Truth Never Fails
Showing posts with label Biography. Show all posts
Showing posts with label Biography. Show all posts

Friday, June 6, 2025

I've one rare one and only marriage condition

 I can't say it in public


It will be said only to the women I marry for the first time

Give one (requesting) document and get married


It's not wealth or dowry

It's an agreement document


It never said in any movies


Recent days I thought that..


It's for my safety or my hedging 



Monday, December 16, 2024

கடந்தேன் கருவறைகளை

 ஶ்ரீரங்கம் கோவில் உள்ளே சென்று ராமானுஜர் சிலை உட்பட அனைத்து சிலைகளையும் தொட்டு பார்த்துள்ளேன்

திருப்பாபுளியூர் கோவில் சிவ லிங்கத்தை தொட்டு கழுவி உள்ளேன்.


இவை எல்லாம் எதேச்சையாக நடந்தது..


ராமானுஜர் சிலையை தொடும்போது அது ஜீவசமாதி சிலை என்பது கூட எனக்கு தெரியாது..


பின்பு சமூகவலை தளங்களில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.


திருப்பாபுளியுர் சிவ லிங்கம் சேதமாக உள்ளது..

ஆங்காங்கே உடைந்து உள்ளது 

அதை நகைகள் கொண்டு மறைக்கிறார்கள்

அதை நேரடியாக பார்த்தவன் என்பதால் சொல்கிறேன்..

அது ஒரு gimmick வேலை தான்

கருவறை உள்ளே அரசர்கள் நின்று வழிபட இடமுள்ளது

சிவ லிங்கம் உள்ள இடத்தில் இருந்து பார்த்தால்..

கொடி மரம் வாசல் என அனைத்து கட்டிட கலையும் மிக நேர்த்தியாக இருப்பதை பார்த்து பிரமித்துவிட்டேன்


Symmetrical என்பார்களே அதுபோல உள்ளது..

அங்கிருந்து தான் மொத்த கட்டிடத்தையும் அளந்து இருப்பார்கள் .


என் அனுபவத்தில் சொல்கிறேன்

கருவறைக்குள் அனைவரும் போகலாம்

தவறே கிடையாது..


அதற்காக ஆயிரம் நபர்கள் ஒரே நேரத்தில் சென்றால் அந்த இடம் வீணாகிவிடும் நகைகள் திருட்டு போக வாய்ப்பும் உள்ளது..


காரணம் உள்ளே அரசர்கள் நிற்க இடம் உள்ளது.

வெளியில் இருந்து பார்த்தால் அது தெரியாது..

அவ்வளவு நேர்த்தியாக கட்டிட கலை உள்ளது.


இன்று இளையராஜாவை ஆண்டாள் கோவில் உள்ளே விடவில்லை என கேள்விப்பட்டேன்..


அது தேவையில்லை

தினமும் 10 நபர்களை முன்பதிவின் மூலம் உள்ளே விடலாம்.


அதில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்


இதனால் எந்த புனிதமும் கெட்டுபோகாது..


மக்களுக்கும் இயலாமை உணர்வு இருக்காது.


உண்மையான ஆன்மீகம் என்பது விக்கிரகங்களை கடந்தது..


ஒருகாலத்தில் கோவில் உள்ளே செல்ல முடியாது

ஆனால் இன்று அப்படியல்ல

நாளை கருவறை உள்ளே அனைவரும் செல்ல முடியும்.


அதற்கு நான் நானே முன்னெடுப்பு

Sunday, December 15, 2024

அரசியல் அழைக்கிறது

 நான் எங்கு சுற்றி எங்கு வந்தாலும்


என்னை வாழ்க்கை சமூக பணி மற்றும் அரசியலில் தான் கொண்டு வந்து நிறுத்துகிறது


ஆகவே இங்கேயே இருந்துவிட முடிவு செய்துள்ளேன்.


பார்த்துக்கலாம் !

