Truth Never Fails
Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Tuesday, October 28, 2025

ஆட்சி அதிகாரமே இலக்கு

 அரசியல் : 

ஒரு சின்ன கதை சொல்றேன் 

2012

நான் வீடு கட்டும்போது காட்டுவேலை பார்த்தவர் என் அம்மா ஊர்

எலக்ட்ரிக் வேலை பார்த்தவர் என் அப்பா ஊர்

அவர்கள் இருவருக்கும் தெரியாது நான் அந்த ஊர் என்று


இறுதி நிலையில் நான் சொன்னேன்..


அவர்களுக்கு அதிர்ச்சி 


காரணம் ஒரு காலத்தில் என் முன்னோர்கள் அவர்களிடம் கூலியாக வேலை பார்த்தவர்கள்

ஊருக்கு ஓரமாக வாழ்பவர்கள்


இன்று இவர்கள் என் வீட்டில் கூலிகளாக


இவர்கள் நகரத்தில் ஊரில் யாருக்கும் தெரியாமல் வேலை பார்க்கலாம் என வந்து என்னிடம் மாட்டிக்கொண்டார்கள்..


நான் யார் என தெரிந்த பிறகு அவர்கள் வேலையை காட்டினார்கள்

அது வேற கதை..


நான் சொல்ல வருவது..


பணத்தை வைத்து நம்மை மதிக்கதவனை கூட வேலை வாங்க முடியும்.


அரசு பதவிகளை வைத்து அதிகாரியாக முடியும்.


அரசியல் அதிகாரம் பெற்றால் தான் ஆட்சி செய்ய முடியும்.


இதுவரை அரசியல் அதிகாரம் பெறவில்லை


உழைத்ததால் பணம் கிடைத்தது

படித்ததால் அரசு பதவி கிடைத்தது.


எதை செய்தும் அரசியலில் ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை.


அதை அடைந்தால் தான்

ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்


ஆட்சி அதிகாரம் அடைவதே இலக்கு

Friday, March 14, 2025

திமுக பாஜக உடன் ரகசிய கூட்டு

 அரசியல் : பாஜக திமுக இணைந்து செயல்படுகிறார்கள்


தினம் ஒரு அறிவிப்பும் எதிர்ப்பும்


மாற்றி மாற்றி ஒத்து ஒலித்து கொள்கிறார்கள் 

 

இதன்மூலம் பிறருக்கு இடம்கொடாமல் வண்டியை இசைந்து ஓட்டுகிறார்கள்..


எதிர்காலத்தில் நம் இருவர் பின்னால் தான் மற்றவர்கள் வந்தாக வேண்டும் என்று சொல்லி வைத்து செய்வதைபோல உள்ளது.


இது அதிமுக இடத்தை பாஜக கைப்பற்றும் முயற்சி யாகும்.


3வது அணி அமைப்போம்..




Sunday, January 12, 2025

அரசாணை எழுது சட்டம் எழுது அதிகாரத்தால்

 பட்டியல் பிரிவில் பிறந்து அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டி போடுவது மிக பெரிய விசியம்..


அப்படி போட்டியிட்டு கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிபெற்றும் 


ஆட்சியில் அதிகாரம் பெறாமல் இருப்பது தவறு.


அடுத்தவரை வாழ வைப்பது 

பட்டியல் பிரிவு மக்களுக்கு மிக பெரிய துரோகம் ஆகும்.


கடந்த 25 ஆண்டுகளாக அடுத்தவரை ஆட்சியில் அமர வைத்து வேடிக்கை பார்க்கும் மக்கள்


ஆட்சி அதிகாரத்துக்கு இந்த 2025 ம் ஆண்டே வர வேண்டும்.


இல்லையேல் தேர்தலில் நிற்பதே வீண்.


அடிமைத்தனத்தை உடைக்க ஆட்சி அதிகாரம் தான் முக்கியம்..


எவன் ஆட்சி கவிழ்ந்தால் நமக்கு என்ன 

நமக்கு ஆட்சி தான் முக்கியம்

நம் எழுதுகோல் GO களில் கையொப்பம் போட வேண்டாமா ?


குத்துபட்டு குருதி சிந்திய மக்கள் அரசு முத்திரை ரதத்தில் செல்ல வேண்டாமா..?


