Friday, June 30, 2017

Fb blocks embrace

இதற்க்கு முன்பு எனது 2 முகநூல் கணக்கை முடக்கிவிட்டார்கள் இது 3வது கணக்கு முன்பு இருந்த கணக்கை வேறு யாருமல்ல
fb நிறுவனமே முடக்கிவிட்டது.

F8 என்கிற நிகழ்வை நான் நேரடியாக fbயிலே ஒளிபரப்பு செய்துவிட்டேன்... அப்போது fb பக்கத்தில் embed code போட்டு வீடியோ ஓட்ட ,கருத்து கணிப்பு நடத்த ஒரு loop hole இருந்தது...
பிறகு அந்த கணக்கை முடக்கிவிட்டார்கள் ..

10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய முதல் கணக்கை ஏன் முடக்கினார்கள் என்று நினைவில் இல்லை... அதுவும் fb நிறுவனமே தான் செய்தது...

தற்போது யார் வேண்டும் என்றாலும் fb யில் Live வீடியோ ஒளிபரப்பு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது...

அப்போது அதை policy violation என்றார்கள்.

Thursday, June 29, 2017

காந்தியை கொன்ற மாசு

அன்று காந்தியை போட்டுதள்ளிவிட்டு
இன்று காந்தி வாழ்க என்று கோடி பிடிப்பவர்கள்
எதையும் செய்வார்கள்
சகிப்பு தன்மை இல்லாததால் ஈவு இரக்கம் என்பதே அவர்கள் மூளைக்கு எட்டாது.

அந்த நச்சு மாசு சமூக மக்களிடம் பரவாமல் தடுப்பதல்ல பிரதான வேலை அதனை முழுமையாக அழித்து விட வேண்டும்..

Crowd mindset is dangerous on greedy things

ஒரு கிராமம் அமைதியா இருந்திருக்கு அங்கே  ஒரு டேங்கர் லாரி வந்து கவிழ்ந்து பெட்ரோல் ஓடிகிறது, அதை மக்கள் தண்ணீர் பிடிப்பதை போல் பிடிக்கிறார்கள்...
தீடீர் என
வெடிக்கிறது.. பிறகு எல்லாம் சாம்பல்...

10 அடிக்குள் இருந்தவர்களின் எலும்பு மட்டுமே மிஞ்சுகிறது

100 அடியில் இருந்தவர்களும் எரிந்து பொசுங்குகிறார்கள்...

முழு வீடியோவும் ஒரு மிக பெரிய Mass crowd மனித தவறை காட்டுகிறது...

.Crowd mindset.... எது செய்தாலும் தவறு என்று தெரியாது...
நாமும் சென்று ஒரு பாத்திரத்தில் பெட்ரோல் பிடிக்கா விட்டால்... நம்மை முட்டாள் ஏமாளி என்று சொல்லிவிடுவார்கள்....
இது லாபத்தில் மட்டுமே பொருந்தும் நஷ்ட்டத்தில் பொருந்தாது..
மத்தவன் எல்லாம் ஒழுங்கா வரி கட்டுறான் நாமும் கட்டினால் என்ன... Crowd mindset வராது... individuality சுய சிந்தனை வேலை செய்யும்...

ஆபத்தில் மீட்பத்தில் தப்பிப்பதில்
Crowd mindset ஒன்றாக வேலை செய்யும்..

எல்லாம் Illuminati இல்லை

எல்லாம் Illuminati எல்லாத்துக்கும் காரணம் Illuminati என்று உன்னை நீயே தாழ்மை படுத்தாதே... மன குழப்பம் கொள்ளாதே...
அப்படி ஒருவன் தற்போது உலகில் இல்லை இருந்தாலும் இருக்கட்டும்,
நீங்கள் Illuminati என்று சொல்லும் யூத இனம் பற்றி அலசி ஆராய்ந்தவன் நான்.
அவர்களை பார்த்து பயப்பட வேண்டியதில்லை...

நீங்கள் அவர்களை பொருள்ளாதார ரீதியில் பார்க்கிறீர்கள்.. பயம் வருகிறது.
நான் அவர்களை war of Gods என்கிற கோணத்தில் பார்க்கிறேன்... எனக்கு அவரகளது் ரூட் map தெரிகிறது...

சரி அது கிடக்கட்டும் இணையத்தில் எப்போதும் இல்லாத
illuminati கம்முநாட்டிகளை பற்றி பேசி நேரத்தை வீண் செய்யாதீர்கள்...

பல வருடங்கள் முன்பு அங்கொன்று இங்கொன்றாக இருத்த illuminati விவாதம் தற்போது இணையம் முழுவதும் பரவி கிடக்கிறது...

நீ துணிந்து மேலே வந்தால் உன் கைகளில் அதிகாரம் ஆட்சி எல்லாம் சிக்கினால் நீ தான் illuminati

இது மட்டும் தான் இதன் முழு கூற்று.

வெறும் 400 ஆண்டுகால அமெரிக்க வரலாறு நமக்கு முன்னால் சிறு தூசு/வெங்காயம்...
அதை நீ உணர்ந்தால் போதும்..

Wednesday, June 28, 2017

பான்பராக் குட்க்கா போதை நதி

பான்பராக் குட்க்கா பெரிய விசியம் பெருசா பேசணும்.இது என்னமோ தமிழ்நாட்டு விசியம் அல்ல தேசிய விசியம் சர்வதேச கடத்தல் விசியம்...மும்பையில் சேட்டுகள் தயாரிக்கிறார்கள்...அங்கிருந்து பயணித்து வேறு மாநிலங்களுக்கு வந்தடைகிறது ..போகிற இடமெல்லாம் அரசியல் வாதிகளுக்கு அரசு அதிகாரிகளுக்கு, காவல் துறை அதிகாரிகளுக்கு , கலால், வணிக வரி துறை customs, சுகதாரத்துறை அதிகாரிகளுக்கு கப்பம் காட்டுகிறது...

இது மட்டும் தானா ?

CBI, IB External Affairs ராணுவ அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி பங்களாதேஷ் நேபாளம் பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் பயணித்து... சிங்கப்பூர் மலேஷியா இந்தோனேஷியா தாய்லாந்து என தெற்காசியா முழுவது பயணிக்கிற இந்திய போதை பொருள்...

இது ஒரு சில்க் ரூட் போன்று பாரம்பரிய பாதை வழி வழிந்தோடுகிற போதை நதி...

