Saturday, July 22, 2017

எதிலும் சீனா உபகரணங்கள்

ஆரம்பத்தில் குண்டு ஊசி ஊக்கு துணி தைக்கிற ஊசி சட்டை பட்டன் ஜிப் எல்லாம் சீனாவில் இருந்து தான் வாங்கினோம் பிறகு கால போக்கில் நாமே தயாரிக்க தொடங்கிவிட்டோம்.. ஆனால் அவைகளை தயாரிக்கும் இயந்திரம் இன்னமும் சீனா தயாரிப்பு  தான்..

இந்தியா ராணுவம் உள்நாட்டில் ்உருவாக்கிய பீரங்கி உதிரி பாகம் சீனா தயாரிப்பு..

ராணுவம் மட்டுமல்ல TVS,TATA,Maruthi வாகன உதிரிபாகம்..

Smart phone laptop computer Xerox printer உதிரிபாகம்.. என்று அனைத்திலும் சீனாவின் ஆதிக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது..

நாம் சீனாவின் பொருட்களை முழுவதும் தவிர்க்கலாம்..ஆனால் அதற்க்கு செலவு அதிகம்..

உதாரணத்துக்கு German பொருள் வாங்கலாம்.. நல்ல தரமாக இருக்கும் ஆனால் விலை அதிகம்..
சீனா 4 ரூ க்கு தரமில்லாத பொருளை விற்றால்
ஜெர்மன் 18 ரூபாய்க்கு தரமான அதே பொருளை விற்க்கும்

விலை குறைவு என்பதால் நாம் சீன பொருளை வாங்குகிறோம்

America சற்று வித்தியாசமாக அதே பொருளை 21 ரூபாய்க்கு விற்ப்பான்
அது எப்படி என்று பார்த்தால்

சீனாவில் தயாரித்து விளம்பர செலவு flagship copyright எல்லாம் சேர்த்து விற்ப்பான்..
உதாரணத்துக்கு iphone

இதில் சீனாக்காரனை விட அதே தரமில்லாத பொருளை விற்று அதிக லாபம் பார்ப்பவன் அமெரிக்கா ..
அப்போ ஜெர்மன் பொருள் வாங்க சொல்லுரியானு கேட்காதீங்க..

நீக்க எது வாங்கினா எனக்கு என்ன..

ஆனால் ஏற்கனவே உள்நாட்டில் 100% உற்பத்தியாகும் பொருட்களின் உற்பத்தியை அழித்து விடாமல் இருந்தால் சரி..

Online Trending வாழ்க்கை

Trendingகிள்/ல் வாழ்பவள்/ன் தினமும் எது ட்ரென்ட் ஆகிறதோ அதற்க்கேறப்படி தங்களை மாற்றிக்கொண்டு செயல்படுபவர்கள்.ஒரு நிலையில் இல்லாதவர்கள்.
இன்று ஒரு நிலைக்காக
பதிவுகள்
Dubsmash
Review வீடியோ
அக்ரோஷ வீடியோ
Troll வீடியோ
MeMes
என்று ட்ரென்டிங்கை பிடித்து இணையதளங்களில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்பவர்கள்..
இதுவும் பிழைக்க தெரிந்தவர்களின் நுட்பமான முறை தான்..என்றாலும்..
தொடர்ந்து தன் நிலையை மாற்றி மாற்றி செய்யப்படுவதால் அவர்களின் நம்பகத் தன்மையை இழப்பார்கள்...
ட்ரென்டிங்கில் வாழ்பவர்களை குறிக்க ஒரு பெயர் வைக்க வேண்டும்..
சுயம் இல்லாதவர்கள் என்பதால் சுருக்கமாக இருக்க வேண்டும்..
Translate it
Trending Guys -- ¿?
:::::::::::

Example Explanation

கொஞ்சம் பிரபலமாக ட்ரென்டிங் செய்கிற பெண்கள் இணையத்தில் அதிகம் அது அவர்கள் கருத்துகளாளோ அல்லது அழகாளோ அல்லது குடும்ப பெருமைகளாளோ வழி வந்தவர்களாக கூட இருக்கலாம்.. எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும்...