அதிகாரத்தை அடைய ஆசைப்படு

ஆயிரம் காலத்து தடைகளை உடைத்து எறி

Thursday, January 9, 2025

நடிகர் முதல் நாடாளுமன்றம் வரை

 MP & MLA posts are becoming Honorary titles for legal heirs.


வாரிசுகளின் கவுரவ பதவியாக மாறிய MP & MLA பதவிகள்


Nepotism at its peak

Thursday, December 5, 2024

அனைவரும் ஆட்சி செய்ய தகுதி பெற்றவர்கள்

 பனைமரம் ஏறுபவர் மந்திரி ஆகனும்

ஆடு மெப்பவர் மந்திரி ஆகனும்

அதுதான் உண்மையான ஜனநாயகம்


CA படித்தவரை கால்நடை துறை அமைச்சராக போடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை

அவர் ஆடு மாடுகளை எண்ணிக்கொண்டு இருப்பார்.


சுற்றுச்சூழல் பாதுக்காக்க படனும்னா மண்ணோடும் வளத்தோடும் தொடர்புடையவர்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்.


எனக்கு தனிப்பட்ட முறையில் ஜனநாயகத்தில் உடன்பாடு கிடையாது ஆனால் இங்கு ஜனநாயகம் என்று ஒன்று இருப்பதால் இதை சொல்கிறேன்.


Level to level சமன் படுத்தனும் பண்ணனும் அது கல்வி ரீதியாகவும் அனுபவம் ரீதியாகவும்.

யாரையும் ஒதுக்கிவிட கூடாது

என்பதற்காக சொல்கிறேன்.

Thursday, November 21, 2024

சிவாஜியான அதானி

 அதானியிடம் 2000 கோடி அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியுள்ளார்கள் என்கிற விவரத்தை அமெரிக்கா புலனாய்வு அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.


2000 கோடி boss 2000 கோடி 

சிவாஜி படத்தில் ரூம் போட்டு லஞ்சம் வாங்குவார்கள் இல்லையா அதுபோல வாங்கியுள்ளார்கள் .


இது 10% 

அவர் கொள்ளை அடித்ததில்..


அப்போ இந்திய அரசு அதிகாரிகள் 10% லஞ்சம் வாங்குகிறார்கள்.

என்கிற விவரம் இதன்மூலம் தெரிய வருகிறது.


அப்போ அதானி சிவாஜியான்னு கேட்காதீங்க..

Saturday, September 14, 2024

Sweet Tax Happiness Tax

 பன்னுக்கு அசிங்கபட்ட தொழிலதிபர் இனி அடுத்த தனது முதலீடுகளை இந்தியாவில் செய்யமாட்டார் என்பது வருத்ததுக்குறிய விசியம்..

இதுதான் உங்களுக்கு புரியமாட்டிங்குது ஆணவம் முறையான ஆட்சி தராது.


அது சாதி ஆணவமாக இருக்கலாம் 

மத ஆணவமாக இருக்கலாம் 

அதிகார ஆணவமாக இருக்கலாம்

+++++++




இதை யோசிச்சி எழுதின IRS அதிகாரியை பார்க்க விரும்புகிறேன்..

எந்த பள்ளிக்கூடத்தில் படித்தார் என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.


பாருங்க 15% குடிமை பணி அதிகாரிகள் ஏற்கனவே தொழில் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


ஒரு கல்லூரி முடித்துவிட்டு 365 நாளும் குடிமை பணி தேர்வுக்கு மட்டுமே படித்தவர்களை தேர்வு செய்யாதீர்கள்..


குறைந்தது ஏதாவது வேலை அனுபவம் உள்ளவர்களாக பார்த்து தேர்வு செய்வும். .


விவசாய பணியாவது செய்திருக்க வேண்டும்

என்று புது விதியை எழுதுங்கள்.


எந்த வேலை அனுபவமே இல்லாதவர்களிடம் அதிகாரம் கொடுக்கபடுவதால் நிர்வாக திறன் எப்படி வரும் ?


வெறும் அதிகாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் ?


