Wednesday, April 22, 2020

கொரோனா காசு கொடு

தூய்மை பணியாளர்கள் குப்பை வாங்க வீட்டுக்கு வந்தார்கள் :
பணம் கொடு என்றார்கள் அதான் 50 ரூ கொடுத்தேனே என்றேன் இப்ப கோரோணாவுக்கு கொடு என்றார்கள்

அதுலாம் கொடுக்க முடியாது என்றேன்..
 (Sarcasm)

இந்த ஏரியாவிலேயே நீ தான் கொடுக்க மற்றேனு சொல்லி இருக்க
என்றார்..

இந்த ஏரியாவிலேயே நான் தான் மாசம் 50 ரூ தரேன் அப்பப்போ டீ காசு தரேன் மத்தவனெல்லாம் 30 ரூ கூட தரமாட்டான்

 மாச சம்பளம் வாங்கினீங்களா
அவனவன் அள்ளி கொடுத்திருப்பானே விளம்பரத்துக்கு..
என்றேன்..

அதலாம் விடு நீ கொடு என்றார்..

நான் மொத்தமாக வசூலித்து செய்றேன் போங்க என்றேன்..

அடுத்த மாசம் செய்ற

என்று கேலியா பேசிவிட்டு செல்கிறார் அந்த பெண்மணி..

வசூலை எப்படி தொடங்குவது என்று என் மனம் யோசிக்க தொடங்குகிறது

÷÷÷÷ௐ÷÷÷÷

இப்ப

நான் டாக்டர்,
நான் காவல்துறை ,
நான் தூய்மை பணியாளர்

எங்களுக்கு செய்ங்க என்று கேட்க தொடங்குகிறார்கள்..

நான் கூலி

யாரிடம் கேட்பது ?

#COVID_19 #LOCKDOWN ATROCITIES


No comments:

Post a Comment