Truth Never Fails
Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Monday, October 25, 2021

பொது நலன் தலைவர்கள் சாதி தலைவரான கதை

 பொதுநலனுக்காக பாடுப்பட்ட பல தலைவர்களை தற்போது சாதி தலைவர்களாக மாற்றிவிட்டார்கள், 


அப்படி பார்க்கையில் எனக்கு தற்போதைய சூழலில் காமராஜர் கூட நாடார் சாதி சங்க தலைவராகவே தெரிய தொடங்குகிறார்..

(இன்னொரு உதாரணம் ; பாரதியார் ஐயராக தெரிகிறார்)


பல சுதந்திர போராட்ட தலைவர்களையும் தற்போதுள்ள சாதி சங்கங்கள் எங்கள் சாதியை காத்த வீரர்கள் என்று அவர்களை அடையாளப்படுத்துவதால்..

அவர்களின் பெயரும் எதிகாலத்தில் மங்கிப்போகும்..


இந்த அவல நிலைக்கு யார் காரணம் ?


நாம் தான்..


#caste

Saturday, April 18, 2020

ஜனநாயக சோசியலிசம்

ஜனநாயக நாட்டின் அரசுகள் செல்வந்தர்களிடம் சோசலிச முகத்தை காட்டும்
ஏழைகளிடம் முதலாளித்துவ முகத்தை காட்டும்.

இது தான் சூத்திரம்.

ஆனால் இந்தியாவில் இது ஒருபடி மேலே சென்று
 பொருளாதார அளவுகோளை தாண்டி சாதிகள் வரை படர்ந்து இருக்கிறது.

மேல் சாதிகளிடம் சோசியலிசமும்
கீழ் சாதிகளிடம் முதலாளித்துவதையும்
காட்டுவார்கள்..

#India #Politics #Democracy #Socialism #Capitalism #caste #Economy

Liberalism விதைக்கப்பட வேண்டும் என்பேன்..

Krishna Kumar G

Friday, September 21, 2018

சீதையை சிதைத்த சாதி

சீதைக்கு சுயம்வரம் நடந்துகொண்டு இருந்தது,
அங்கு ஒரு சாதியவாதி வந்தான்,
சுயம்வரத்தை பார்த்து என்ன பெத்த அப்பனே கூட்டி கொடுக்கிறான் என்றான்.

அன்று சொல்லப்பட்ட சரித்திர புனைய கதைகளில் இருந்த புரிதல் கூட இன்று உள்ளவனுக்கு இல்லை.

பெத்து வளர்த்த அப்பனுக்கு மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க தெரியாதா?
என்கிற வினாவில்..

ஆணவ கொலையால் பாதிக்கப்பட்ட பெண்களை பார்த்து
சமூக வலைத்தளம் வழியாக
ஆணவ கொலையாளி கேட்கிறான்..

தேர்ந்தெடுக்க தெரியாமல் அல்ல பெண் தன் விருப்பப்படி தான் காதலனை/கணவனை தேர்வு செய்ய வேண்டும் என்கிற புரிதலில் தானே சீதையின் அப்பன் சுயம்வரம் வைத்தான்..

புனைய கதை வழியே ஒரு நிஜ வலி..

(தமிழ்த்தேசியம் பேசுகிற பல பரதேசிகள் இது குறித்து பேசுவதில்லை காரணம் அவனே ஒரு சாதியவாதி)

#caste #blog #religion

Krishna Kumar G