அரிசி விலை உயர்ந்துள்ளது

ஆனால்

கொள்முதல் விலை குறைத்துள்ளது


முலை வரியை விட கொடுமையான வரி இந்த

பன் கிரீம் வரி


உன் வாழ்வில் நீ இனிமையை சேர்த்தால் கூடுதல் வரி கட்ட வேண்டும் என்பது தான் இந்திய வரி அமைப்பின் நெடும் தொடர் நிகழ்வாக உள்ளது..


ஒரு தொழில் அதிபரை மன்னிப்பு கேட்க வைக்க உங்களால் முடியும்.


பொதுஜனம் துப்பிவிடும்


மக்கள் அன்புக்கு தான் அடிமையே தவிர

அதிகாரத்துக்கு அல்ல..


+++++++


ஒரு தொழில் அதிபர் தொழில் ரீதியாக சொல்லும் கருத்தை

தனக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்..


அதை முறையாக சரி செய்து

அவரே பாராட்டும் படியாக ஒரு நிகழ்வு அமைவது தானே சிறப்பாக இருக்கும்.


ஒரு தேர்தலில் கூட வெற்றிபெற வக்கில்லை 

மக்கள் அதிகாரம் உனக்கு எதற்கு ?


அந்த ஆளு தொழிலை பாதுகாக்க மன்னிப்பு கேட்கலாம்


நாட்டில் வாழ்பவன் அனைவரும் கேட்க மாட்டான்.


IT,ED RAID களில் சிக்கும் நபர்களை VC மூலம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வைத்தும் இந்த பெண் ரசிக்கிறார் என்கிற உண்மையையும் சொல்லி அமைகிறேன்..


EXAMPLE: முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர் கேட்டார் என்கிற தகவலும் என்னிடம் உண்டு அப்பொழுது அவர் ஒரு மாநில அமைச்சர்.


இந்த பெண் இதே பழக்கமாக உள்ளார்.


இது போன்ற பெண்களுக்கு வரலாற்றில் என்ன நிகழ்ந்தது என்று வரலாற்று புத்தக பக்கங்களை புரட்டி பார்க்கவும்.


++++++

GST மற்றும் வரி செலுத்துபவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என பெருமையாக சொல்லும் அமைச்சர் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என சொல்வதில்லை 


கடன் தொகை கூடி இருக்கலாம் ஆனால் கடன் பெறுபவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என சொல்வதில்லை


தொழில்கள் அதிகம் பதிவு செய்யப்படலாம்

ஆனால்

எவ்வளவு சீக்கிரத்தில் அது விற்கப்படுகிறது அல்லது மூடப்படுகிறது என சொல்வதில்லை..

GDP, Inflation, interest, bank fraud, scam பற்றி 

Finance ministry வெள்ளை அறிக்கை விட தயாரா ?


+++++




Tuesday, August 27, 2024

அதிகார பரவலுக்கு தடையாக அரசவை அதி பெருசுகள்

 ஒருத்தவன் வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் வாய்ப்பு கொடுங்க , 

நான் அதிகார பரவல் குறித்து சொல்லுறேன்.


நான் பெருசா சொல்வதை

ரஜினிகாந்த் சிறுசா பெருசுகளை பார்த்து சொல்லிவிட்டு சென்றார் 


ரஜினிகாந்த் அரிதாக தான் அரசியல் பேசுவார்

ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறுகள் உண்டு.


நாம உருண்டு புரண்டு சொன்ன தகவல்கள் மக்களிடம் சென்று சேராது

ஆனால் ரஜினி போன்றவர்கள் சொல்வது பட்டிதொட்டி வரை பேசு பொருளாக மாறும்.


86 வயதிலும் மாணவர் அணி என்று 

Old Students நினைப்பது 

பிழை


Advisors நிலை அடைந்து ஒதுங்கி விட வேண்டும்.


அரசியலில் 

அரைத்த மாவாக அரைத்த கதையை அரைத்து கொண்டே இருக்கிறார்கள்.


வாங்க டீ கடைக்கு பேசுவோம்

இல்லை சீட்டுகட்டு ஆடிகிட்டே கதைபோம்

சட்டமன்ற நாடாளுமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம்.


அரசியல்

Tuesday, June 11, 2024

Fire after fraudulent politics

 



Fire accidents in bjp offices

Fire accidents in income tax offices(Mumbai,Delhi)

Fire accidents in Minister offices 


Are common during their rule..

