Truth Never Fails
Showing posts with label Happenings. Show all posts
Showing posts with label Happenings. Show all posts

Thursday, November 17, 2022

காட்சியால் சாட்சி

 4 நாட்கள் முன்பு cycle காணோம் என்று ஒரு சிறுவன் வந்தான்.


நேரம் சரியாக தெரியாததால்


Cctv யை சில மணி நேரம் பார்த்து திருடனை கண்டு பிடித்தோம்..


அடுத்த நாள் மதியம் சரி தூங்குவோம் என கண் அசந்தேன்..


 ஒரு ஆள் கதவை தட்டி கூப்பிட ..


எழுந்து என்ன என்றேன்..


என் பேரன் கொலுசை காணோம் ..

கேமராவில் பார்த்து சொல்லுங்க என்றார்.


உள்ளுகுள் கோபம் இருந்தாலும்.


மிக தன்மையாக..


சார் கொலுசு சின்ன பொருள்.

யாராவது pocket ல போட்டு எடுத்துட்டு போய் இருப்பாங்க என்றேன்.


அவர் எதுக்கும் பாருங்க என்றார்..


சரி பார்க்கிறேன் என்றேன்..


சென்றுவிட்டார்.


+++++


இந்த சம்பவம் நடந்தபோது பல விசயங்கள் நாபகம் வந்தது..


முதன்முதலில்

தொலைகாட்சி வாங்கியபோது.


ஊரே என் வீட்டில் இருக்கும்.

7:30 மணி செய்திக்கு.


சாப்பிட கூட முடியாது..


அப்பொழுது என்ன உணர்வு இருந்ததோ அதுபோல் இந்த cctv யால் நிகழ்கிறது.

என்று தோன்றியது.

+++++++++

18 nov 2022

நயன்தாரா பிறந்தநாள் அன்று உதயநிதி தன் 'கலக தலைவன் ' படத்தை வெளியிடுகிறார்..

+++++


அதன் பின் சோமுவிடன் நயன்தாரா பற்றி கேட்டபோது..


அவ கோயேம்பேடு பக்கத்துல ஒரு ஹோட்டல் இருக்குல

அதுக்கு மேல ஒரு பார் இருக்கு


அங்க வந்து

இரவு 11 மணி வரைக்கும் சரக்கு அடிப்பா


பாவும் தனியா உட்காந்து தான் சரக்கு அடிப்ப்பா..


நான் நிறைய வாட்டி பார்த்திருக்கேன் என்றான்..


நான் :

என்னது சரக்கு அடிப்பாளா..?


ஆமாடா இதுலா சகஜம் என்றான்.


++++++


பிறகு அந்த பெண் தான்..


தமிழ் சினிமா வரலாற்றில் 


திரையலேயே சரக்கு அடித்த முதல் ஹீரோயின்..


நடிகர் விஜய்யுடன்..


இதுலாம் வரலாறு 

குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்

வருங்காலத்தில் TNPSC யில் கேட்பார்கள்.


++++++++


நயன்தாரா தான் பின்னாளில் 


பல பெண்களுக்கு ROLE MODEL லாக..


இருந்தார்


என்பது குறிப்பிடத்தக்கது..


இது இன்று வரை தொடர்கிறது..


அவரை COPY செய்யும் பல பெண்கள் இருக்கிறார்கள்..


குறிப்பாக மில்லியனல்ஸ் பெண்கள்..


ஒருமுறை வருமான வரித்துறை அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து பெருமைபடுதியது என்பது குறிப்பிடத்தக்கது...


++++++++


இந்த பதிவு 


வஞ்சபுகழ்ச்சி அல்ல ..

Friday, April 29, 2022

சாமர்த்தியம் என சிக்கும் சிறுவர்கள்

 இந்த பையன் லோகேஷ் 5ம் வகுப்பு க்ளோரி பள்ளி.. கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து

Lift கேட்டான் எங்கடா போற என்றேன்..

பாதிரிக்குப்பம் என்றான்..


அழைத்துக்கொண்டு வருகையில் பல கேள்விகள் கேட்டேன்..


வீடு எங்கே என ..

துக்குகினான் சாவடி என்றான்.

அது எங்கடா இருக்கு என்றேன்.


பேருந்து நிலையம் அருகே இருக்கு என்றான்..


அப்பறம் ஏன்டா பாதிரிக்குப்பம் போற என்றேன்..


