Truth Never Fails
Showing posts with label Intellectual. Show all posts
Showing posts with label Intellectual. Show all posts

Thursday, July 27, 2023

ஆபத்தின்போது நம்மை alert செய்யும் காகம்

 நேற்று இரவு வீட்டில் சின்னதாக ஒரு kitchen fire accident நடந்தது..

அந்த smell காலை வரை இருந்தது..

காலை 4 மணிக்கு வெளியே அமர்ந்து இருந்தேன்..


5 மணிக்கு ஒரு காகம் வந்தது..

பயங்கர பரபரப்பாக என்னை நோக்கி கத்த தொடங்கியது..


இங்கும் அங்கும் அலைமோதியது வாசல் சுவற்றில் முட்டியது..


நான் புரிந்து கொண்டேன்..

அது உள்ளே தீ வாசம் வருவதால் என்னை alert செய்கிறது என்று..


நான் நகராமல் அதை பார்த்துக்கொண்டே இருந்தேன்..


கொஞ்சம் நேரம் பரபரப்பாக இருந்துவிட்டு 

அருகே இருந்த மரத்தில் அமர்ந்து கரைத்துகொண்டே இருந்தது.


நான் வீட்டின் உள் 6 மணிக்கு சென்றது..

சத்தமிடுவதை நிறுத்தி விட்டது.


++++++


முதலில் அது பரபரப்பாக கத்தும் போது அருகே ஏதாவது பாம்பு இருக்கிறதா என முதலில் பார்த்தேன்..


அதன் பின் தான் உணர்ந்தேன் அது தீ வாசதை கண்டு நம்மை எச்சரிக்கிறது என்று.


இயற்கையோடு இணையும் தருணம் மிக அற்புதமானவை.


அதை புரிந்துகொள்வது தான் கடினம்..

Saturday, May 6, 2023

சட்டம் காலாவதியாகி சட்ட விரோதமாக மாறுகிறது

 Intellectual : 

" சட்டம் சட்ட விரோதமாகிறது "


ஒரு காலத்தில் சில்l மக்கள் சாதி என்கிற பெயரால் வன்கொடுமை செய்ய படுகிறார்கள் என்று தான்.


சாதியை பட்டியல் செய்ய தொடங்கினார்கள்.


பின் சட்டம் ஏற்றி

அந்த பட்டியலை வைத்து 

மக்களுக்கு அரசு உதவி செய்ய தொடங்கியது .


அது இன்று வரை தொடர்கிறது அதை மறுப்பதற்கு இல்லை.


+++++++


ஆனால் இந்த முறையை நாம் விரைவில் கைவிட்டுவிட வேண்டும்.


காரணம் இந்த சட்ட முறையை 

அரசியலுக்காக தவறாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் .


மக்களும் அது தான் தங்கள் அடையாளம் இனம் ethnic race என கருத தொடங்கிவிட்டார்கள் .


இது மக்கள் கலப்பதையும் ஒற்றமையாக இருப்பதையும் தடுக்கிறது


நான் இங்கு மேலோட்டமாக சொல்லியுள்ளேன்..


உள் இறங்கி சொல்ல முடியாத அளவுக்கு குழப்பி வைத்துள்ளார்கள்.


நம் கையில் இருப்பது ஒரு option தான் Erase it .


+++++++


ஒரு காலத்தில் மக்கள் பலனுக்காக கொண்டு வரப்பட்ட சட்டம்

தற்பொழுது சட்ட விரோத செயல்களுக்கு அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த படுகிறது.