Seems they are destroying evidences


Fire accidents at party office

May contain evidence of election related papers. 


It's my assumptions





Sheeps under Fox plan

 In democratic nation you can tell any lie

Many will be ready to believe it..


Because people don't have time to analyse whether fox can be a vegetarian. 


They just believe the majority might be right.

Where they don't know each individual think the same.


That's why I don't believe in democracy

Democracy won't give equal rights and right leader to a nation.




Friday, June 7, 2024

கடுமையாகட்டும் கள அரசியல்

 .




அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை எதிர்கட்சி தலைவராக அறிவிக்கவும்.


இது தான் கடுமையான அரசியல். 


ராகுல் எதிர்கட்சி தலைவராக வர மோடிக்கு எளிமையாக இருக்கும் எதிர்கொள்ள.


சிறையில் இருந்து  ஒரு MP யாக இல்லாமல் எதிர்கட்சி தலைவராக செயல்படட்டும் .


சட்டத்தை எல்லாம் பக்கமும் வளைத்து பயன்படுத்துங்கள்.


அவரை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் மனைவியிடம் பதவியை கொடுக்க சொல்லுங்கள்.


வாக்கு அரசியல் ஆட்டம் மட்டும் பத்தாது


கள அரசியல் கடுமையாக இருக்க வேண்டும்.


அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை கண்டாலே குஜராத்திகள் நடுங்குவார்கள்.

Monday, May 27, 2024

புதிய இந்தியா உண்மையில் பிறக்க போகிறது

 அரசியல் : 

RSS தான் மோடியை தோற்கடித்து விட்டது இப்படி ஒரு சில காணொளி பேச்சாளர்கள் ஒரு புது agenda வை திணிக்கிறார்கள்.


Note this point : மக்கள் ஒன்று முடிவு செய்துவிட்டால் மாற்றவே முடியாது


இந்த திணிப்பு அரசியல் எடுபடாது..


ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் பாஜகவுக்கு சுன்னாபு தடவி அனுப்பி இருக்கிறார்கள் என்பதே உண்மை.


பாஜகவுக்கு RSS எதிரி என்பது சிவ சேனா MH வாக்கு வாங்க சொன்ன கதை..


++++++


மக்களிடம் பாஜக தான் எதிரி RSS இல்லை என்கிற திணிப்பு வேலை தான் இது.


மத அடிப்படை வாத குழுக்கள் எல்லாமே மக்களுக்கு எதிரி தான்.


அது தான் இந்த தேர்தலில் எதிரொலிக்க போகிறது..


இது தான் நான் போடும் புது பஜ்ஜி போண்டா அஜெண்டா 


இப்படி பேசுங்க ..


மக்கள் பாஜக தோல்வியை DIWALI போல கொண்டாட தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.


சர வெடி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்க போகிறது.

Sunday, May 26, 2024

சேமிப்பு கணிப்பில்

 பணமதிபிழபுக்கு பிறகு மக்கள் பணத்தை சேமிக்க கூடாது என்று ஒரு பொருளாதார வடிவமைப்பை வகுத்து வைத்துள்ளார்கள் (Economic pattern) 


அதையும் மீறி நீங்கள் பணத்தை சேமித்தால் 

வங்கியில் உங்கள் பணம் சும்மா இருந்தால் 

வங்கி உங்களுக்கு Risk notice அனுப்பும் 


நீங்கள் பணத்தை எதிலாவது முதலீடு செய்து இருக்க வேண்டும்

அல்லது பணத்தை செலவு செய்து இருக்க வேண்டும்


பணத்தை நாம் சும்மா சேமிக்க அரசு விரும்பவில்லை


RBI  - மக்கள் சேமிப்பு குறைந்து கடன் பெருகிவிட்டது என்கிறது


(இது முழுக்க முழுக்க என் கணிப்பு )

 


பலருக்கு வாங்கும் சம்பளம் சேமிக்கும் அளவுக்கு இல்லை

விலைவாசி உயர்ந்துள்ளது..


அதேபோல மக்கள் முதலீடும் செய்யவில்லை

மாறாக வீண் செலவு செய்து 

EMI மூலம் கடன் அதிகம் வாங்கியுள்ளார்கள் .


