75th independence
குற்ற பரம்பரையாக சித்தரிக்கப்படும் பட்டியலினதவர்கள் :
இதை கல்லூரி படிக்கும்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது..
நான் ஒருவகையில் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டபோது ..
நான் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று நினைத்தேன்..
இல்லை அங்குள்ள 5 புலத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் அனைவரும் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக கண்டுபிடிக்க..
அப்பொழுது அதை வைத்து ஒரு அரசியல் நடந்தது..
அங்கு யோசிக்க தொடங்கியது..
இது பள்ளி காலத்தில் இருந்தே இது நமக்கு மறைமுகமாக நடக்கிறது என்பதை உணர்ந்தேன்..
÷÷÷÷÷÷
உதாரணங்கள்..
யாரையாவது 4 நபர்களை fail போடுங்க என்றால் ..
ஒரு ஆசிரியர் முதலில் தேர்ந்தெடுப்பது பட்டியலின மாணவரை...
ஒரு 4 நபர்களை சிறையில் போடுங்க என்றால் ஒரு காவல் அதிகாரி முதலில் தேர்ந்தெடுப்பது பட்டியலின நபர்களை..
இப்படி எவ்வளவு ஆண்டுகாலம் நடந்து இருக்கும் என்று எடுத்துக்கொண்டால்..
இது 1000 ஆண்டுகள் கூட நடந்து இருக்கும்..
ஆனால் நான் எடுத்துக்கொண்ட காலம் இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு வெள்ளைக்காரன் சென்ற பிறகு..
75 ஆண்டுகாலம் கேள்விகள் கேட்க யாருமின்றி இது நடந்தது கொண்டே இருக்கிறது..
தற்போதைய கள்ளக்குறிச்சி கலவரம் வரை..
யாரை கைது செய்வது என தெரியாதபோது..
பட்டியலினத்தை சார்ந்தவர்களை கைது செய்கிறார்கள்..
தற்போதைய..
குற்ற பரம்பரையாக மறைமுகமாக சித்தரிக்கப்படுவது..
பட்டியலினதவர்கள்..
இது பொது புத்தியில் பதிய வைக்கபட்டுள்ளது...
÷÷÷÷÷÷÷÷
இதை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்...
என்றாவது ஒரு நாள்
அதிகாரம் என் வீட்டு வாசல் கதவை தட்டும்..
அன்று இது பொது புத்தியில் இருந்து அழிக்கப்படும்....
அம்பேத்கர் சொன்னது..
Annihilate Caste
But
I will
Annihilate Castiest