Monday, November 25, 2024

பிடிக்காத நபர்களை பழி போட வைப்பேன்

 யாரையாவது எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் வாய்யால் அதை சொல்ல வைத்துவிடுவேன் இதில் நான் Expert...


சும்மா நடிக்கிற வேலைகள் எல்லாம் எனக்கு பிடிக்காது.




Sunday, November 17, 2024

பாரில் சந்திப்புகள்

 நான் குடிப்பதில்லை என்றாலும் ஒரு சில சந்திப்புகள் உயர்ரக மதுபான பாரில் தான் அமைகிறது.


வெறும் எங்கும் சந்திக்க வர அவர்கள் விரும்பவில்லை 


இப்படி சென்ற ஆண்டு வெளிநாட்டில் இருந்து வந்த நபர் உங்களை பார்க்க வேண்டும் என்றார்..

வாங்க உணவகம் சென்று சாப்பிடலாம் என்றேன்.


அவரோ மதுபான விடுதிக்கு அழைத்தார் நான் வருவது கடினம் என்றேன்..

உடனே அவர் அப்போ சந்திக்க வேண்டாம் என்று சுலபமாக சொல்லிவிட்டார்..


எனக்கோ தர்ம சங்கடமாக இருந்தது.


இதற்கு முன்பு ஒருவரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பார்த்து 


நீ ஏன் அங்க போற என்று என் குடும்ப உறுப்பினர் கேட்க எனக்கு கஷ்டமாக இருந்தது.


முன்பு பூங்கா , மைதானம் குட்டி சுவர்களில் கடை வீதிகளில் சந்திப்போம்..

இது கடந்த 20 ஆண்டுகளில்

காலம் மாறி

தற்பொழுது அனைவருமே மதுபான விடுதிகளில் தான் சந்திக்கிறார்கள் .


அங்கு தான் போதையில் மனம் விட்டு பேசுகிறார்கள்.


குடிக்காத நான் அப்படிபட்டவர்களை சந்திக்க நான் அங்கு செல்ல வேண்டியுள்ளது


எனக்கு ஏதாவது தின்பண்டம் குளிர் பானங்கள் வாங்கி தருவார்கள் .

Tuesday, November 5, 2024

Recounting the family love

 I thought I'm protecting my mom


Recent days I'm recognising

My mom is protecting me


I'm still a baby to her 


I left everyone to protect her

I left every opportunities for her


I don't care about those losses

I know I can gain everything better than that in matter of minutes but I can't get her. 


Mom love is so big and great



Wednesday, October 23, 2024

பயணம் தூரமில்லை

 நிறைய நண்பர்கள் அவ்வப்பொழுது சந்திக்க அழைக்கிறார்கள் ஆனால் என் சூழல் காரணமாக செல்ல இயலவில்லை.


வறேன் வறேன் வரும்பொழுது பார்க்கிறேன்..


என்று மட்டுமே சொல்ல நேர்கிறது..

எனக்கும் கஷ்டமாக தான் உள்ளது


ஆனால் கடைசியில் அவர்களே வந்து என்னை சந்தித்து விடுகிறார்கள்.


அம்மாவை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் நகர முடியவில்லை.


யாரையாவது ஏற்பாடு பண்ணிவிட்டு தான் வெளியே செல்ல முடிகிறது.


நான் அழைக்கும் ஆள் கூட 200 கிமீ பயணப்பட்டு வர வேண்டும்.


இது பெரிய கதை..


பலருக்கு தெரியும் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

Monday, October 14, 2024

20 வருட அவமான அனுபவம்

 என் நண்பர்கள் எல்லாம்

எப்பா எப்படியோ வாழ்கையில் செட்டில் ஆகிட்டோம் 

இனி நிம்மதி தான்

என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்


நான் இப்பொழுது தான் முதல் படி எடுத்து வைக்க தடுமாறி கொண்டு இருக்கிறேன்.


20 வருட அவமான அனுபவத்துடன்.





Thursday, September 19, 2024

இவன் யார் என்று தெரிகிறதா ?