ஆனால் பல ஆண்கள் வழக்கம் போல அவர்களை ஏன் பின் தொடருகிறோம் என்று கூட தெரியாமல் கூட்டம் கூட்டமாக பின் தொடர்கிறார்கள்..

ஒரு அறிவும் இல்லாத cuteness அழகை மட்டும் கொண்ட பெண்ணுக்கு குறைந்தது 70000 ஆண்் பின் தொடர்பாளர் இருக்கிறார்கள்..
(Fake போலி கணக்குகளை தற்போது விட்டுவிடுங்கள் )

இதை பயன்படுத்திக்கொண்டு அந்த பெண்கள் பல காரியங்களை சாதிக்கிறார்கள் ..
(No stomach burn ) சரி இருந்துவிட்டு போகட்டும்..

இவர்கள் ட்ரெண்ட்ங் அடிப்பதற்காக சில நேரம் சமூக பிரச்சனை அரசியல் பேசுவார்கள்.. சரி அதுவும் போகட்டும்..பேசட்டும்... விட்டுவிடலாம்..

ஆனால் தக்க சமயத்தில் பேச வேண்டிய உண்மையான பிரச்னையை பற்றி பேசாமல்.. தன் சுய இச்சைகளை பற்றி பேசி அவர்களை பின் தொடரும் மொத்த ஆண்களையும் அவர்கள் பக்கம் இழுத்து விடுவார்கள்..
(அப்போ ஆண்களுக்கு அறிவு இல்லையான்னு கேட்காதீங்க - இருக்கலாம்)

அது தான் தற்போது நடக்கிறது

முக்கிய பிரச்னையை திசை மாற்றி பிக் பாஸ் பக்கம் ஆண்களை இழுத்தவர்கள் இந்த பெண்கள் தான்..
இவர்களை தீருப்திப்படுத்தவே இந்த ஆண்களும் மீம்ஸ் முதல் ட்ரோல் வீடியோ வரை மெனக்கிட்டு போட தொடங்க .. அவர்களும் அதை ரசிப்பதை வெளிப்படுத்த , எல்லாம் ஒருமித்து செயல்பட தொடங்கி விட்டது..

ஆவதும் பெண்ணாலே அழிவதும் ....

என்பது நிரூபணம் ஆகிவிட்டது...

ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை பார்த்தோமா பேசாமல் போனோமான்னு இருக்கணும்.. அதை சமூக கலாச்சார பிரச்சையாக்கி .. முக்கிய சமூக பிரச்னையை பின் தள்ளி விட்டீர்கள்..

Save Oviya வை Su*k என்று என்னை சொல்ல வைத்து விடாதீர்கள்..

இந்த ட்ரென்டிங்கில் சில anti social elements உள்ளே புகுந்து உள்ளது (H ராஜா)

மக்களை சில சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் திசை திருப்பி வருகிறது..

குறிப்பாக முன்பு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து பல நிகழ்வுகள் மூலம் அசிங்கப்படுத்தி வருகிறது...வருகிறார்கள்.. ஜாக்கிரதை.

(பின்களுக்கு பின் புத்தி (பின் =பெண்))

ஓவியாவால் அங்கிருக்கும் ஆண்களுக்கு ஆபத்து..(Bonnerயை கட்டுப்படுத்திக் கொண்ட சினேகன் உட்பட)
(பரணியால் பெண்களுக்கு வந்து விடுமோ ஆபத்து என்று அங்குள்ள ஆண்களையும் சேர்த்து சிந்திக்க வைத்த அந்த பெண்களின் கூற்றை போல..)

ஓவியாவின் பெயரை ட்விட்டரில் ட்ரென்ட் அடிப்பதால் வெளியில் இருக்கும் ஆண்களுக்கு ஆபத்து..

கருணையால் வீழ்ந்தவர்கள் கோடி
கவர்ச்சியால் வீழ்ந்தவர்கள் மீதி
Men will be Men always.

ஓவியா மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விமர்சனமுமில்லை.. அந்த நிகழ்ச்சியை பார்த்து இங்கு ட்ரென்ட் அடிப்பவர்கள் மீது அதிக விமர்சனமும் /சந்தேகமும் எழுகிறது..