எதிர்காலத்தில் மக்கள் பணத்தை சேமிக்கும் பழக்கத்தில் இருந்து வெளியே வருவார்கள் என கருதுகிறேன்..


அது செலவாக இல்லாமல் முதலீடாக இருந்தால் நல்லது...


அல்லது வீண் GADGETS ஆடம்பர செலவாக இருந்தால் கெட்டது..


++++++++


என்னுடைய அரசியல் மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவதாக இருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்..


அதை நோக்கி தான் பல ஆண்டுகளாக பயணிக்கிறேன்.


ஊழல் ,சாதி வேறுபாடு ,மத வெறுப்பு பிரிவினைவாதம் ,போதை பொருட்கள் நடமாட்டம் எல்லாம் மக்கள் வாழ்வாதாரத்துக்கு எதிராக உள்ளது.


இன்னும் பல காரணிகள் இருந்தாலும் இவைகள் இந்தியாவில் பிரதானமாக உள்ளதை நான் பார்க்கிறேன்.


இவைகளை சீர் செய்தால் தான் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமையும்.


நம் கஷ்டம் நம்மோடு போகட்டும்

நல்ல எதிர்காலத்தை கட்டமைப்போம்


Friday, June 9, 2023

மத அடிப்படைவாதம் சந்தர்ப்பாவதிகள் கைகளில்

 புதுவகையான சந்தர்ப்பவாத ஹிந்துத்துவ வளர்ந்துள்ளது..


RSS VHP BJP நமக்கு தெரிந்தவை ..

இவர்களை விடுங்கள்..


புதிதாக சிலர் அரசியலுக்காக ஹிந்துத்துவாக மாறி வருகிறார்கள்.


இதன் மூலம் தங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என எண்ணுகிறார்கள்.


சமூக பாதுகாப்பு கிடைக்கும் என எண்ணுகிறார்கள்.


++++++


ஆனால் இவர்கள் மிக பெரிய ஆபத்தில் இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை.


++(((+++


உதாரணம் ;


தாங்கள் இருக்கும் பகுதியில்,நட்பு வட்டத்தில்,வேலை செய்யும் இடத்தில்,சமூக வலைதளத்தில் என இவர்கள் தங்களை ஒரு ஹிந்துத்துவாக காட்டுகிறார்கள்.


யாராவது ஒரு கிறிஸ்துவர் அல்லது இஸ்லாமியர் செல்கையில்..

கேலி செய்வது.

கேள்வி கேட்பது.

இவனுங்களால தான் பிரச்சினையே என்று சொல்வது என இது நீழ்கிறது.


பிரச்சனை எங்கே வரும் என்றால்.


அவர்கள் திரும்பி காட்டும்போது..

இவர்களுக்கு துணையாக அசல் ஹிந்துத்துவா இவர்களுக்கு துணை வராது என்பது குறிப்பிடத்தக்கது.


(இதில் வேடிக்கை என்னவென்றால் வழக்கம் போல பட்டியல் பிரிவு மக்களும் இதில் உள்ளார்கள்.. இவர்களை கோவில் உள்ளேயே விடாமல் இருப்பதே ஹிந்துத்துவா எழுப்பிய சாதி வெறி தான் என்பது இவர்களுக்கு புரியவில்லை.)


+++++++


இயல்பான இந்துவாக இருங்கள் ஹிந்துத்துவா என்பது அடிப்படைவாதம்..

FUNDAMENTALIST GROUPS .


உங்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லை..


பக்தியின் முதல் நிலையை கூட நீங்கள் அடையவில்லை..


புற இறையை தேடும் நீங்கள் 

ஆன்மீக எல்லையை கூட தொடவில்லை.


+++++++


உலகில் உள்ள எல்லா மதங்களையும் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்..


மதத்தை வைத்து அரசியல் செய்ய பழக வேண்டாம்.


மக்களின் அடிப்படை தேவையை வைத்து அரசியல் செய்ய பழகுங்கள்.


+++++++


என் கணிப்பு படி நீங்கள் அரசியல் அனாதையாவீர்கள்


உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.


இதே நிலை தான் 


பிற மத அடிப்படை வாதிகளுக்கும் நிகழும்.


++++++++


எல்லா மதத்திலும் மத குரு scammers இருப்பார்கள்..