 அரிதாக நான் கடுமையாக பேசுவேன் அதனால் எந்த தீங்கும் வராததும். என் கடுமைக்கு பின்னால் ஒரு நீதி இருக்கும்.


 அதில் போலி வேஷம் போடும் நபர்களின் கபடதனம் வெளிப்படும்.


என் கடும் சொற்களை நீங்கள் பார்க்கவில்லை என்றால் உங்களிடம் உள்ள போலி தனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பொருள்.

Friday, September 6, 2024

I Love India

 I always love India

Now I started to love more

Sunday, August 25, 2024

ஓரு வரவு இரு செலவு

 எங்க அம்மா காலையில் வஞ்சிர மீன் வாங்கி வச்சிருக்காங்க..


நான் வந்து சமைப்பேன் என்று..


நான் ஒரு பையன் வேலை தேடி என்னை நம்பி வந்துவிட்டான் என்று ..

அலைந்து திரிந்து


ஒரு 15000 சம்பளம் + 15000 வரை incentives கிடைக்கும் வேலையில் சேர்த்துவிட்டுவிட்டு..

வீட்டுக்கு வரும்போது மதியம் 2 மணி..


காலையில் சாப்பிடவில்லை

எனக்கு தலை வலி வேறு வந்து தூங்கிவிட்டேன்..


இரவு உணவு வீட்டில் செய்யலாம் என பாத்திரத்தை எடுத்தால் வஞ்சிர மீன்..

கெட்டு போய்விட்டது..


தூக்கி போட்டுவிட்டு..


இரவு உணவு செய்தேன்..


எனக்கு கோபம் எல்லாம் மீன் விற்கும் பெண் மீது தான்.


விலையுயர்ந்த மீனை என் வீட்டில் தர கூடாதுன்னு பல முறை சொல்லியுள்ளேன்..


ஆனால் அவர் என் அம்மாவிடம் தந்திரமாக தந்துவிட்டு சென்றுள்ளார்.


இப்படி miscommunication நடந்து பலமுறை மீன்களை தூக்கி போட்டுள்ளேன்..


ஒருவேளை மீன் விலை குறைவாக இருந்தால் இழப்பு குறைவு

என்பது என் எண்ணம்.


Because loss is unavoidable according to my situations. 

I just want to minimize the amount of loss..




தோழன் தொழில்

 நான் இருக்கும்போது என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பதை தான் அடிக்கடி சுட்டரத்தாரிடம் சொல்வதுண்டு.


நான் சொல்லும் பயன்பாடு வேறு

அவர்கள் பயன்படுத்துவது வேறு


நான் தோள் கொடுக்க தயார் என்கிறேன்

என் தோல் பைக்கு ஆசை படுகிறார்கள்




Saturday, August 3, 2024

Super வண்டி நம்ம ஊர் வண்டி

 நேற்று என் xl super வண்டி ஆற்று பாலத்தில் வரும்போது ரிசர்வ் விழுந்து நின்றுவிட்டது..

கடும் போக்குவரத்து நெரிசல் வேறு

வண்டியை ஓரம் கட்டி ஸ்டார்ட் செய்ய தொடங்கினேன்.. ஒரு அடியில் கிளம்பாது என்பதால் 

ஏற்கனவே உள்ள கால் வலியில் 4 உதை உதைத்தேன்..


திடீர் என 

யாரோ


ப்ரோ ப்ரோ என அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினேன்.


ஒரு பையன் சூப்பர் பைக்கில் நின்றுகொண்டு அழைத்தான்..


என்ன என்றேன்..


பெட்ரோல் பங்க் வரை தள்ளி விடவா என்றான்..


வேண்டாம் என்றேன்..


இங்க பக்கத்துல Mechanical கடை எங்க இருக்கு..

அதுவரை தள்ளி விடுறேன் என்றான்..


வேண்டாம் பா


வண்டி ஸ்டார்ட் ஆகிடும்..