எதோ ஒரு பதிவு போடுபவர்களை விட்டுவிடலாம்..ஆனால் இதே வேலையாய் ட்ரென்ட் அடிப்பவர்களை புறக்கணியுங்கள்..

Wednesday, July 5, 2017

சாலை விபத்து வேடிக்கைகள்

நான் பல விபத்துக்குள் சிக்கி இருக்கிறேன் ...
ஒருமுறை பைக் விபத்தில் கொதிக்கும் சாலையில் விழுந்தேன் ...
சூடு தாங்காமல் எழுந்து முதல் அடி வைத்தேன் பிறகு முகம் குப்புற சாலையில் மீண்டும் விழுந்தேன் ...
அப்போது தான் தெரிந்தது என்னால் நிற்க முடியவில்லை என்று ...
வாகனத்தில் இருந்து பெட்ரோல் வேறு ஊற்றிக்கொண்டு இருந்தது..
சாலையில் பல வாகனங்கள் வேகமாக வந்து கொண்டு இருந்தது...
செல்போனை எடுத்தேன் உடைந்து இருந்தது வேலை செய்ய வில்லை ...
பிறகு தவழ்ந்தே வந்து சாலை ஓரத்தில் உள்ள காட்டு பூண்டு செடிகளில் வந்து படுத்துவிட்டேன் ...
பிறகு மக்கள் தான் ... எல்லா உதவியும் செய்தார்கள்...

சாலை விபத்து வேடிக்கைகள் :
பொதுவா ஒரு சாலை விபத்து நடந்துன்னா அங்கே பல வேடிக்கைகள் நடக்கும்
நான் பார்த்தவை :
பைக்கில் செல்லும்போது சாலையில் கூட்டமா நிற்ப்பார்கள்
வண்டியை ஓரமாக விட்டுவிட்டு
என்னவென்று சென்று பார்த்தால்
ஆண் பெண் சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடப்பார்கள்...
அடிக்கும் வெயிலில் கொதிக்கும் சாலையில்..
துடிப்பார்கள்...
யோ ஒரு கை பிடிங்க யா என்று தோளை பிடித்து தூக்குவேன்...
ஆனால் கூட்டத்தில் இருந்து யாரும் கால்களை பிடிக்க மாட்டார்கள்...
பிறகு இடுப்படி பிடித்து நானே தூக்கி சென்று சாலை ஓரத்தில் நிழலில் அல்லது கடை வாசலில் படுக்க வைத்து விட்டு ...
தலையில் ரத்தம் வந்தால் கை வைத்து பிடித்துகொள்வேன்.
யோ யாராவது 108 க்கு கால் பண்ணுங்க...
என்று கூட்டத்தில் உள்ளவர்களின் முகத்தை பார்த்தால் பாக்கெட்டை பாத்தா படி நிற்ப்பார்கள்..
கூட்டத்தில் இருந்து யாரோ ஏன் நீ பண்ணேன் என்பான் ...
யார் யா அது ...?
உடனே எல்லாரும் கைகளில் செல்போனை எடுப்பார்கள் ... பிறகு உடனே பாக்கெட் உள்ளே வைத்து விடுவார்கள்..
யாருமே கால் செய்ய மாட்டார்கள்...
ஒரு சிலர் வீடியோ எடுத்து கொண்டு இருப்பார்கள்.
பிறகு ஒரு நிமிஷம் இவர் தலையை பிடிங்க ... நான் கால் பண்ணுறேன் என்றதும் ...
கூட்டத்தில் இருந்து ஏன் எங்க கை இரத்தமாகுறதுக்கா என்பான் ...
யார் யா அது ...?
அப்போது தான் ஒருவன் வந்து என்ன ஆச்சி என்பான் ...
விபத்தை எவனாவது ஒருவன் விளக்கி சொல்லுவான்...
பிறகு அவன் இப்படிதான் ... ஆட்டோ காரனுங்க
லாரி காரனுங்க பைக்கு காரனுங்க ..
என்று தொடங்க புது கதை ஆரம்பித்து விடும்...
பிறகு ஆட்டோ வை பிடித்து ...
அடிப்பட்டவரை ஏற்றிவிட்டு ...
யாராவது ஒருவர் போங்க என்றால்
இப்ப ஏன் ஆட்டோ பிடிச்சிங்க 108 வரும்ல என்பான் ஒருவன்...
பிறகு எனக்கு வேலை இருக்குது என்று
சொல்லிவிட்டு அனைவரும் கலைந்து விடுவார்கள்...
ஆட்டோகாரர் பொறுப்பாக அவரை மருத்துவமனையில் சேர்த்து விடுவார்...
வீட்டுக்கு வந்து நாம் சோப்பு போட்டு கைகளில் உள்ள இரத்தத்தை கழுவி விட்டால் போய் விடும்...
அவ்வளவு தான்

