மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருந்தால் இந்நேரம் குஜராத் பட்டேல், மராட்டிய மராதா சாதிகளுக்கு இட ஒதுக்கீடு கொடுத்திருக்க வேண்டும்..
இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட சாதிகளுக்கு கொடுக்கப்பட்டவை..
இதில் மத சிறுபான்மையின மக்களும் அடக்கம்..
அவ் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் சதவிகிதம் முறையில் கொடுக்கப்படுகிறது..
மாறாக நாங்கள் ஆண்ட பரம்பரை நாங்கள் மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறோம் என்பதற்காக இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவது கிடையாது..
உங்கள் ஆணவத்தால் உரிமை மறுக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு மூலம் உரிமையை பெறவே இட ஒதுக்கீடு.
இதை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்..
இதை அரசியல் லாபத்திற்காக
தவறாக பயன்படுத்தியுள்ளனர்..
மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் பட்சத்தில்..
பிராமணர்களும் 3% இட ஒதுக்கீடு பெற உரிமையுள்ளவர்கள் என்றாகிவிடும்..
இது மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்படுவதில்லை..
உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் இட ஒதுக்கீடு.
இப்படி தான் உச்ச நீதிமன்றம் பார்க்கும்..
#caste #blog #Reservation
Krishna Kumar G