இதற்க்கு அடிப்பணியாத அதிகாரிகளுக்கு எளிதில் இடமாற்றத்தை பரிசளிக்கும்..

இந்த போதை பொருளை உண்ட நண்பர்கள் முதலில் வாய் புற்றுநோய்க்கான அறிகுறியுடன் திரிகிறார்கள்...

இதனுடன் கஞ்சாவை சேர்த்து அடித்தவர்கள்.. இதய கோளாறு மனநலம் பாதிப்பு என பல பிரச்சனையுடன் வாழ்ந்து வருகிறார்கள்...

உள்நோக்க சிந்தனை

இதுபோல் சிந்திக்க கூடியவர்கள் தான் உலகத்துக்கே ஆபத்து...
Emotionalலாக பேசி... Sentimentஆக உள்ளுணர்வை தூண்டி... சம்பந்தமே இல்லாத விசியங்களோடு அதற்க்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத செய்திகளோடு முடிச்சி போடுவது...

எதோ நல்லதை சொல்வதைபோல் இது இருக்கும் ஆனால் நம் வாழ்வுக்கும் நடைமுறைக்கும் சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கும்...

பணமதிப்பு நீக்கம் செய்தால் கருப்பு பணம் லஞ்சம் ஒழிந்துவிடும் என்பதை போலத் தான்..

இதுபோல் நம்மாழ்வார்,அப்துல் கலாம்,காந்தி, விவேகானந்தா,anonymous போன்ற படங்கள் போட்டு ஏதாவது செய்தி சொல்லப்பட்டால்... அதன் உள்நோக்கம் என்ன என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்..


Scrambled eggs/kavithaigal /கருத்துகள்.நீ இல்லாத வாழ்வு தான் மிகவும் ரசனை நிறைந்ததாக இருக்கிறது .
நீ இருந்த போது உன் சுமைகளே என் சிந்தனை முழுவது ஆட்கொண்டு இருந்தது..💐

* ஆண்களின் பார்வையில்
என்கிற ஒரு பெண்ணின் சிந்தனையில்
பெண்கள் என்றால் வெறும் ஒரு காம இச்சை பொருள் மட்டுமே..

ஆணின் பார்வையில்
அப்படி என்றால் ஏன் ஒரு பெண்ணை ஒரு ஆண் காதலிக்க வேண்டும் அன்பு காட்ட வேண்டும்..

வெறும் காம இச்சை பொருளாக மட்டுமே பயன்படுத்தி விட்டு சென்று இருக்க கூடாதா ?
என்கிற கேள்வியை போலி பெண்ணியம் பேசுபவர்களுக்கு ஆணின் ஆண்ணியம் பார்வையில் இருந்து

பெண்ணின் பார்வையில்
படும் படியாக
சில கேள்விகள்..
😊

* அப்போ One night stand , Living together பற்றி சொல்ல
எனக்கு தயக்கம் இல்லை..

I've linked my PAN with Aadhaar

I've linked my PAN with Aadhaar
Without changing my name but many can't able to do this.. because of initial differences in both cards that restricts their online inter linking..

If so... Only try to change the name in PAN card don't try to change the name in Aadhaar.. If it's really wrong in Aadhaar entry do it or don't change it because if you once changed name in Aadhaar then that becomes your real identity... That's the main thing your are now going to link everything towards it.
Passport and Aadhaar ,
Bank and Aadhaar,
Driving license and Aadhaar,
Educational certificate and Aadhaar,
House documents, Property documents and Aadhaar,
PAN and Aadhaar
Gas Cylinders and Aadhaar
Electricity and Aadhaar
Cow and Aadhaar

It goes like this... So for just PAN card interlinking don't change the name in Aadhaar .

Try to change the name mistakes only in PAN card or throw your PAN card away and get a new one with Aadhaar entry initials ...

Do you know why I'm saying this...

A family member in my house did this mistake...
And now justifying it...

I want to warn you don't do this same mistakes while interlinking..

Have Liberal views on Cleavage

சினிமாவில் வரும் ஆபாச காட்சியில்/வசனத்தில்/பாடலில் தெகட்டாத மூளை
தொலைக்காட்சி தொடரில்/நிகழ்ச்சியில் வரும் ஆபாச காட்சிகளின் போது மட்டும் திகட்டுவது ஏன்...

நான் இதுபோன்ற சிந்தனைகள் ஆண்களுக்கு மாட்டும் தான் இருக்கிறது என்று நினைத்தேன் அப்படி அல்ல இது பொதுவான சிந்தனை என்று சமிபத்தில் தான் தெரிந்து கொண்டேன்,,,,

Big Boss பரிதாபங்கள்....

நேற்று ஒரு பெண் இணையத்தில் சிறுபிள்ளை தனமாக அந்த நிகழ்ச்சியில் CCTV ஏன் Cleavage தெரியும்படி உயரமாக வைத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார்.....

உடனே ஆண்கள்/நாங்கள்
ஆமாம் சகோதரி நீங்கள் சொல்வது சரி தான் ...
என்று ஒரு ஒழுக்க பின்னுட்டம் இட்டார்கள்/இட்டோம்...

பிறகு மனதில் அடபாவிங்களா எப்ப யாரு Cleavage தெரிஞ்சது ..
நான் பாக்கவே இல்லையே என்று அந்த வீடியோவை இனையத்தில் தேடிப் பார்த்தோம்....

இனி கூர்மையாக கவனமாக இருக்க வேண்டும் ....
அப்போது தான் இதுபோன்ற காட்சிகளை தவறாமல் பார்க்க முடியும்,,, என்று நாங்கள் எங்கள் மனதுக்குள் கட்டளையிட்டுக் கொண்டோம்...
(That's MEN )

உண்மையிலே அதை நாங்கள் கவனிக்கவே இல்லை ...
அந்த பெண் தான் கவனித்து சுட்டிக் காட்டினார் ...

Who told girls were not attracted towards Boobs/Cleavages என்பதை சுளையாக நிரூபித்தார்,

...
Cleavageயில் என்ன இருக்கிறது பார்த்து பார்த்து சலித்து போன ஒன்று தானே ....

அங்கே தானே பால் குடித்தோம் ...
(புட்டி பால் குடித்தவர்களை தவிர்த்து )

ரவிக்கை இல்லாத பெண்களை கடந்தவர்கள் நாங்கள்....
கிராமங்களில்

நகரத்தில் சிக்கியவர்கள் Cleavageல் சிக்கிக்கொண்டார்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு Cleavage ஒரு பொருட்டல்ல...
(காட்டுவதும் பார்ப்பதும் பார்த்துவிட்டு கடந்து செல்வதும்)
....