(போலி மத குரு)


அவர்களை எதிர்க்க வேண்டும்

அப்பொழுது தான் மக்களை மூட நம்பிக்கையில் இருந்து காக்க முடியும் .


அவர்களை ஆதரிப்பதால் மதம் காக்கபடும் என நீங்கள் கருத வேண்டாம்.


அந்த மத குரு scammers களும் மதத்துக்குள் புகுந்து தப்பிக்க பார்ப்பார்கள்

(இதைப்பற்றி பிறகு விரிவாக சொல்கிறேன்)

 

அதே வேளையில் நீங்கள் பொது வெளியில் 

மத அடிப்படைவாதியாக காட்டிகொள்வதை நிறுத்துங்கள்..


நீங்கள் சந்தர்ப்பவாதி என ஒரிஜினல் மத அடிப்படைவாதிகளுக்கு தெளிவாக தெரியும் ! 


குண்டு சட்டிக்குள் நீங்கள் வாழ்வதை போல இது இருக்கும்.


மதத்தை ஆன்மீகத்தை சரியாக புரிந்துகொள்ள முயலுங்கள்.


அதற்கே உங்களுக்கு நேரம் இருக்காது.


++++++

Will be continued

Wednesday, May 31, 2023

Zonal procurement will give stability to zonal businesses

 உதாரணத்துக்கு தெற்கு ரெயில்வே என்றால் அதன் பகுதியில் உள்ள 

நல்ல உணவு வகைகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்..


Example :

ஆவின் ice cream வாங்கலாம்

அமுல் வாங்க தேவையில்லை.


இதன்மூலம் உள்ளூர் வர்த்தகம் வளரும்.


அமுல் ஐஸ் கிரீம் மேற்கு ரயில்வே வாங்கி கொள்ளட்டும் .


இது ஒரு உதாரணம் modus operandi தான்.


Zonal procurement for zonal operation


Friday, April 7, 2023

3ம் அணி தேவை

 Politics: 3ம் அணி சேர்வதை கலைத்த பாஜக .

பீஹார் மக்கள் அந்த மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு அரசியல் வாதிகளோடு கூட்டு வைத்தால் வாக்கு செலுத்தமாட்டார்கள் .


தமிழகத்தில் இருந்து ஊருக்கு திரும்பிய வேலை இல்லாத நபர்களை வைத்து

 மத கலவரம் செய்துவிட்டார்கள்.


+-------+


தெலுங்கானா சந்திர சேகர் பாஜகவுக்கு எதிராக அதிரடி காட்டி வருகிறார்

அவர் பின்னால் யாரும் வருவதில்லை


+++++++


நாம நாசுக்காக எதிர்த்து ஒரு போக்காக போவோம் என தமிழ்நாட்டில் ஸ்டாலின் செய்கிறார்..


இவருடன் இணைய சந்திரசேகர் வரமாட்டார்.


மம்த்தா தனி பாதையில் போகிறார்.


ராகுல் காந்தி காணாமல் போகிறார்


அரவிந்த் கெஜ்ரிவால் எதுக்கும் வரமாட்டார்.


+++++++


இதுக்கு தான் பெட்டியுடன் வாங்க என்று சொன்னேன்.


பாஜக 3ம் அணி சேர்வதை கலைக்கிறது என்றால்..

அதுதான் சூத்திரம்..

அதுதான் பாதை.


காங்கிரஸ் பின்னால் யாரும் செல்ல வேண்டாம்.


தனித்தனியாக கூட நில்லுங்கள்.


கண்டிப்பாக பாஜகவை வீழ்த்த முடியும்.


Hindenburg போல பல contentகள் வந்து இறங்கும் .


அது 3ம் அணியை உருவாக்கும். 


தற்பொழுது பாஜக வுக்கு கண்ணுக்கு தெரியாத எதிரியே

யார் என்று தெரியாத

3ம் அணி தான்  

Thursday, December 1, 2022

Two different civil servants on Tamilanadu politics 2022

 


சவுக்கு சங்கர் & பாஜக தலைவர் அண்ணாமலை :

இந்த இருவரிடமும் ஒரு சில ஒற்றுமைகளை நான் பார்க்கிறேன்.

