Truth Never Fails

Thursday, October 27, 2016

பாமரனின் பால் குடமும் அரசியலின் போலி பக்தியும்

திருவிழா காலங்களில் கோவில்களுக்கு பால் குடம் எடுக்க நாம் தான் காசு கொடுத்து ரசிது வாங்க வேண்டும் ,அதற்காக  புது குடம் வாங்க வேண்டும், 4-5 லிட்டர் பால் வாங்க வேண்டும் பூ மாலைகள் வாங்க வேண்டும் ..முடிந்தால் புது ஆடைகள் வாங்க வேண்டும் ..அப்படி இப்படி என்று சுமார் 2000 முதல் 5000 வரை செலவு வைத்து விடும்.
இதுவே அரசியல் கட்சி பால் குடம் என்றால்.இலவசமாக புது குடம் ,இலவசமாக புது ஆடை , கைல 500 முதல் 1000 ருபாய் துட்டு , இலவச சாமி தரிசனம்... அப்போ பாலு ?
பத்து குடம் தண்ணிக்கு அரை லிட்டர் பால் பாக்கெட்..போதும்.

மண் சோறு சாப்பிட்டால் அது தனி கணக்கு ..இதில் அடங்காது.

இது எதுக்கும் அடங்காது

Krishna Kumar G


Tuesday, October 25, 2016

Ignorance is Ignorant

Ignorance is bliss என்பார்கள்
அது தவறு என்று சொல்லவில்லை
நீங்கள் ignore செய்து விலகி இருக்கும் விசியங்கள்
சில நேரங்களில்
உங்களை தேடி வந்து பாதிக்கும்
அப்போது தெரியும்
Ignorance is Ignorant என்று

Krishna Kumar G


Sunday, October 16, 2016

Hey What Happened ? Are you all right ?

Hey What Happened ? Are you all right ?
இதுபோல் நம்மை கேட்க யாருமில்லையே
என்று நாம் ஏங்கும் வேளையில்.
{ Hey what hapnd ? r u alright ? (Y) }
இப்படி கேட்போரை பாரபட்சமின்றி வெறுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த மனம் எவ்வளவு கொடியதாய் இருக்கும்.
இல்லை ஒருவேளை அதுதான் நல்ல மனமாக இருக்குமோ.
இப்படி கேட்போரின் உள்நோக்கத்தை புரிந்து புறம் தள்ளி இருக்கக்கூடுமோ.
இதில் எது சரியோ என்பது இன்னும் தெரியவில்லை
அனால் அப்படி கேட்ட மனம் பல வழிகளில் பல வலிகளை கடந்து வந்து இருக்கும்
எதோ ஒரு ஆறுதல் தேடி வந்து , வந்த இடத்தில் தன்னிடம் மீதம் இருந்த ஆறுதலை தாராளாமாய் அள்ளி கொடுத்திருக்கும்.
அதை பெற அந்த மனம் மறுக்கவே..இந்த மனம் ஒடிந்து நொடிந்து போய் இருக்கும்.
ஆறுதல் தேடி அலையும் உலகில்
ஆறுதலை வெறுக்கும் மனங்களும்
இருக்கத்தான் செய்கிறது.
Krishna Kumar G