நான் பார்த்துக்கிறேன் என்று..


லஷ்மி ஸ்டார்ட் ஆகிடு என்பதை போல ஒரு உதை உத்தைத்தேன்..

வண்டி கிளம்பியது ..


அவன் தலையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டான்..


நல்லவேளை அவனின் YouTube காணொளியில் நான் content ஆகாமல் தப்பித்தேன்..


++++++


ஒரு மாதம் முன்பு

இதே வண்டியை தான் பீச் அருகே உள்ள கல்லூரியில் இருந்து தினத்தந்தி அலுவலகம் வரை தள்ளி வந்தேன்


நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை.



எடைக்கு போட்டால் ஆயிரம் ரூபாய் தான் கிடைக்கும்..


இருந்தாலும்

சென்ற 

மாதம் 4000 ரூபாய் செலவு செய்து வைத்துள்ளேன்..

Thursday, August 1, 2024

Tea Boy

 97021 


'Tea Boy' எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து டீ வாங்கிட்டு வருவது தான் என் வேலை..


நான் இருந்த குடிசை பகுதியில் நான் சும்மா சாலையில் நடந்து போனால் கூட என் கையில் காசும் ஒரு சொம்பும் கொடுத்து டீ வாங்கி வர சொல்வார்கள்.


ஒரு கிமீ தூரம் இருக்கும் டீ கடைக்கு சென்று டீ வாங்கிவிட்டு இரண்டு செய்தித்தாளை மடித்து சொம்பின் விளிம்பில் பிடித்து சொம்பின் சூடு தாங்க முடியாமல் கொஞ்ச தூரம் நடப்பேன் பிறகு சாலையில் வைத்துவிடுவேன் இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி வந்து கொடுத்துவிடுவேன்..

சிலர் மிட்டாய் வாங்க காசு கொடுப்பார்கள் அது பெரிய விசியம் என நினைத்து இதை தொடர்ந்து செய்ய.

ஷாம்பூ சீயக்காய் எண்ணெய் என எல்லாருக்கும் எல்லா பொருளும் வாங்கி வந்து கொடுப்பேன்..


இன்றைய காலத்து delivery boy போல அன்று இருந்தேன்.


இது எது வரை தொடர்ந்தது தெரியுமா ?


நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை தொடர்ந்தது.


அல்லது ஒரு சம்பவம் செய்தேன் அதோடு என்னிடம் யாரும் இந்த வேலையை தரவில்லை.


எங்கள் தெருவில் 10ஆம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன் இருந்தான்..


அவனை கண்டால் எல்லா பசங்களும் பயப்படுவார்கள்..


அவன் பார்க்க மிக கெட்டவனாக இருந்தான்.


பிடி பிடிப்பான் , A படத்துக்கு சென்று வந்து வீட்டில் அடி வாங்குவான். பெண்களை கிண்டல் செய்வான்.


சின்ன பசங்க என்றால் அவர்களை பிடித்து வைத்து மிரட்டுவான்.


துணியை அவுத்து விட்டு ஓடவிடுவான்..


இப்படி எல்லா பசங்களும் அவனை கண்டாலே பயப்படுவார்கள்.


அவன் ஒரு காண்ட்ராக்ட் எடுக்கும் நபரின் மகன் என்பதால் யாரும் அவனை கேள்வி கேட்கமாட்டார்கள்.


சொந்த கிணறு 2 சக்கர வாகனம் VCR கலர் டிவி என வசதியான குடும்பம்.


இப்படி இருக்க ஒரு நாள் வழக்கம் போல கடைக்கு யாரோ  என்னை அனுப்ப நான் அவன் சாலையில் நிற்பதை பார்த்துவிட்டு பயப்பட தொடங்கிவிட்டேன்..


என் பயத்தை அவன் அறிந்துகொண்ட பின் சாலையை மறித்து நின்றுவிட்டான்..