அதாவது இவர்கள் இருவரும் ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று நான் சொல்லவில்லை..
இவர்களின் அரசியல் செயல்பாடுகளில் ஒருசில ஒற்றுமைகள் உள்ளதை நான் பார்க்கிறேன்.

++++++++

No doubt
இருவருமே முன்னாள் போலீஸ்காரர்கள்
முதல் ஒற்றுமை.

இருவருமே ஆர்வகொலாருகள் .

உளவு தகவல்களை வைத்து அரசியல் செய்யலாம் என எண்ணுபவர்கள்..

>>>>>>>>>=<<<<<<<<<<

Exclusive பதிவு என்பதால் காத்திருங்கள்
அல்லது கட்டணம் கட்டி முழு பதிவை வாட்ஸ் ஆப்பில் வாங்கிக்கொள்ளலாம்..
😁😂😂😂🤣😁
>>>>>>>=====<<<<<

சரி சொல்கிறேன்

Ground level politics
இருவருக்கும் தெரியவில்லை

இருவருமே வீடுவீடாக பூத் slip கொடுத்து
பூத்தில் அமர்ந்து வாக்கு பதிவை கண்காணித்து இருக்கமாட்டார்கள்.

தெரு தெருவாக போஸ்டர் ஒட்டி இருக்கமாட்டார்கள்.

ஒரு உள்ளாட்சி தேர்தலில்
வார்டு மெம்பர்
செய்யும் அரசியல் இவர்களுக்கு தெரியாது.

++++++

ஏதாவது அரசியல்வாதிகள் பேசுவதை கேட்டு இருப்பார்கள்.

அரசியல்வாதிக்கு பாதுகாப்பு கொடுத்து இருப்பார்கள்.

இருவருக்கும் அரசியல்வாதிகள் என்றாலே ஒரு கேவலமான பிம்பம் முன்பு இருந்திருக்கும்.

++++++++

Popularity யை வைத்து தேர்தலில் வென்று விடலாம் என நினைக்கிறார்கள்.

ஏதாவது சிறு காரணம் கிடைத்தாலும் அதை வைத்து பெரிய அரசியல் செய்யலாம் என நினைக்கிறார்கள்.

குறிப்பாக எதை வைத்து அரசியல் செய்யகூடாது என்பது இவர்களுக்கு தெரியவில்லை.


++++++++

இருவரையுமே பின்னால் இருந்து வேறு யாரோ இயக்குகிறார்கள்.

கையில் சர்ச்சைக்குரிய ஒரு பெரிய தகவல் கிடைத்தால்../சிக்கல் நேர்ந்தால்..
என்ன செய்வது என தெரியாமல் மேலே உள்ள X நபரிடம் ஆலோசனை பெற அல்லது order பெற காத்து இருக்கிறார்கள்.
இது போலீஸ் நடைமுறையில் உள்ள செயல்.

சுய புத்தி இருவருக்குமில்லை.

.........

இருவரும் MP ஆகலாம்
வாய்ப்புகள் இருக்கிறது..

அதன்பின் இருவரும் இருக்குமிடம் தெரியாமல் போவார்கள்.

++++++++

இருவருக்கும் கிடைக்கும் உளவு தகவல்கள் நிறுத்தப்பட்டாலே
இருவரும் ZERO தான்.

இருவரிடமும்
PRODUCTIVITY இருக்காது
Positivity யும் இருக்காது.
Creativity யும் இருக்காது

பொய் இருக்கும்
பிரிவினையை தூண்டுதல் இருக்கும்

உளவு தகவலில் உள்ள உண்மையை
அவர்களுக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள்.

+++++++++

தற்பொழுது பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் உளவு தகவல்களை முன்னாள் ஊழியர்களிடம், batchmates,நண்பர்களிடம்,குடும்ப உறுப்பினர்களிடம்,காதலிகளிடம் பகிர கூடாது.

இந்த ஒரு நூலை பிடித்து அரசு செயல்பட்டால் ..

இவர்கள் நெருக்கடிகளை சந்திப்பார்கள்.

++++++++

அரசியல் என்பது மிக விரிவானது..
இவர்கள் இருவரும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருப்பதாக நான் பார்க்கிறேன்.

🧐

















Saturday, July 30, 2022

Annihilate Castiest

 75th independence 

குற்ற பரம்பரையாக சித்தரிக்கப்படும் பட்டியலினதவர்கள் : 


இதை கல்லூரி படிக்கும்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது..