புது அடையாளம்

ஒரு இரவில் ஒரு கட்டளை
அதில் எல்லா இந்திய மக்களும் தங்கள்
கைகளிலும் பின்னங் கழுத்திலும்
பார் code ஒன்றை பச்சை
குத்திக்கொள்ள வேண்டும்,

அதில் ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற இலக்கங்களை இட்டுக்கொள்ள வேண்டும்..
இதை செய்ய தவறுபவர்களை
நாட்டை விட்டு விரட்ட வேண்டும்

மறுநாள் காலை வானொலியில்
டிஜிட்டல் இந்தியா
புதிய இந்தியா பிறந்தது என்று
தொடர்ந்து ஒலிக்க விட வேண்டும்.

பிறகு ஊழல் வாதிகள் தேசத்தை விட்டு ஓடுவார்கள்..
என்று சமுகவலை தளத்தில் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்.
உண்மையில் அவர்கள்
லண்டன் சென்றும் அமெரிக்கா சென்றும் குடியுரிமை பெறுவார்கள்..
(இனி நமக்கு மகிழ்வான வாழ்வென்று ஒருவரை ஒருவர் பார்த்து வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்ள வேண்டும்)

நிதர்சனத்தில்
நாம் இங்கு சாதி மதம் மாடு என்று குதுகலமாய் ரணகலாமாய்
வேலைவாய்ப்பின்றி
நம் இயற்கை வளங்களை விற்று
அடிமைகளாக
சுகமாய் வாழலாம் வாழ்வோம்.

அப்பா டு அம்மா மருத்துவமனை

2008 எங்க அப்பாவை Greams rd அப்பொல்லோவில் சேர்ப்பதற்காக நான் மட்டும் தான் அவருடன் போய் இருந்தேன்.நான் Main Blockல் உள்ள receptionல் அட்மிட் போட்டேன் அவர்கள் ஒரு சில papers வேண்டும் அது வேறு ஒரு பிளாக் கீழ் தளத்தில் இருந்து வாங்கி வர சொன்னார்கள்..
நான் அவர்கள் சொல்லிய இடத்துக்கு போய் பார்த்தேன் அவர்கள் சொல்லியதுபோல் போல் அந்த counterல் அந்த papers இல்லை...
பிறகு மீண்டும் மெயின் பிளாக் வந்து விசயத்தை சொன்னேன்... அவர்கள் மீண்டும் அதே இடத்தை சொல்லி அனுப்பி வைத்தார்கள்...
அங்கு சென்று விசாரித்தேன் ...சரியான பதில் இல்லை..
இப்படி மேலும் ஒரு முறை அலைய விட்டார்கள்ள்.. திரும்பி நான் வரும்போது...
அப்போலோவில் உள்ள ஒரு செக்யூரிட்டி வந்து என்னை பிடித்து... எதுக்கு நீ அந்த ப்ளாக்குக்கும் இந்த இடத்துக்கும் திரும்ப திரும்ப சுத்திக்கிட்டே இருக்க என்று..விசாரித்தார்.
காரணம் CCtv கேமராவில் அவர் என்னை கவனித்தாறாம் ..
பிறகு விசயத்தை சொன்னேன்...நிர்வாக சிக்கலை அறிந்து அங்கேயே அட்மிட் போட்டார்கள்..
அப்போ இருந்த CCtv 2016ல் ஜெயா இருந்த போது வேலை செய்யவில்லை...
என்பது வியப்பு...

மம்மி தகவல்கள்

மர உரல்ல கேழ்வரகு.
கருங்கல் உரல்ல நெல்லு,கம்பு.
(தகவல் மை மம்மி)
இனி நம்ம என்ன குற்றவா போறோம் ! மம்மீஸ் சிறுதானிய பாக்கெட்..😂🤑🤔

Social Media Awareness Hazard's.