ஒருவேளை இச்சையோடு யாராவது பார்த்தால் ...
--------- விட்டுப் போகட்டும்...
*********

ஒருவேளை அந்த பொன் பெண் இந்த பதிவைப் பார்த்தால் எங்களுக்கு Cleavage பெரிய விசியமில்லை மேடம் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,,,

CCTV எங்க இருந்தா என்ன ?
சில நேரங்களில் உள்நோக்கத்தோடு கூட வைத்து தான் இருப்பார்கள்....

அதில் தங்களை காட்டுவதற்கு சம்மதித்து தானே அவர்களும் வந்திருக்கிறார்கள்...
காட்டிவிட்டு போகட்டும்....

நாங்களும் நீங்களும் பார்த்துவிட்டு போங்கள்...போகட்டும்...

சலிப்பான வார்த்தை யல்ல
சொல்லி சொல்லி சலித்து விட்டது

+++++++++

புகைப்படத்தில் Cleavage தெரிந்தால் நடிகை தீபிகா படுகோனை,பிரியங்கா சோப்ராவை ஒழுக்கம் காலச்சாரம் பண்பாடு என்கிற பெயரில் இவர்கள் திட்டுவது ....

பிறகு நாங்கள் அப்படி தான் கட்டுவோம் டா அது எங்கள் உரிமை என்று அவர்கள் பதில் சொல்லுவது ...,

இதையெல்லாம் பார்த்து பார்த்து சலித்து விட்டது.....

பிறகு ஏன் இந்த ..... பாசாங்கு CCTV பற்றிய பதிவு என்று தெரியவில்லை....

அது பெண்ணியமா இல்லை இது பெண்ணியமா ?

பாவும் நீங்களே குழம்பி போய் இருக்கீங்க போல....!

###########

பரந்த நோக்கத்துடன் அணுகுங்கள்
Have Liberal views

😂🤣😂😇


Tuesday, June 27, 2017

தீவிரவாத நாடு அமெரிக்க அடிப்பணிகிறது இந்தியா

இந்தியாவுக்கு ஒரு நாடு அல்லது இரண்டு சிறு நாட்டு தீவிரவாதிகளால் மட்டும் தான் பிரச்சனை ஆனா அமெரிக்காவுக்கு பல நாடுகளுடனும் பல நாட்டு தீவிரவாதிகளுடனும் பிரச்சனை...
அவன் பிரச்சனை வேற நம்ம பிரச்சனை வேற..
தீவிரவாத விசியத்தில் நாம போய் அவன் காலில் விழ வேண்டிய தேவை இல்லை...
தீவிரவாதம் என்று பயமுறுத்தி பூச்சாண்டி காட்டி நம்மிடம் ஆயுதங்களை விற்றுவிடுவான்...
நீங்கள் கவனித்து பார்த்தால்
அமெரிக்காவின் கால் சுவடு இல்லாத நாடுகளில் தீவிரவாதமே இருக்காது..
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு தான் உலகில் உள்ள அதி பயங்கர தீவிரவாதி இயக்கம்..
நமக்கு ஆயிரம் உறவு ஆசிய பிராந்தியத்தில் இருக்கு... அதன் நல் உறவை இது சீர் குலைக்கும்...
இந்தியா மிக பெரிய ஜனநாயக நாடு தான் ...
ஆனால் ஜனநாயக வாதியால் ஆளப்படாத நாடு... வெறும் சுய நல வியாபாரிகளால் ஆளப்படும் நாடு..
அமெரிக்கா போன்ற மிக பழமையான ஜனநாயக நாடுகள் நம்மிடம் எளிதில் காய் நகர்த்தி விடுவார்கள்...
தொடர்ந்து நம் சுய அடையாளத்தை அமெரிக்காவிடம் ஒப்பந்தம் என்கிற பெயரில் அடகு வைத்துக்கொண்டே இருக்கிறோம்
( இவையெல்லாம் புரிந்து செயல்படும் சிறந்த தலைவரை பிரதமரை இந்தியா இதுவரை சந்தித்ததேயில்லை...)
பாரதியின் சாதி

ஓடி விளையாடு பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா
காக்கை குருவி எங்கள் ஜாதி.
கேளடா ...மானிடாவா ...எம்மில் கீழோர்..மேலோர் இல்லை.சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னிற் செழித்திடும் வையம்

அந்த கால social media வில் வந்த போஸ்டில் இருந்து சில வார்த்தைகள்.

Friday, June 23, 2017

தமிழ் பாஸ்போர்ட் கடவு சீட்டு

Passportக்கு பொதுவான மொழி என்பது நிறமும் சில குறியீடுகளும் தான்..
அதை தவிர்த்து வேறு எந்த ஒரு மொழியும் பொருட்டல்ல......
1.எந்த மொழியில் இருந்தாலும் ஸ்கேனர் படித்து மொழி மாற்றிவிடும்...
2. Biometric passport ஸ்மார்ட் கார்டு வடிவில் வர இருக்கிறது.அதுக்கு மொழியே கிடையாது. பேசும் மொழி என்பது மூன்றாம் பட்சம்...உடலில் உள்ள அடையாளங்கள் தான் முதல் மொழி
.. விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை...
Biometric scanner நீங்கள் உள்ளே நுழையும் போதே...உங்கள் அடையாளத்தை பதிவு செய்துவிடும்...
Security check மட்டும் தான் நீங்கள் காத்திருக்க நேரிடும்... அதுவும் விரைவில் குறைந்து விடும்...
இந்த நடைமுறைகள் தற்போது உலகில் குறைந்த அளவிலான விமான நிலையங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது..
இதை நன்கு உணர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்...
வெறும் 5 மாநிலங்களில் பேசப்படும் ஹிந்தியை கடவு சீட்டில் பதிய உள்ளார்...
அதன் மூலம் அந்த மொழி பேசும் மாநில மக்களை திருபத்திப்படுத்த உள்ளார்...
அல்லது ஹிந்தியை திணித்து
மற்ற மொழி பேசும் மாநில மக்களின் வெறுப்பை ஈட்ட உள்ளார்..
தேசிய அடையாளமான கடவு சீட்டு இனி... புஸ்தக வடிவில் இருக்க போவதில்லை ...