நான் ஒருவகையில் பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்டபோது ..


நான் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று நினைத்தேன்..


இல்லை அங்குள்ள 5 புலத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் அனைவரும் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் என்பதை ஆதாரபூர்வமாக கண்டுபிடிக்க..


அப்பொழுது அதை வைத்து ஒரு அரசியல் நடந்தது..


அங்கு யோசிக்க தொடங்கியது..


இது பள்ளி காலத்தில் இருந்தே இது நமக்கு மறைமுகமாக நடக்கிறது என்பதை உணர்ந்தேன்..


÷÷÷÷÷÷


உதாரணங்கள்..


யாரையாவது 4 நபர்களை fail போடுங்க என்றால் ..

ஒரு ஆசிரியர் முதலில் தேர்ந்தெடுப்பது பட்டியலின மாணவரை...


ஒரு 4 நபர்களை சிறையில் போடுங்க என்றால் ஒரு காவல் அதிகாரி முதலில் தேர்ந்தெடுப்பது பட்டியலின நபர்களை..


இப்படி எவ்வளவு ஆண்டுகாலம் நடந்து இருக்கும் என்று எடுத்துக்கொண்டால்..


இது 1000 ஆண்டுகள் கூட நடந்து இருக்கும்..

ஆனால் நான் எடுத்துக்கொண்ட காலம் இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு வெள்ளைக்காரன் சென்ற பிறகு..


75 ஆண்டுகாலம் கேள்விகள் கேட்க யாருமின்றி இது நடந்தது கொண்டே இருக்கிறது..


தற்போதைய கள்ளக்குறிச்சி கலவரம் வரை..


யாரை கைது செய்வது என தெரியாதபோது..


பட்டியலினத்தை சார்ந்தவர்களை கைது செய்கிறார்கள்..


தற்போதைய..

குற்ற பரம்பரையாக மறைமுகமாக சித்தரிக்கப்படுவது..

பட்டியலினதவர்கள்..


இது பொது புத்தியில் பதிய வைக்கபட்டுள்ளது...


÷÷÷÷÷÷÷÷


இதை பல ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்...


என்றாவது ஒரு நாள் 

அதிகாரம் என் வீட்டு வாசல் கதவை தட்டும்..


அன்று இது பொது புத்தியில் இருந்து அழிக்கப்படும்....


அம்பேத்கர் சொன்னது..

Annihilate Caste 

But

I will

Annihilate Castiest

Monday, September 6, 2021

Social caste politics engineering

 அரசியல் : social engineering என்கிற வார்த்தை கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அரசியலில் பிரபலம்.

அதை வைத்து தான் மாநில அரசியல் கட்சிகளும் செயல்பட முயல்கிறார்கள்.


எந்த தொகுதியில் யார் அதிகம் யாரிடம் எப்படி பேசுவது எப்படி வாக்குறுதிகள் கொடுப்பது 

என்று இதை வைத்து தான் முடிவு செய்கிறார்கள்.


இதற்காக தான் சாதிவாரி கணக்கெடுப்பை அனைவரும் கேட்கிறார்கள்.


÷÷÷÷÷


இது யாருக்கு எப்படி செய்வது பேசுவது என்று செல்லும் 

ஆனால் தொகுதிக்கு என்ன செய்வது எப்படி செய்வது என்று செல்லாது.


Social engineering என்கிற சொல்லாடலுக்கு பின்னால் Caste Census engineering தான் உள்ளது.


Social welfare என்பது இல்லை .


÷÷÷÷÷

Wednesday, March 17, 2021

If you touch you would be gone

 While british ruling plan of india was right because they were from a single race so that their ideas were same thoughts were same

Culturally emotionally they were same


 after independence


In name of unity in diversity


Few years this system was followed by the freedom fighter leaders but later..


Problem arises.


Indra gandhi can't able to understand the Sikhs feelings

Rajiv gandhi can't able to understand Tamilians feelings

Modi can't understand other than Gujarati's feelings..


People were connected to their own identity.

This is regional identity

This is language identity

This is religion identity

This is caste identity


By this in mind and heart they cannot rule others

They won't treat others as equal.


They can't change themselves that's the reality here.


Continued ......