BB Ultimate Tamil Tv telecast version vs Live version.
There is a huge difference
They edit even a normal conversation.
ஜூலி ஸ்நேகனிடம் கேட்ட ஒரே தொடர் கேள்வியை சுமார் 10 இடங்களில் எடிட் செய்துள்ளார்கள்.
(நன்றாக கவனியுங்கள் வார்த்தைமேல் வார்த்தை வரும்)
அப்படியென்றால் ஒருவர் பேசும் பொருளையே மாற்ற முடியும்..
ஒருவரை வெளியேற்ற இருடடிப்பும் செய்ய முடியும் தவறாக சித்தரிக்கவும் முடியும்..
இவ்வளவு பெரிய எடிட்டிங் செய்ய எத்தனை நபர்கள் வேலை செய்கிறார்கள் என தெரியவில்லை..
÷÷÷÷÷÷÷÷
நேரலையில் பார்க்கையில் Generator சத்தம் விமானம் பறக்கும் சத்தம் எல்லாம் கேட்கிறது ..
ஒரே இறைச்சலாக இருக்கிறது.
Nose reduction செய்கிறார்கள்.
போட்டியார்களை ஒரே இடத்தில் சில மணி நேரம் அமர செய்கிறார்கள் அப்பொழுது அவர்கள்..
நேரத்தை போக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை எல்லாம் செய்கிறார்கள்.
டாஸ்க் தொடங்கவே 1 மணி நேரமாகிறது..
தொழில்நுட்ப ரீதியில் குழப்பங்கள் எல்லாம் நீடிக்கிறது.
அது வெளிப்படையாகவே தெரிகிறது.
எல்லாரும் வந்து லிவிங் ஏரியாவில் அமருங்கள் என்று சொன்னாலும் யாரும் வருவதில்லை அவர்கள் அனைவரும் வரும் வரை பீக் பாஸ் 30 நிமிடம் காத்துகொண்டு இருக்கிறார்.
÷÷÷÷÷÷÷÷÷
போட்டியாளர்கள் பேசுவதை பார்த்தால் நாம் ஏதோ விடுமுறைக்கு ஊருக்கு சென்று எப்படி நேரம் கழிப்போமோ அப்படி தான் பெரும்பாலான நேரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.
சிறு சிறு விடுகதைகள் சொல்லி விளையாடுகிறார்கள்.
இடையே adult காமெடி என்கிற பெயரில் சில ஆண்கள் காமெடி செய்கிறார்கள்.
சிரிப்பே வரவில்லை என்றாலும் சில பெண்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
அவைகளை தொலைக்காட்சிகளில் காட்டினால் பீக் பாஸ் நிகழ்ச்சி நடத்தவே எதிர்ப்பு வந்துவிடும்.
சிலர் ஒரு வேலையும் செய்வதில்லை
சிலர் மேக்கப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்
சிலர் சொகுசாக அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு சிலர் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.
லைவ் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
சாப்பிட நேரமில்லாமலும் , கழிவறை போக முடியாமலும் அவதி படுகிறார்கள்
ஏசி ஓடாமலும் அல்லது அதிக குளிர் காரணமாகவும் புலம்புகிறார்கள்.
டாஸ்க் என்கிற பெயரில் set மாற்றுவதற்கு போட்டியாளர்களை இடம் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
மன தைரியமும் பொறுமையும் இருந்தால் தான் தாக்கு பிடிக்க முடியும்.
கோவம் கண்டிப்பாக வரும்.
அதற்கான சூழல் ஏகப்பட்டது உள்ளது..
÷÷÷÷÷÷÷÷÷