Thursday, June 22, 2017

Bore அடித்தால் பள்ளிக்கு லீவு

வீட்டுல திட்டு வாங்கி
ஸ்கூல் போகாம கட் அடிச்சி வீட்டுல உட்க்காந்தா
கரெக்ட்ட 9 மணிக்கு கரண்ட் கட் ஆகிடும்...
கரண்ட் எப்ப வரும்
ஏன் இன்னும் வருல என இரண்டு முறை தொலைபேசியில் மின் அலுவலகத்தில் கேட்ட பிறகு
மதியம் கரண்ட் வந்தாலும் கேபிள் வராது...
கேபிள் அலுவலகத்துக்கு ஏன் என்று கேட்டால்
மாலை தான் வரும் என்பார்கள்
DD யில் விழுதுகள் சீரியல் பார்க்க நேரிடும்..
சரி வெளியே போய் விளையாடுலாம்னா எவனும் இருக்க மாட்டான்....
வேற என்ன செய்யுறது...
மதியமாவது ஸ்கூலுக்கு போய்ட வேண்டியது தான் ...
அங்கே போனால் டீச்சர் கேட்க்க உள்ள ் கேள்விகளுக்கு ஏதாவது ஒரு பதில் காரணத்தை கண்டுபிடித்து ...
போய் பொய் சொல்லிவிட்டு வகுப்பில் அமர்ந்தால்...
அருகில் உள்ள நண்பன் உடனடியாக வீட்டுல போர் அடிச்சி தானே ஸ்கூலுக்கு வந்த என்று சரியாக கண்டுபிடித்து விடுவான்...

Wednesday, June 21, 2017

ஓகம் ஒரு கலை

ஒரு ஜிம்முக்கு போறோம்
ஒரு குஸ்தி கத்துக்க போறோம் அதை சொல்லி தரும் நபருக்கு மரியாதை செலுத்துறோம் வணங்குறோம் அவ்வளவு தான்.
அதுக்காக அந்த நபரிடம் நம் சொத்துக்கள் முழுவதையும் கொடுத்துவிட்டு அங்கேயே இருந்து விட மாட்டோம்...
அப்படி தான் செய்யுறாங்க சிலர் ...
யோகா கத்துக்க போறாங்க ஆனா சொத்துக்களை எல்லாம் எழுதிகொடுத்துவிட்டு மொட்டை அடித்துகொண்டு அங்கேயே தங்கி விடுகிறார்கள்...
ஓகம் ஒரு கலை
அதில் மத சாயம் பூசப் படுகிறது
சிலம்பம் ஒரு கலை
அதில் மத சாயம் ஏன் பூசப்படவில்லை ...
விருப்பம் உள்ளவன் ஓகம் கற்றுக்கொள்ளப்போகிறாள்/ன்.
விருப்பம் இல்லாதவன்/ள் Thai Chi கற்றுக்கொள்ளப்போகிறான்/ள்.
ஆனால் உடல் பயிற்சி உடலுக்கு நல்லது அதில் எது சிறந்தது என்பதை விட .. அதில் எது உங்கள் உடலுக்கு ஏற்றது அல்லது உங்களால் எது செய்ய முடியுமோ அதை முடிந்த வரை செய்யுங்கள்...


மகிழ்ச்சியுடன்

சிலர் நேரடியா சுட்டிக்காட்டுறங்க
சிலர் மறைமுகமா குத்திக்காட்டுறங்க,
இந்த இரண்டு விதமான அறிவுறுத்தல்களையும்
ஏற்றுக்கொள்கிறேன்
வரவேற்கிறேன்.
மகிழ்ச்சியுடன்

Building a new Community


We have to build a new Community
I mean it's not about caste in Indian term,


We can get God everywhere at any religion but don't know when this evil discrimination will get away from this society ..
Only way to get away from this discrimination is the way to get away from this religious system.
Still expecting equity equality from this racists society is a unfair thing.

We have to take a last giant step to destroy the caste from this societyMonday, June 19, 2017

சாதியை முதலில் ஒழிப்போம்

சாதியையும் இடஒதுக்கீடும்
வேறல்ல
ஆனால்

சாதி ஒழிப்பு என்பது வேறு
இட ஒதுக்கீடு என்பது வேறு

சாதி ஒழிப்பு என்பது
விருப்பம் உள்ளவர்கள் பங்குகொள்வது

இட ஒதுக்கீடு என்பது
உரிமை உள்ளவர்கள் பெற்றுகொள்வது

சாதியை ஒழிக்கனும்ன்னா
முதல்ல இட ஒதுக்கீடை தூக்கிபோட்டுட்டு வா என்பது

சாதி கொடுமையால் கிடைத்த இட ஒதுக்கீடு உரிமையை
சாதி ஆணவத்தை கொண்டு  மீண்டும் அந்த உரிமையை கீழ் நிலைக்கு தள்ளி சாதிய கட்டமைப்பை சாதி ஆணவத்தை தளைத்தோங்க செய்யும் முயற்சியே ஆகும்.

ஆகவே முதலில் சாதியை ஒழித்து விடுங்கள்
அதன் பின்
இட ஒதுக்கீடு தன்னாலே உங்கள் விருப்படி ஒழிந்து போகும் .

Edited : 21 June 2017

ஜாதியை ஒளிக்காமல்
இடஒதுக்கீடு வேண்டாம்
என்று சொல்பர்களுக்கு.

ஜாதி வேண்டும் ஆனால் இட ஒதுக்கீடு வேண்டாம்.
இதை வெளிப்படையாக சொல்லத்தானே பயப்படுகிறீர்கள்?
Racists

இப்படி நேரடியாக
சொல்லிவிட்டு போங்களேன்

ஜாதி ஒழிப்பு யாகம் நடத்த தயாராக இருக்கிறேன்,
அந்த அக்னிகுண்டத்தில் முதலில் என் ஜாதி சான்றிதழை போடுவேன் இரண்டாவது நீங்கள் போட தயாரா?Sunday, June 18, 2017

தூற்றமல் பாராட்டவும்

நம்ம மக்கள்
எந்த முயற்சியையும் ஊக்கப்படுத்த வருவதில்லை,அதுபோல் அதில் வென்றால் பாராட்டவும் வருவதில்லை ஆனால் அதில் தோற்றால் குறை சொல்லி தூற்ற மட்டும் வருவார்கள்.
ஏன்னா
அவங்க mindset அப்படி.

identification process


First they come as voluntary
Later they make it as mandatory
Aadhaar to all gov identification process