Social Media Awareness Hazard's.
This year this becomes a big deal for me and it become a great thing for business people.
நொங்கு வாங்க சென்றால் ரேஷன் கடையை விட பெரிய வரிசை (சொந்த ஊருக்கு சென்று சாப்பிட நேர்ந்தது)
Fresh ஜூஸ் கூட்டம்,விலை உயர்வு..
சிறு தானிய உணவுக்கு தட்டுப்பாடு..
செக்கு எண்ணெய் மீண்டும் வீடு வரை வந்து போலிகள் விற்பனை
காலை கூழ் கடையில் கூட்டம்.
கடலை மிட்டாய் தட்டுப்பாடு..
இப்படி மக்கள் சமூக வலைத்தளம் மூலம் விழிப்புணர்வு பெற்று, பெற்ற வேகத்தில்.. கடையில் உள்ளதை காலி செய்து பெரும் தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள்..
பொறுமை மக்களே...
அட்ஷய திரீதி பழக்கத்தையும் குணாதிசயங்களையும் முதலில் கைவிடுங்கள்..
இன்னொரு நாள் வாங்கிக்கொள்ளலாம்
தேவையில்லாத தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை ஏற்றி விடாதீர்கள்..
(Ultimate பீப் fry 10 ரூ விலையேற்றம் இருந்தாலும் கூட்டம்)

Saturday, July 1, 2017

ஜல்லிக்கட்டு ஒரு மல்லுகட்டு

யாரெல்லாம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்குபெறவில்லையோ அவர்கள் எல்லாம் ஒரு வரலாற்று நிகழ்வை அனுபவிக்காமல் நம்மிடமிருந்து பின்தங்கிவிட்டார்கள்..

அந்த உணர்வை உள்வாங்காதபடியால் ...
அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறது ..

இதுலாம் உன்னால முடியாது..என்பது அவர்களது வாதம் ..

ஏன் முடியாது...கரங்கள் இணைந்தால்..தடை கற்களும் தவிடு பொடியாகும் என்கிற நமது நம்பிக்கை அவர்களுக்கு அச்சத்தை தருகிறது...

வெளிநாடுகள் எப்படி வளர்ச்சி அடைந்து இருக்கிறது...
இங்கு இப்படி போராட்டம் செய்தால் எப்படி வளர்ச்சி அடையும் என்பார்கள்..

பல நாடுகள் பல பெரிய புரட்சி போராட்டங்களை கடந்து தான் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.. என்பது அவர்களுக்கு தெரியாது

=====+=

மாநில சுயாட்சி தேவை

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 36 வீடுகள்
அந்த குடியிருப்புக்கென்று ஒரு நல சங்கம் அதற்க்கு ஒரு தலைவர்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குடும்ப தலைவர்.

ஒவ்வொரு வீடுகளில் உள்ள குடும்ப தலைவர்களும் அவர்களது வீடுகளில் நடக்கும் வரவு செலவுகளை கண்காணிப்பார்கள் நிர்வாகிப்பார்கள்.
அவரவர் குடும்பத்தில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அவரவரே முடிவெடுப்பார்கள்்...
தேவையென்றால் அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்களிடம் ஆலோசனையும் பெறுவார்கள் உதவியும் பெறுவார்கள், டீ தூள் ,சக்கரையும் பெறுவார்கள்..

மாதம் ஒருமுறை மாத சந்தாவை குடியிருப்போர் நல சங்கத்துக்கு செலுத்துவார்கள்..
மொத்த குடியிருப்புக்கே பிரச்சனை என்றால் நல சங்கத்தில் பேசி ஒரு முடிவு எடுப்பார்கள் தீர்வு காண்பார்கள்..

அனால் எக்காரணம் கொண்டும் நல சங்க தலைவரை தங்கள் வீட்டில் உள்ள குடும்ப பிரச்னைக்காக அணுக மாட்டார்கள்...
அவரை அனுமதிக்கவும் மாட்டார்கள்.
(பொது பிரச்சனைகளை தவிர்த்து)

இது தான் இந்திய 29+7 மாநிலங்கள் ..

