Truth Never Fails

Thursday, March 26, 2020

கோரோணாசிரமம் (கொரோணாசிரமம்)


நெற்றியில் பிறந்தோம் எங்களை தாக்காதே
தோள்களில் பிறந்தோம் எங்களை தாக்காதே
தொடையில் பிறந்தோம் எங்களை தாக்காதே
பாதத்தில் பிறந்தோம் எங்களை தாக்காதே

யோனி வழியாக பிறந்தவர்களை மட்டுமே தாக்கு
என்று மாற்றிவிட்டார்கள் போல

அதான் யோனியில் பிறந்தவர்களை தாக்குகிறது கோரோனா ..

நல்லவேளை நெற்றியில்,தோள்களில்,தொடைகளில்,பாதங்களில்
பிறந்தவர்கள் தப்பித்துவிட்டார்கள்..

வர்ணாசிரமம் தப்பித்தது கோரோணாசிரமத்தால்

நல்லவேளை நீங்கள் யோனி வழியாக பிறக்கவில்லை
அறிவியல் சொல்லியபடி

#caste #religion shuts door
Stays at home

#COVID_19 வஞ்சப்புகழ்ச்சி

Krishna Kumar G

Tuesday, March 24, 2020

Choking issue becomes Joking : Accident and Hospitalised

After bike accident had multiple fractures in right face skull broken eye lashes torn lost vision multiple fracture in left hand wrist face disfigured and
I was admitted in hospital May 6 2019
Had Face plastic surgery

After surgery






அறுவைசிகிச்சை முடிந்து ஒரு பெண் மருத்துவர் அறுவை சிகிச்சை அறையின் வெளியே என்னை எழுப்பிக்கொண்டு இருந்தார் , எழுந்ததும்.. பேச கூடாது என்றார்..
அப்பொழுது
எனக்கு மூச்சு விடமுடியவில்லை..
தொண்டை வழியாக நீர் இறங்குவதுபோல் இருந்தது..

அதை சொல்லலாம் என்று சொல்ல முயன்றேன் வாயை திறக்க முடியவில்லை..

எப்படியோ அவரை அழைத்து சொல்ல முயன்றேன்..
அவர் பேச கூடாது என்று மறுபடியும் சொன்னார்..
சரி கையால் சைகை காட்டுவோம் என்று கையை தூக்கினேன் தூக்க முடியவில்லை..
எடை அதிகமாக இருப்பதைப்போல் இருந்தது
ஏதோ கம்பிகள் என் கையில் இருப்பதைப்போல் இருந்தது..
(Steel rods)

தொண்டையில் நீர் இறங்கிக்கொண்டு இருந்தது.. (தாடை மற்றும் வாய் வழியாக முகத்தில் அறுவைசிகிச்சை செய்து இருந்தார்கள்)
அவரிடம்  மூச்சு விட முடியவில்லை என்று சொன்னேன்..
அவர் என்னது என்னது என்று பலமுறை கேட்டார் நானும் பலமுறை சொன்னேன் அவருக்கு புரியவில்லை..

சரி ஆங்கிலத்தில் சொல்வோம் என்று Choking Choking
என்றேன்..

என்னது Jokeகா இருக்கா என்றார்
என்ன சொல்ல சொல்ல கேட்க்காம பேசிக்கிட்டே இருக்க என கோபப்பட்டார்.

என்னால் முடியவில்லை..
சளிப்பாகிவிட்டது
கண்களை இறுக மூடிக்கொண்டேன்..

அமைதியாக தியான நிலைக்கு செல்வோம் என..

மூச்சை கட்டுப்படுத்த தொடங்கினேன்..

என் தம்பியை அழைத்தார்கள்..
அவன் வந்ததும் அவனிடமும்  Choking என்று சொன்னேன்..
அவனுக்கும் புரியவில்லை..

அன்று இரவு
எப்படியாவது தூங்கிவிட மாட்டேனா என்று ஒரு பெரும் போராட்டத்தையே நடத்திக்கொண்டு இருந்தேன்..

தூங்கிய பிறகே..
சரியானது

அன்று மட்டுமல்ல
இன்று வரை
நான் சொல்வதை யாரும் சரியாக புரிந்துகொள்வதில்லை..

Choking matter becomes Joking

#life #blog

Krishna Kumar G

Epidemic Pandemic Preparedness Law and Guidelines


கலவர காலங்களில் கடைபிடிக்கப்படும் 144 சட்டம் போல் இல்லாமல் தற்போது பரவியுள்ள கொள்ளை நோய்களுக்கென்று தனி ஊரடங்கு/வழிகாட்டுதல் சட்டம் தேவைப்படுகிறது.
இதை வகுக்க நாம் தவறி இருக்கிறோம்..

Lesson 1 (Learnt from this #COVID_19 situation)
Epidemic #Pandemic Curfew/preparedness Law
Indian #CRPC  #IPC

இதுபோன்ற சூழலில்
ஒரு மருத்துவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
ஒரு தூய்மை பணியாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
ஒரு காவல்துறை அதிகாரி எப்படி நடந்துகொள்ள வேண்டும்
பொது மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்கிற வழிகாட்டுதலை வகுக்க வேண்டும்..
(பிறகு வருகிற தவறுகளை சீர் செய்ய Amendment வகுத்துக்கொள்ளலாம்)

இந்த பழைய ஊரடங்கு 144 சட்டம்
கொள்ளை நோய் பரவும் சூழலில் சரிப்பட்டு வராது
என்பது என் கருத்து..

புது சட்டம் தேவை..


The Epidemic Diseases Act of 1897 (British act is dead)

Pandemic preparedness Act (US have this)

India needs new law for epidemic and pandemic
I've pointed out this
And I'm ready to draft this law or guidelines

#Law #India #Tamilnadu #Governance #COVID_19
Krishna Kumar G