Tamil in Smule app

Smule app பலருக்கு பிடிக்காது...
ஏன்னு நீங்க தான் அவங்க கிட்ட கேட்கணும்..
============
ஆனா இந்த appல ஒரு problem இருக்கு...
இங்கையும் பெண்கள் தான் dominant நமக்கு பிடிச்ச பாட்டை பாட வர மாட்டாங்க...
அதுவே அவங்களுக்கு பிடிச்ச பாட்டுன்னா 10 வாட்டு request அனுப்புவங்க ..
அத நாம கண்டுக்காம விட்டா ... அவ்வளவு தான்..
பசங்க பாடுற மாதுரி பாட்டு smule ல குறைவான மக்கள் தான் பாடி இருப்பாங்க... நீங்க வேணும்னா check பண்ணி பாருங்க..
இந்த முன்பே வா, கண்ணலானே ,, மாதிரியான பாடல்களை முதல் நாளிலே பல பெண்கள் பாடி இருப்பாங்க...
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே மாதுரி ஆண்கள் solo வ யாரும் பாட மாட்டுறங்க...
ஒரு சில பெண்கள் தான் ஆண்கள் சோலோவை முயற்ச்சி செய்யுறாங்க...
இதே பெண்கள் solo வை ஆண்களை பாட வச்சி ரசிக்கிறாங்க.../அட்டகாசம் பண்ணுறாங்க...
என்ன பண்ணுறது எங்களுக்கும் வேற வழியே இல்ல...போல

லிங்க்


World's best sex education

World's best sex education is taught at Norway schools... Search and watch that video.
We can't even reach half of that level but we have to try our best...
Once in ancient age we had same type sex education but don't know how it got vanished away..


illusion of Black Money Dramas

2009 They gave a data CD to Pranab Mukerji
Congress said they will keep that secret and will take action ...
But he became President... No, Everyone made him to become president..
Later BJP said we will bring black money to India using that details
But they used that details for threatening persons in name of CBI raid and got bribe from them or made them to do political dramas..
2019 next election ... We will burn that illusion of Black Money Dramas..


திராவிட கலப்பு மொழி

நான் தமிழில் தான் கவிதை எழுதுகிறேன்,ஆனால் நான் தமிழில் தான் எழுதுகிறேன் என்று என் கவிதைகளில் சொல்லியது கிடையாது.
சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது.
திருக்குறள் தமிழில் தான் இருக்கிறது
இருந்தாலும்
திருக்குறளில் தமிழ் என்கிற சொல் குறிப்பிடப்படவில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.
சங்க இலக்கியத்தில் திராவிடம் என்கிற சொல் கிடையாது...
என்று சொல்பவருக்கும் இதே பதில் தான்.
ஆனால் இது சற்று வேறுபடும்.
தமிழ் தமிழன் என்றால் ஒரு இனம் ஒரு மொழிக்குள் அடங்கிவிடும் ..
திராவிடம் என்றால் பல இனம் பல மொழிகள் இருக்கிறது...
பொதுவாக திராவிட இனம் என்கிற ஒற்றை சொல்லில் தற்போது விலிம்பினாலும் அது மொழி அடிப்படையில் ஒற்றை இனம் கிடையாது...
எப்படி தமிழன் என்றால் ஒரு தேசத்தை சேர்ந்தவன் இல்லையோ... அதுபோல...
என்னது ஒரு தேசத்தை சேர்ந்தவன் இல்லையா என்றால் ஆமாம் ...சேர சோழ பாண்டியன்... மூன்று தேசம்..
அதுபோல திராவிடத்தில் பல தேசம் பல மொழி பல இனம் ஆனால் ஒரே ஒற்றை பெயர் திராவிடன் ...
இதில் கலப்பு அதிகம்...
வட தேசத்தில் இருந்து இவனை வரலாற்று ரீதியில் தனித்து காட்டவே திராவிடன் ..என்று வரலாற்று ஆசிரியர்களும் மற்றும் பல வட நாட்டு எழுத்தாளர்களாலும் சொல்லப்படுகிறது...
இந்த நிலப்பரப்பில் குறிப்பாக பல தேசங்கள் இருந்தது ...அப்படி அதில் ஒரு தேசத்தில் இருந்தவன் எப்படி மற்ற தேசத்தில் இருப்பவனோடு தன்னை இணைத்து திராவிடன் என்று சங்க இலக்கியத்தில் எழுதி இருக்க முடியும்...
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக தான் இருந்தது...
ஆனால் தற்போது பிரிந்து விட்டது...
ஒரு காலத்தில் பாகிஸ்தான் மக்கள் இந்தியர்கள் தான்...
அதற்காக தற்போது அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்வார்களா அல்லது.. நீங்கள் தான் அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா ? ...
வரலாற்றை உங்கள் கூற்றால் திரிக்க முயறசிக்காதீர்கள் ...
(இன்னும் நிறையா சொல்லுறேன் ஆனா type அடிக்க முடியல)
இந்த மண்ணில் நெல் பயிர்யிட்டு உண்ண தொடங்கிய காலத்திற்கு பின்பே சமஸ்கிருத மொழி பேசுபவர்கள் வந்ததாக செய்தி ஒன்றை மரபணு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் it reshaped our society in fundamental ways என்பது இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியர் சேர்த்து போட்ட பிட்டு...
Actually it separated people from mixing of genes... Is it a fundamental way ?
அந்த பதிவின் லிங்க்
கீழே லிங்க் ஆங்கிலத்தில் இருக்கிறது

http://www.thehindu.com/sci-tech/science/how-genetics-is-settling-the-aryan-migration-debate/article19090301.ece?homepage=true