ஆனால் இன்று குடியிருப்போர் நல சங்க தலைவர் அவரது சங்க உறுப்பினர்களுடன் யார் வீட்டிலும் நுழைகிறார்... குடும்ப தலைவரை விரட்டி அல்லது மிரட்டி ..அங்கு இருப்பவர்களோடு குடும்பம் நடத்துகிறார்...

அதை எப்படி அந்த வீட்டில் உள்ளவர்கள் ஏற்பார்கள்...

அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் வாங்கப்படும் மளிகை சாமான்களில் தொடங்கி நாப்கின் வரை கணக்கு கேட்கிறார்... கொடுப்பீர்களா ?

நல சங்கத்துக்கு என்று சில விதிகள் இருக்கிறது.. அதை மீறுபவர்களை தட்டிக்கேட்க மட்டும் தான் அவருக்கு உரிமை இருக்கிறதே தவிர...
மற்றவர் வீட்டுக்குள் புகுந்து அவர் தங்கிக்கொள்ள உரிமையில்லை..

வீடுகளின் உரிமை சுயாட்சியில் இருக்கிறது.

மாநில சுயாட்சியே நாட்டின் வளர்ச்சி..

Krishna Kumar G

எண்ணெய் தாகம்

இதுவரை பல கச்சா எண்ணெய் போர்கள் நடந்துள்ளது... ஒருவேளை தற்போது துபாய் எண்ணெய் எடுக்க அனுமதி மறுத்தால் அந்த நாடு தீவிரவாத நாடு என்று சொல்லி மக்களை அழித்து விட்டு எண்ணெய் எடுப்பார்கள்..
சஹாரா பாலைவனத்தில் வாழ்ந்த மூத்த குடிகளை விரட்டி அழித்து எண்ணெய் எடுக்கிறார்கள்..
சிரியா அழிவிற்கு காரணமே எண்ணெய்தான்...
இந்தியாவிலும் கச்சா எண்ணெய் உள்ளது... முன்பு அதை அரசு மட்டுமே எடுத்தது...
ஆனால் தற்போது தனியாரும் எண்ணெய் எடுக்கிறது...
அவர்களுக்கு முன்னால் விளைநிலங்கள் எல்லாம் எண்ணெய் வளம் தான்..
அது ஒரு வரைப்படம் யமுனை நதி தொடங்கி நம் நாகை வரை எண்ணெய் எடுக்க பல குறியீடுகள் உள்ள வரைப்படம்...
அதற்கான தனியார் ஒப்பந்தங்கள் எப்போதோ முடிந்துவிட்டது...
இன்னும் சொல்லப்போனால் பல இடங்களில் Bore் போட்டு குழாய் பத்திதே விட்டார்கள்...
தமிழகத்தில்
தற்போது அதை எதிர்க்கும் மக்களை தீவிரவாதிகள் என்றும் கூட சொல்வார்கள்..
ஊரைவிட்டு விரட்டுவார்கள்..
2003 , 2004 ஆண்டுகளில் எண்ணெய் எடுப்பதற்கான சோதனை தமிழகத்தில் முழு வீச்சில் நடந்தது...
கடலூர் மாவட்டம் முழுவதும் நடந்ததை நானே அறிவேன்.. சிவப்பு நிறத்தில் ஒரு நீளமான wire வைத்து waves மூலம் blast டெஸ்ட் செய்வார்கள் .எண்ணெய் இருக்கும் ஆழத்தை காட்டிவிடும்.
ஒருவேளை அந்த wire சாலைகளை கடக்கும் போது வாகனங்களை நிறுத்தி விடுவார்கள்..
காரணம் வாகங்களில் உள்ள பெட்ரோல் டீசல் அந்த டெஸ்ட்ல் பதிவாகி விடும்...
ஆனால் அரேபிய நாடுகளில் இருப்பதை போல் இந்தியாவில் எண்ணெய் வளம் பெருமளவில் இல்லை.. இருந்தாலும் கிடைப்பதை எடுக்கிறார்கள்..
என்று தணியும் இந்த எண்ணெய் தாகம்..
நாம் பெருமளவில் மாற்று எரிசக்தியை நாடும் போது....