(குறிப்பாக சிற்பக்கலைக்கும் பார்ப்பனிய மதத்திற்கும் நேரடி தொடர்பே கிடையாது,அது ஒவ்வொரு அரசர்களின் எண்ணமும் சிற்பிகளின் கைவண்ணமுமே ஆகும்)

Post is a continuation and will continue..

Krishna Kumar G

No comments:

Post a Comment