Saturday, October 1, 2016

தினம் தினம்

ஆமாம் எவ்வளவு வலை பின்னலான வார்த்தைகள் அந்த கடிதத்தில்... (அழைப்பிதழில்)
அந்த கிரிக்கெட் போட்டி நடக்கும்
கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றேன்
அங்கே கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாடிகொண்டிருப்பதாக.
அந்த மைதானத்தின் உரிமையாளர் மைதானத்தின் மத்தியில் நின்று விளக்கி கொண்டிருந்தார்,
அவரது விளக்கம் உண்மையாகவே அங்கு கிரிக்கெட் போட்டி நடப்பது போன்றே இருந்தது .
அந்த போட்டி முடிந்தவுடன் அவர் நீங்கள் தான் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு தரவேண்டும் என்று கேட்டுகொண்டார்..
யாருமில்லாத மைதானத்தில் யாருக்கு நான் பரிசளிப்பேன் என்று எனக்கு கேட்க்க தயக்கமாக இருந்தது...
இதுதான் நீங்கள் தர வேண்டிய பரிசு என்று வெறும் காற்றில் கை அசைத்து கொண்டிருந்தார்.
நானும் அதை வாங்குவதை போல் வாங்கி இல்லாத விளையாட்டு வீரர்களுக்கு காற்றை பரிசாக வழங்கி கொண்டிருந்தேன்..
பிறகு அங்கு நடந்த விளையாட்டு போட்டி பற்றி சிறப்பு உரை ஒன்றை ஒரு மணி நேரம் வாசித்தேன்..
யாருமில்லாத அரங்கில் பலத்த கர ஒலி எழுந்தது..
பிறகு மைதானத்தின் உரிமையாளர்..
என்னை வாழ்த்தி பேசி வழி அனுப்பி வைத்தார்..
மைதனைத்தை விட்டு வெளியே வந்து காரில் ஏறும் முன்பு
காருக்கு அருகில் கல்வெட்டுடன் அவருக்கு நினைவு தூண் ஒன்று வைக்கப்பட்டிருந்த்தை கண்டேன்..
அவரும் மிக அமைதியானவர் என்று புரிந்து கொண்டேன்.
அந்த மைதானம், அங்கு நடந்த கிரிக்கெட் போட்டி, விளையாடிய வீரர்கள் , அந்த மைதானத்தின் உரிமையாளர், அரங்கில் கை தட்டியவர்கள் என்று அனைவரையும் நினைத்து கொண்டே காரில் வீடு வந்தேன்.
வீட்டில் நுழைந்ததும் வாசல் எதிரே
என் புகைப்படத்தில் யாரோ மாலை அணிவித்திருந்தார்கள் .
வீட்டில் கிடந்த செய்திதாளில் நான் 'கிரிக்கெட் போட்டிக்கு பரிசளிக்க சென்றவர் கார் விபத்தில் பலி' என்று நசுங்கிய என் காரின் புகைப்பட்டம் அதில் பதியப்பட்டு இருந்தது .
இந்த ஒரே செய்தியை தினமும் கிரிக்கெட் போட்டிக்கு சென்று பரிசளித்து விட்டு வீடு திரும்பிய பின் 33 ஆண்டுகளாக படித்து வருகிறேன்.



இளைஞர்கள் எழுச்சியை நோக்கி : பத்திரிகை கருத்து சுதந்திரம்

இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளில்
அந்த நாட்டு பிரதமர் பற்றி அங்குள்ள பத்திரிக்கைகள் தாறுமாறாக எழுதுவார்கள்... கேலி சித்திரம் போட்டு மிக கேவலமாக (ஆபாசமாக) கிண்டல் அடிப்பார்கள்..
இதை எல்லாம் அந்த நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்..
ஏன் என்று கேட்டால் அது பத்திரிகை சுதந்திரம் என்பார்கள்..
நம் நாட்டில் கூட வடஇந்தியாவில் ஓரளவு பத்திரிக்கைகள் சுதந்திரமாக இருக்கிறது..
இங்குதான் பிரச்சனையே...
தமிழகத்தில் பத்திரிக்கைகளை பெரும்பாலும் அரசியல்வாதிகள் நடத்துகிறார்கள்
ஆகவே இவர்களுக்கென்று தனியாக ஒரு தர்மத்தை பேணி காப்பதாக அவர்களே எண்ணுகிறார்கள்.
இன்று அவர்கள் சார்ந்த இருக்கும் எதோ ஒரு பத்திர்க்கையில் ஒரு செய்தியை வர செய்துவிட்டு நாளை அந்த செய்தியயையே மேற்கோள் காட்டி அறிக்கை என்னும் வடிவில் தன் கருத்தை மறைமுகமாக நாசுக்காக சொல்கிறார்கள்.
தன் கருத்தை நேரடியாக சொல்ல தைரியம் இல்லாதவர்கள், பத்திரிகைகள் மூலம் பேசிக்கொள்கிறார்கள்.
ஏன் இவர்கள் தங்கள் கருத்தை நேரடியாக சொல்வதில்லை..
ஏன் பத்திரிக்கைகளும் சுதந்திரமாக செயல் படுவதில்லை..
இதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது..
இதில் முக்கியமானது , ஆளும் அரசுக்கு எதிராக செயல் படுபவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவது , அராஜகத்தின் மூலம் அடக்குவது, வாய் திறந்து பேசுபவர்களை ஒடுக்குவது என்று பல்வேறு ஒட்டுக்குமுறைகளை கையாளுகிறார்கள்.
தொடரும்... ..