Friday, June 16, 2017

தமிழனா திராவிடனா

நான் தமிழில் தான் கவிதை எழுதுகிறேன்,ஆனால் நான் தமிழில் தான் எழுதுகிறேன் என்று என் கவிதைகளில் சொல்லியது கிடையாது.
சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது.
திருக்குறள் தமிழில் தான் இருக்கிறது
இருந்தாலும்
திருக்குறளில் தமிழ் என்கிற சொல் குறிப்பிடப்படவில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.
சங்க இலக்கியத்தில் திராவிடம் என்கிற சொல் கிடையாது...
என்று சொல்பவருக்கும் இதே பதில் தான்.
ஆனால் இது சற்று வேறுபடும்.
தமிழ் தமிழன் என்றால் ஒரு இனம் ஒரு மொழிக்குள் அடங்கிவிடும் ..
திராவிடம் என்றால் பல இனம் பல மொழிகள் இருக்கிறது...
பொதுவாக திராவிட இனம் என்கிற ஒற்றை சொல்லில் தற்போது விலிம்பினாலும் அது மொழி அடிப்படையில் ஒற்றை இனம் கிடையாது...
எப்படி தமிழன் என்றால் ஒரு தேசத்தை சேர்ந்தவன் இல்லையோ... அதுபோல...
என்னது ஒரு தேசத்தை சேர்ந்தவன் இல்லையா என்றால் ஆமாம் ...சேர சோழ பாண்டியன்... மூன்று தேசம்..
அதுபோல திராவிடத்தில் பல தேசம் பல மொழி பல இனம் ஆனால் ஒரே ஒற்றை பெயர் திராவிடன் ...
இதில் கலப்பு அதிகம்...
வட தேசத்தில் இருந்து இவனை வரலாற்று ரீதியில் தனித்து காட்டவே திராவிடன் ..என்று வரலாற்று ஆசிரியர்களும் மற்றும் பல வட நாட்டு எழுத்தாளர்களாலும் சொல்லப்படுகிறது...
இந்த நிலப்பரப்பில் குறிப்பாக பல தேசங்கள் இருந்தது ...அப்படி அதில் ஒரு தேசத்தில் இருந்தவன் எப்படி மற்ற தேசத்தில் இருப்பவனோடு தன்னை இணைத்து திராவிடன் என்று சங்க இலக்கியத்தில் எழுதி இருக்க முடியும்...
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக தான் இருந்தது...
ஆனால் தற்போது பிரிந்து விட்டது...
ஒரு காலத்தில் பாகிஸ்தான் மக்கள் இந்தியர்கள் தான்...
அதற்காக தற்போது அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்வார்களா அல்லது.. நீங்கள் தான் அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா ? ...
வரலாற்றை உங்கள் கூற்றால் திரிக்க முயறசிக்காதீர்கள் ...
(இன்னும் நிறையா சொல்லுறேன் ஆனா type அடிக்க முடியல)

ஊழலில் ஆண் என்ன பெண் என்ன

ஒரு பெண் தலைமை அதிகாரியாக ஏதாவது ஒரு அரசு துறையில் வரும்போது அந்த துறையில் தேக்கமும் பின்னடைவும் ஊழலும் வெளிப்படுகிறது,
அதுவே தனியார் துறையில் சாதனையாக மலருகிறது...
ஆண்கள் ஊழல் வாதி இல்லை என்று சொல்லவில்லை...
ஆனால் பெண்களும் நாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று தான் இந்த விசயத்தில் நிரூபிக்கிறார்கள்...
போதாத குறைக்கு ஆண்களை விட மிகவும் அப்பட்டமான ஊழல் வாதியாக நடந்துக்கொள்கிறசர்கள்...
ஏன் இந்த பெண்களால் ஒரு மாற்றத்தை தர முடியவில்லை...(அரசு துறை)
ஒருவேளை நாம் அவர்களிடம்் அதிகமாக எதிர்பார்த்து விட்டோமோ...?
ஆண் என்கிற திமிரில் காழ்புணர்ச்சியுடன் பேசுகிறேன் என்று என்ன வேண்டாம்..
உண்மையில் அப்படி தான் இருக்கிறது..
ஊழலில் பாலினம் கிடையாது அது அனைவருக்கும் பொதுவானது என்பவர்கள் ... என் பின்னால் வரவும்..

சைக்கிள் ஓட்ட ஆசை படுகிறேன்

தீடீர்னு கொஞ்ச நாளா சைக்கிள் ஓட்டனும்ன்னு ஆசை. இந்த அஜித் ஆர்யா ஓட்டுற சைக்கிள் எவ்வளவுன்னு கேட்டேன் லட்சம் ரூபாய்யாம்.
அதுபோல் பயன்படுத்திய சைக்கிள் எவ்வள்ளோன்னு பார்த்தேன் TVS Star city பைக் விலை..
(நமக்கு செகண்ட் hand எப்பவும் செட் ஆகாது)
சாதாரண சைக்கிள் ஆரம்ப விலை எவ்வளவுன்னு கடையில கேட்டேன் 4000 -5000 மாம்.
7 வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுல இருந்த இரண்டு சைக்கிளையும் இலவசமா கொடுத்துட்டேன்...
எங்க அப்பவுடைய பழைய கால சைக்கிளை மட்டும் அவர் ஞாபகமா இன்னும் வச்சி இருக்கேன்...
இப்ப புது சைக்கிள் வாங்கலாமா இல்ல அதையே ரெடி பண்ணி ஓட்டுலாமா ? ஒரே குழப்பமா இருக்கு ... 😊

If GST was possible then why not Minimum Wages can't

Don't know how they calculate GST Tax.
But I know now all over India has the same single tax system according to GST.
Let it be ...
Whats the Minimum wage for the labourers all over India ?
Is it same all over India ?
No it differs according to states ... some states has very low minimum wages for the same skilled person residing to its neighbouring states ...
Delhi's minimum wages is different from Karnataka's minimum wage.
and also central gov defines minimum wages every year (Minimum wage act) which is sometimes lower than the minimum wages of some states .... ironic isn't it ?
Like GST why can't they bring MWS (Minimum Wage Scale) MWR (Minimum wage Rate) all over India .
In some countries Minimum wages are defined in Hour basis ,In India we do this in day basis .

மக்கள் கிட்ட இருந்து பிடுங்க மட்டும் ஒரே கொள்கை GST
மக்கள் கிட்ட திருப்பி கொடுக்க இல்லை ஒரு கொள்கை !
என்ன சொல்ல

Krishna Kumar G

Thursday, June 15, 2017

கேட்ட வார்த்தையும் கற்று மற.