காசு கொடுத்தால் தான் விடுவேன் என என் கையில் உள்ள காசை பிடுங்க தொடங்கினான்..

அவனிடம் இருந்து தப்பித்து ஓடினேன்..

அவன் என் பின்னே விடாமல் என்னை துரத்தி வந்தான்..


என் வீடு வரை ஓடி வந்த நான் என் வீட்டில் நுழையாமல் எதிர் வீட்டில் நுழைத்து  தோட்டத்தில் அவர்கள் அடுக்கி வைத்து இருந்த பெரிய சவுக்கு கட்டையை தூக்க முடியாமல் தூக்கி விளாசினேன் அவன் மேல் அடி பட்டதும் அடிக்காத வலிக்குது என பின் வாங்குவது போல பின் வாங்கி மீண்டும் என்னை பிடிக்க வந்தான் ..


மேலும் அடித்தேன்..

அவன் முகத்தில் பயத்தை பார்த்தேன்

கெஞ்ச தொடங்கினான்..


நான் விடவே இல்லை..

அருகில் இருந்தவர்கள் வந்து என்னை தடுக்கும் வரை அடித்தேன்..


அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பகுதியில் அதன்பின் யாரும் என்னை எதற்கும் கடைக்கு போக சொல்லவில்லை ..


அவனும் என்னை கண்டால் ஒதுங்க தொடங்கிவிட்டான். நான் வருவதை பார்த்தால் வீட்டுக்குள் சென்று விடுவான்.


 ஒரு கெட்ட பையனை அதுவும் என் வயதை விட பெரிய பையனை அடித்ததால் நான் எங்கு சென்றாலும் அதை பற்றி தான் கேட்பார்கள் ..

தப்பு பண்ணா அப்படி தான் அடிக்கணும் என பெருமையாக சொல்வேன்.


அவனை அடித்ததற்காக

பல பெண்கள் பாராட்டினார்கள்


அப்பொழுது என் அம்மா இந்த விசியாத்தை சொல்லி என்னை அடிக்கடி பாராட்டுவார்..


+++++++


சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் அவனை பார்த்தேன்..

வக்கீலாக இருக்கிறான்.


நான் இன்னமும் Tea boy யாக இருக்கிறேன்.


A short story of a unofficial tea boy


Wednesday, July 31, 2024

Waste Time

 I've special talent to identify the people who wastes time .


I've gained this talent by wasting huge time. 




Thursday, July 11, 2024

சேவையடியாள் நிறம் நிறுவனங்களில்

 ஒரு தனியார் நிறுவனத்திற்கு சேவை குறைபாடு காரணமாக புகார் அளிக்க வந்தேன்.. Regional Manager ரை பார்க்க சொன்னார்கள்..

உள்ளே சென்றால் இரண்டு பெண்கள் மத்தியில் அமர்ந்து மொபைல் பார்த்துகொண்டு இருந்தார்.


ஒரு பெண் அவர் தொடையிலும் ஒரு பெண் தலை முடியை கோதி கொண்டும் இருந்தார்கள்..


என்னை பார்த்தும் அவர்கள் கையை எடுக்கவில்லை.


என் புகாரை சொன்னேன்

தேதி தெரியாமல் பார்க்க முடியாது என்றார்..


சரி என்று திரும்பினேன்..

அதில் ஒரு பெண்..

உங்கள் மொபைலில் ஏதாவது message photo இருக்கான்னு பாருங்க என்றார்.


நல்ல யோசனை என்று பார்த்தேன் இருந்தது..


தேதியை சொன்னேன்..


அவர் இரண்டு பக்கம் உள்ள கையை எடுத்துவிட்டு அலுத்து  கொண்டு எழுந்தார் ..


என்னை ஒரு 10 நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு ஒரு அறைக்கு சென்றார் அவர் பின்னே அதில் ஒரு பெண் சென்றார்.


..


அவர் 10 நிமிடம் கழித்து வந்து பில்லை கொடுத்துவிட்டார்..