அங்கே நண்பன் வீட்டில்  game விளையாட போறேன் என்றான்.

அப்பறம் எப்போ எப்படி வீட்டுக்கு வருவ என்றேன்..


9 மணிக்கு வருவேன்.

அப்படியே லிப்ட் கேட்டே வந்துடுவேன் என்றான்.


டேய் யாராவது உண்ண தூக்கிட்டு போய் வித்துட்டா என்னடா பண்ணுவ என்றேன்..


அஹ் ஆஹ் என்றான்..


வீட்டுல சொல்லிட்டியா என்றேன்

எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் என்றான்..


நான் சாப்பிடும் கடை வந்ததால் இறக்கிவிட்டு


புகைப்படம் எடுத்துக்கொண்டேன்..


இங்கு பதிகிறேன்..


துணிச்சல் தான் என்றாலும்..

சிறுவன் என்று பாவப்பட்டு லிப்ட் கொடுத்தேன்..

அவன் சாமர்த்தியமாக மக்களை ஏமாற்றுவதாக எண்ணி தன்னை பணயம் வைக்கிறான்.


பெட்ரோல் பிரச்சனை

 கடலூர் A2B அருகே உள்ள பெட்ரோல் பங்கில் TVS xl வண்டிக்கு 200ரூ பெட்ரோல் போட்டேன்.


160ரூ போட்டார் .. தள்ளி வந்து

100ml oil 30 ரூ தானே 40ரூ எடுக்குறீங்க என்றேன்.


சார் 120ml oil போட்டேன் என்றான்..

யாரை கேட்டு 120ml போட்டீங்க 100ml தானே போடனும் என்றேன்..


போட்டுட்டேன் விடுங்க சார் என்றார்..


100ml 30ரூ னா 

20ml எவ்வளோ என்றேன்..


15 ரூ காசை கொடுத்து 

கிளம்புங்க சார் என்றான்.


இப்ப எதுக்கு காசு தறீங்க என்றேன்..


சார் கிளம்புங்க சார் என்றான்.


இப்ப எப்படி மீதி பணம் வந்தது என்றேன்..


அமைதியாக நின்றான்..


நான் கிளம்பிவிட்டேன்.


மிக சாதாரணமாக

ஒரே ஒரு கேள்வி மட்டும்தான் கேட்டேன்

காசை கொடுத்து அனுப்புகிறான்..


அப்போ அந்த பங்கில் இனி பெட்ரோல் போடவே கூடாது.

Wednesday, April 13, 2022

பெட்ரோல் போடுரா

 இன்று காலை பெட்ரோல் பங்கில் : பெட்ரோல் போடும்போதும்.. 

சார் சில்லறை இல்லையா சார் என்றான் ..

சார் பெட்ரோல் நாபை மூடுங்கள் என்றான்.


அவன் கேட்கும் ஒவ்வொரு திசை மாற்றும் கேள்விக்கும் பதில் அளித்துக்கொண்டே..


பெட்ரோல் மீட்டரை பார்த்தேன் ..


அது ஓடவே இல்லை ..


அப்படியே பெட்ரோல் gunனை எடுத்து  அதன் இடத்தில் வைத்துவிட்டான்.


நான்.. மீண்டும்..

தம்பி இப்ப நீ பெட்ரோல் போட்ட என்று கேள்வி கேட்டேன்..

அவன் பேசாமல் பணத்தை எண்ண தொடங்கினான்.


ஹலோ பெட்ரோல் போடுரா என்றேன்..


சுதாரித்துக்கொண்டு பயத்தில்..

மீண்டும் gunன்னை எடுத்து

ஒழுங்காக பெட்ரோல் போட்டான்..


தம்பி வேற யாராவது இருந்திருந்தால் அடிச்சி இருப்பாங்க

இப்படி பண்ணாத என்றேன்..


இல்லனா நான் சரியா கவனிக்கல என்றான்..


நீ பெட்ரோல் போட்டதா நான் நம்பி போய் எங்காவது நடு வழியில வண்டியை தள்ளனுமா என்றேன்..


பேசாமல் நின்றான்..


÷÷÷÷÷÷÷÷÷


நம்ம ஊர்ல தான் எது எவனுக்கு நடந்தாலும் கண்டுக்க மாட்டோமே..


அதுபோல பின்னால் நின்றவன்

சார் வண்டியை முன்னாடி தள்ளுங்க என்றான்.