களவும் கற்று மற.
கேட்ட வார்த்தையும் கற்று மற.
அகராதியில் தேடினாலும் கிடைக்காது.
வீட்டிலும் கேட்க முடியாது.
நண்பனே தோழியே அவ் வார்த்தைகளுக்கு குருவாக இருப்பர்.
சின்ன புள்ளைங்க வீட்டில் கொஞ்சம் நாகரிகமான கேட்ட வார்த்தை பேசுறாங்கன்னா ,அவங்களுக்கு இன்னும் 10 மோசமான கேட்ட வார்த்தை தெரியும்ன்னு அர்த்தம்....அதை வெளியில் நண்பர்களிடம் மட்டும் தான் பேசுவார்கள்.
அந்த புரிதல் அவர்களுக்கு இருந்துவிட்டாலேயே பெரிய விசியம் தான்.
காதலன் காதலியை
'ஹே லூசு இங்க வாடி ' என்றால்
லூஸும் கேட்ட வார்த்தை என்று இல்லை
அது பிரியமாக செல்லமாக அழைக்கும் வார்த்தை...
வீட்டில் கணவன் மனைவி சண்டை போடும் போது .... பேசாத கேட்ட வார்த்தையை விடவா வேறு வார்த்தைகளை புதிதாக பிள்ளைகள் வெளியில் கற்றுவிட போகிறார்கள்...
சிலர் வீட்டில் மட்டும் தான் கேட்ட வார்த்தைகளை பேசுவார்கள் வேளையில் பேச மாட்டார்கள்...
பலர் வெளியில் பேசுவார்கள் வீட்டில் நல்ல பிள்ளையை போல் இருப்பார்கள்..
நான் அப்படி இல்ல நான் எங்கும் பேசியதே இல்லை என்றால் .. உங்களை யாரும் நம்ப போவதில்லை.... அது பொய் என்பது உங்களுக்கே தெரியும்..
எப்ப எங்க என்ன வார்த்தைகள் பேசணும் .. என்பதை தெரிந்துகொள்ள ...
பிள்ளைகளுக்கு சொல்லி தரவேண்டும்...
இதை புரிந்துகொண்டால் வெளியில் லூஸ் டாக் விட்டு தர்ம அடி வாங்காமல் உங்கள் பிள்ளைகள் தப்பிக்கலாம்...
இது தான் களவும் கற்று மற...
========
உதாரணத்துக்கு உங்கள் பிள்ளை ஒரு செய்தி சேனலில் இருந்து கற்கும் கேட்ட வார்த்தை .
ஜெ தீபா : எச்சக்கல , பொருக்கி ,புறம்போக்கு,
அதுவே ஒரு குழாய் அடி சண்டையில் கற்கும் வார்த்தை....
Xyz
மீதி என் வலை பூவில்....
Hey no bad words...
Same blood..
அட ச்சி கம்முன்னு கிடன்னா இப்படி ஒரு பொன்னான வார்த்தைகள் வெளிப்பட்டு இருக்குமா ? ..
Regional கேட்ட வார்த்தைகள்
Area based கேட்ட வார்த்தைகள்
என்று இருக்கிறது...
அவர்களுக்கான பாணியில் சும்மா புகுந்து விளையாடுவார்கள்....
ஒரு ஏரியாவில் பயன்பாட்டில் இருக்கும் கேட்ட வார்த்தை இன்னொரு ஏரியாவில் சர்வ சாதாரண வார்த்தையாக இருக்கும்...
Deep analysis in கேட்ட வார்த்தைகள்
Research scholar in கேட்ட வார்த்தைகள்
Neural technology in
கேட்ட வார்த்தைகள்
என் பிள்ளை அப்படி கிடையாது லண்டன் பள்ளிக்கூடத்துல படிக்கிறான் என்றாலும்...
அவன் கேட்ட வார்த்தைகளில் பெரிய expert டாக தான் இருப்பான்...
என் பிள்ளைக்கு கேட்ட வார்த்தைகள் தெரியாது என்பதெல்லாம்
உங்க மன பிராந்தி
சினிமாவில் கேட்ட வார்த்தைகள்
ஐ படத்தில் ..
Xyz
என்ன மேடம் நம்ம கிட்டேவா
Confined....

Tuesday, June 13, 2017

இயல்பு பேதைமை நிலைகள்

ஆழ்நிலை உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை முழுவதும் மறைத்து அதை அழகாக மெருகேற்றி சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பக்குவப்படுத்தி புரிந்து பேசுவது இயல்பு நிலை....
(எப்பா எவ்வளவு கஷ்டம்.)
உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக அப்படியே எந்த ஒரு மாறுதலும் இன்றி பேசுவது பேதைமை நிலை...
தற்போது இந்த இரு வித்தியாசங்களை நாம் எப்படி இயல்பாக புரிந்து கொண்டோம் என்று தெரியவில்லை...
ஆனால் வரும் காலங்களில் 2வது நிலை தான் பிரதானமாக இருக்கும்.
இந்த மாறுதல் தொழிநுட்ப வளர்ச்சியால் இந்த உலகம் மீண்டும் ஒருமித்து செயல்படுவதால் நிகழும் ..
இந்த பதிவு எல்லாருக்கும் புரியாது...
ஆனா அவ்வப்போது இதுபோல் தொடரும்

Sexual selection and Body Shaming in Feminism Lets talk about it

இப்ப தமிழ் பெண்ணிய வாதிகள்
body shaming பற்றி பேசுகிறார்கள்
அல்ல
Sexual selection பற்றி பேசி பலரை Body shaming செய்து வருகிறார்கள்்.
இவர்களுக்கான counter attack அவர்கள் பாணியிலே தயாராக இருக்கிறது...
====
(தனக்கான குழந்தை எப்படி பிறக்க வேண்டும் என்று யூகித்தே அழகான அறிவான ஆண்களை தேர்ந்தெடுக்கிறார்களாம் )
குறிப்பாக 6 pack இருக்க வேண்டுமாம்..
பிறகு ஓர் இரு நடிகர்கள் பெயரை சொல்லி அவரை போல் இருக்க வேண்டுமாம்...
÷÷÷÷÷÷
(ஒருவேளை நீயா நானாவில் இது தான் இந்த வார தலைப்போ ? நமக்கு டிவி பார்க்க நேரமில்லை)
சும்மா ஆடாதே ?
×××××
பொறுத்து இருந்து பார்ப்போம் இன்னும் என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்று |

------

ஒரு பெண் ஏதாவது துறையில் சாதனை படைத்தால்் automatica தன்னாலே அவங்கள பெண்ணியவாதின்னு சர்வ சாதாரணமாக சொல்லிடுறாங்க...
அவங்களும் அந்த நிலைக்கு தள்ளப்படுறாங்க
÷
யாராவது அவங்கள ஒரு வார்த்தை கேட்டிங்களா ?
அவங்களும் பெண்ணியவாதின்னா பெண்கள் சமுதாயத்துக்கு கொடுக்கப்படுற/கிடைக்கிற அங்கீகாரம் பட்டம்ன்னு நினைச்சிக்கிறாங்க..
பெண்ணியவாதிகள் மட்டும் தான் பெண்கள் உரிமைக்காக போராடுவங்க எங்கிற எண்ணமும் இங்கு பரவலா இருக்கு..