இடைப்பட்ட நேரத்தில் இந்த இரண்டு பெண்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டு இருந்தேன்.


ஒரு வேலையும் செய்யாமல் மொபைல் பார்பதும்.


மற்றவர் வேலை செய்வதை கண்காணிப்பதுமாக இருந்தார்கள்..


அந்த நிறுவனத்தில் மற்ற பெண் ஊழியர்கள் எல்லாம் இதை கவனித்தும் இதை கண்டுகொள்ளாமல் வேலை செய்து கொண்டு இருந்தார்கள்.


இதைப்பற்றி கேட்டால் அவர்களுக்கு வேலை போய்விடலாம்..


ஆனால் இந்த பெண்கள் உயர் அதிகாரியை கையில் போட்டுகொண்டு அவன் இச்சைக்கு ஒத்து போய்..

இவர்கள் சுகமாக வாழ்வது ஒரு ரகமாக எனக்கு தெரிந்தது..


...


இப்படி ஒவ்வொரு நிறுவனதுக்குள்ளும் ஒரு கதை இருக்கும்..


என்கிற நினைப்பில் வெளியேறினேன்..


(நான் போய் அவர்களை கேள்வி கேட்க முடியாது முன்பு அதுபோல கேட்டு நான்  அவமான பட்ட கதைகள் உண்டு.. உன் வேலையை பார்த்திட்டு போடா என்பார்கள்.

அல்லது உனக்கு கிடைக்கவில்லை என்று பொறாமையில் வயிது எரிச்சலில் பேசுகிறாய் என்பார்கள்)


Tuesday, June 11, 2024

Old bank functions out


11 June 2013

 After a decade Syndicate bank (Neyveli) has good staffs : All were younger generation staffs ,Old people are went away.We can ask any doubt to them,they are responding in good manner. But one think sucks ,They gave me a form for address change ,I was blinking bcoz everything was Printed in Hindi.I don't know were to write my Name and Address.At Last i filled Myself.Some were I wrote my name and address.and gave it to a girl in the counter,she looked at me,I know i have written wrongly,i didn't asked any clarification about filling the form ,Within few mins she changed my address in her computer,and she said within 2 days u wil receive a new pass book.I asked her do u know Hindi did this bank recruit only Hindi speaking people.She said she also Don't know Hindi.it was fun she just changed by seeing the form my name was in English and address too !.Nice ...Bank has to change its forms language in English.


11 Jun 2024




Now the syndicate bank is gone ..

Merged with Canara Bank ..


Wonderful bank Som mom signed for me to start a bank account..

By seeing her sign

They immediately opened me a new account without any questions. 

Before that they where asking me for ID cards which I don't had on that address..


I miss the friendly family



Saturday, June 8, 2024

I'm broken

 


I'm broken dear


I've broken face

Broken hand


I don't have money

I don't have job


What will you do ?







Monday, May 20, 2024

I'm not rushing or forcing anyone

 I'm just living my life


Whoever comes can come

Whoever goes can go


Always door is open


My life is so short I want to make it sweet

I don't want stress seekers 


Those who trust me can come

Those who leave me can leave

I don't have time for time passers 


My Love is always free 





Sunday, March 17, 2024

தாயிடம் பொய் எதற்கு ?

 2019 தேர்தலுக்காக வாங்கிய mic

எடுத்து மாட்டினேன்..

எங்க அம்மா

காசு வந்தா செய் இல்லைனா செய்யாத ?


அவங்களுக்கு பழைய நினைவு..


இது மூலமாக புடவை எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கேன் இல்லையா ?


நான் காசுக்காக செய்யவில்லை என்று சொல்லிவிட்டேன்..


அவங்களுக்கு பொய் வாக்குறுதி எதற்கு ?

ஏற்கனவே

திருமண விஷியத்தில் சொல்லுகிற பொய் வேறு என் மனதை அழுத்துகிறது..


என் GF புரிந்தும் புறியாதத்தை போல இருக்கிறாள்..