Truth Never Fails

Friday, September 13, 2019

முடிவு என்றாலே புது தொடக்கம் இருக்கும் : பொருளாதாரம்

 Global financial crisis recession 2008 உலகம் முழுவதும் பொருளாதார சரிவில் இருக்கும்போது சில நாடுகளுடன் இந்தியாவும் தப்பித்தது அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது..அதில் ஒன்று..


உள்ளூர் வர்த்தகம் இந்தியாவை தாங்கிப்பிடிப்பதாக சொல்லப்பட்டது..


தற்போது அந்த உள்ளூர் வர்த்தகம் எங்கு சென்றது என்று கேட்க வேண்டாம்.


அது பணமதிப்பிழப்பில் அழிந்துவிட்டது என்று கூட சொல்லலாம்..


அல்லது மக்கள் சிறு வியாபாரிகளிடம் வாங்குவதில்லை என்றும் சொல்லலாம்..

(பெட்டி கடையில் சிகரெட் வாங்குவதல்ல உள்ளூர் விவசாய பொருட்களை வாங்குவது)


இது மட்டும் காரணமல்ல


 தற்போது நடப்பது 

நான் என்னும் அகங்காரத்தால் ஏற்படும் பொருளாதார சரிவு..


அதாவது 2008ல் உலக பொருளாதார சரிவில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளில் அந்தந்த நாடுகள் மீண்டதாக வைத்துக்கொள்வோம் .. (அமெரிக்க ,ரஷ்யா) 


2018ல் உலக வர்த்தகத்தை கைப்பற்றும் போட்டி தொடங்குகிறது 


வர்த்தக போர்..

ஈகோ அல்லது நான் என்னும் அகங்காரம்..


உலக வர்த்தகத்தை தன் கைக்குள் வைக்க துடிக்கும் நாடுகளின் போட்டி


(இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய தன் அடிப்படை பொருளாதாரத்தில் கை வைத்து இருந்தது சீர்திருத்தம் என்கிற பெயரில் அது பணமதிப்பிழப்பு,GST )


சிரியா போரில் பெரும் எண்ணெய் வளங்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் கைப்பற்றி தங்கள் வசம் இருப்பில் வைத்துக்கொண்டனர்..


அருகில் உள்ள ஈரானிடமும் எண்ணெய் வாங்கவும் தடை போட்டார்கள்..


இது ஒரு பக்கம் இருக்கட்டும்..


பெரும் வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் இருந்து யூரோவுக்கும் யுவானுக்கும் மாற்றினார்கள்..


அமெரிக்க டாலரை ஐரோப்பா ஆசியா முழுவதும் செயலிழக்க செய்தார்கள் 

(ரஷ்யா ,சீனா)


இப்படியான வர்த்தக போர் உச்சத்திலும் நாம் அனைத்து நாடுகளிடமும் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தோம்..

(நாம் அவர்களை காப்பாற்றிக்கொண்டு இருந்தோம்,ஆயுதங்கள் முதல் அனைத்தையும் அவர்களிடம் வாங்கி)


Make in India சீனாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட செல்போன்களை இங்கேயே தயாரிக்க வாசல் திறந்தோம்..

(அதுவும் பெரிதாக பயனளிக்கவில்லை)


இங்கு புதிய கண்டுபிடிப்புகள் கிடையாது..

இருந்தாலும் அது ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்காக கண்டுபிடிக்கிறார்கள்..


அப்படி கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் அல்லது பொருட்கள் இங்கு make in india கீழ் உற்பத்தி செய்யப்பட்டு இங்கையே விற்கப்படுகிறது....

அதன் லாபம் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறது..


இப்படி அனைத்து பக்கமும் கப்பலில் ஓட்டை விழுந்து முழுகிக்கொண்டு இருக்கிறது 

இது நாம் போட்ட ஓட்டையா (விட்ட கோட்டையா) 

அல்லது வர்த்தக போரில் அனைத்து நாடுகளும்

சேர்ந்து நமக்கு போட்ட மொட்டையா (ஓட்டையா)

(நம்மை வைத்து ரஷ்யா,சீனா,அமெரிக்கா தப்பித்துள்ளது)


என்று ஆராய நேரமில்லை..


இந்திய பொருளாதார கப்பல் முழுகிக்கொண்டு இருக்கிறது..


இதை India recession 2019 என்று வைத்துக்கொள்வோம்..


இதிலிருந்து நீந்தி கரையேறி தப்பிக்க நினைத்தாலும்..


இந்திய ஆட்சியாளர்களின் அகங்காரம் இங்கே விளையாடுகிறது..

இந்திய பொருளாதார கப்பல் முழுகவில்லை அனைத்தும் நன்றாகவே உள்ளது என்று சமாளிக்கிறார்கள்..


கப்பல் முழுகாமல் இருக்க தன் கையை வைத்து ஓட்டையை அடைத்துக்கொண்டு இருப்பவர்களையும் விரட்டிவிட தொடங்கி இருக்கிறார்கள்..


பொருளாதார கப்பல் வேகமாக முழுகுகிறது..

அதில் நாமும் இருக்கிறோம்..


நம்மை தப்பிக்கவும் விடாமல் ஏற்பட்ட ஓட்டையை அடைக்கவும் விடாமல் ஆட்சியாளர்கள் (கப்பலை ஓட்டுபவர்கள்) விளையாடுகிறார்கள்..


இந்த சூழலில் என்ன செய்வது என்று தெரியாமல் கப்பலில் உள்ள சில தொழில் அதிபர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..


இந்த அடக்குமுறை மேலும் நாட்டை பலவீனப்படுத்தும்..


என்னை கேட்டால் நட்பு நாடு என்கிற பெயரில் ரஷ்யா சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவை 130 கோடி மக்களை அவர்களின் வர்த்தக திறனால் வைத்து செய்துவிட்டார்கள்..


÷÷÷÷÷÷÷÷÷


இந்திய பொருளாதாரத்தின் முடிவு 2019


முடிவு என்றாலே புது தொடக்கம் இருக்கும்   அது தொடங்கி வளரும் வரை கடினமாக உழைக்க வேண்டும்..


புதிய பொருளாதார கப்பலை கட்ட வேண்டும்..


பழைய பொருளாதார சூத்திரங்களை கைவிட்டு ..


இந்த புதிய பொருளாதார கொள்கையை வகுக்க இந்தியாவில் உள்ள தகுதியான ஆட்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்..


இது காலத்தின் கட்டாயம்..


(Research and development in new Indian #Economy)


Krishna Kumar G

No comments:

Post a Comment