Thursday, June 8, 2017

விபாச்சார உலகில் உன் உழைப்பும் பனாமும் பத்திரம்

தென்கிழக்கு ஆசியாவில் விபச்சாரம் என்பது சர்வசாதரான நிலையில் உள்ளது.இதை நடத்துவது பெரும்பாலும் சீனர்கள்.இதற்க்கு பலியாவது இந்தியர்கள்,குறிப்பாக சொல்லப்போனால் தமிழர்கள்.
கடினமாக உழைத்த பணத்தில் வாரம் 20$ விபச்சாரத்துக்கு செலவு செய்கிறார்கள் ..
போதாத குறைக்கு அங்கும் ஹான்ஸ் (புகையிலை) எளிமையாக கிடைக்கிறதாம்...
(சூதாட்டம்,)
சரக்கும் ஹன்ஸ்சும் பெண்ணும் என்று தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகிறார்கள்....
இதற்க்கே இந்த நாடுகளில்
இவை அனைத்தும் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிட தக்கது...
சீனார்களை போல் இருக்காதீர்கள்
கொரியாவை சேர்ந்தவனைப் போல் உழைக்க விரும்புங்கள்...
உங்கள் பணம் தான் இந்த நாட்டை காப்பாற்றுகிறது .

Wednesday, June 7, 2017

கையேந்தும் figureகள்Aavoji Aavoji Kaavoji Kaavoji
Ithuthaandaa Ithuthaandaa Paavbaaji Paavbaaji
Paanmittaai Rasagulla Kaaju Sweetu Batham Halwa
Beedaavatthaan Vaayula Pottu Thuppuvomndaa Ooru Fullaa
நேற்று நானும் என் நண்பனும் "இன்றைய சென்னையும் அதில் இளைஞர்களின் இன்றைய பரிதாப நிலையும்" என்கிற தலைப்பில் பேசினோம்...
அப்படிலாம் ஒன்னும் பெருசா இல்லைங்க ...
ரம்பா ப்ரீயா casualல personalலா நிறையா விசியம் பேசினோம்.
ரம்போ personalலா இருக்கும் இல்லன்னா அசிங்கமா இருக்கும் , இதுக்குமேல் படிக்க விரும்பாதவர்கள் ...இந்த வரியோடு நிறுத்தி விடலாம்....
(இது பொது விவாதத்துக்குரியது அல்ல)
சொல்லலாமா வேணாமா என்று யோசித்து பார்த்தால் சொல்லி தானே ஆகனும் இன்றைய இளைஞர்களின் பரிதாப நிலையை...
நண்பன் :- கிருஷ்ணா சென்னை முந்தி மாதுரி இல்ல ...என்று வழக்கமாக பேசுபவர்களை போல் பேச தொடங்கிய நண்பன்.
சித்தாளுக்கும் ITல வேலை செய்யுற பெண்களுக்கும் வித்தியாசமே தெரியால என்றான்...
ஏன் என்றேன்
எங்க ஏரியா புல்லா பெரிய பெரிய கட்டிட வேலை நடக்குது
அங்க வேலை செய்யுற
சித்தாளுங்க மாலை 6 வரைக்கும் வேலை செஞ்சிட்டு T shirt Jeans போட்டுக்கிட்டு Mallலுக்கு வந்துடுறாளுங்க ...யாரு சித்தாள் யாரு படிச்ச பொண்ணுனே தெரிய மாட்டிங்குது ...
உண்மைய சொல்லப்போனால் அவளுங்களை விட இவளுங்க தான் செமயா இருக்காளுங்க...
என்ன ஒரே வித்தியாசம் ...
இவளுங்க கழுத்துல tag போட்டு இருப்பாளுங்க ...
Tag மட்டும் இல்லன்னா அவளுங்க தான்...
அதுக்காக இவளுங்க எங்க போனாலும் Tag மாட்டிகிட்டு தான் சுத்துறாளுங்க..
..........
7 -8 வருசத்துக்கு முன்னாடி சோளிங்கநல்லூர்ல கையேந்தி பவன்ல சாப்பிட ஆள் இருக்காது ....
ஆனா இன்னைக்கு முத்திர சந்துல இருக்கிற கடையில கூட பொண்ணுங்க கூட்டம் அலை மோது ...
வழக்காமா சாப்புடுற கடையா இருந்தா கூட அங்க போய் சாப்பிட கூச்சமா இருக்கு ...
அவ்வளோ பொண்ணுங்க கூட்டம்
வழக்கமா பெரிய ஹோட்டல், மால் , அங்க தான் சாப்பிட்டுகிட்டு இருந்தாளுங்க இப்ப என்ன ஆச்சின்னு தெரியல எல்லா figureறும் கையேந்தி பவனுக்கு வர ஆரம்பிச்சிட்டாளுங்க...
பாக்குறதுக்கு செம ரிச்சா இருக்காளுங்க ஆனா
முத்திர நாத்தம் அடிக்குது அங்க நின்னு சாப்பிடுறாளுங்க ...
நான் :- ஏண்டா முந்தி மாதுரி பசங்க வாங்கி தருறது இல்லையா ?
அவன் :- இங்க எவானுக்கு வேலை இருக்குது ...அப்படியே இருந்தாலும் எவனுக்கு சம்பளம் ஒழுங்கா வருது ...
இதுல figureலாம் maintain பண்ண முடியாது ...
அது அவளுங்களுக்கு கரெக்ட்டா புரிஞ்சி இருக்கு ...
.......
இப்படியே பல முக்கிய விசியங்களை பற்றி பேசினோம் ...
(சென்னை பசங்க மனசுல என்ன இருக்குன்னு பெண்களுக்கு ஒரு Hint)
ஆது பற்றி என் வலைப்பூவில் விரிவாக பேசுறேன்....
இப்ப பசிக்குது ஹோட்டலுக்கு போறேன்...
bye
------
Nambalkki Kadalur City Nimbalkki Meter Vatti
Vatti Katti Vatti Katti
Kizhinji Pøchi Ènga Vetti
Vaanga Thimbøm Kaanja Røti
Høli Vanthaa Cøløru Køtti
Kastapattu Løveu Pannaa
Kazhatti Viduvaa Raaki Katti
Krishna Kumar G