Friday, May 26, 2017

கல்வியும் கடனும் = கல்விக் கடன்

கல்வி கடன் வங்கிகள் தாராளமாய் தருவதாக கூறுகிறார்கள் முதலில் அதுவே ஒரு பொய்....

அப்படி மாணவர் ஒருவர் பயிலும் கல்வி ஆண்டில் வாங்கப்படும் கல்வி கடனுக்கு ...
கடன் வாங்கிய முதல் நாளில் இருந்தே வட்டியை நிர்ணயம் செய்து விடுகிறார்கள் அது சட்டப்படி தவறு ..

கல்வி கடன் பெற்ற மாணவர் படித்து முடித்த பிறகு ..

வேலை கிடைத்தால் 6 வது மாதம் முதல் தான் வாங்கிய கல்வி கடனுக்கு முதல் வட்டியே போட முடியும்..

அல்லது வேலை கிடைக்காத பட்சத்தில் ஒரு வருடம் கழித்து தான் முதல் வட்டியே போட முடியும்...

ஆனால் வங்கிகள் கல்லூரியில் மாணவர் சேர்ந்த பொழுது கல்வி கடன் பெறப்பட்ட நாள் முதல் வட்டியை போடுகிறார்கள்....
அதாவது மாணவர் பயிலும் போதே அவர் தலை மீது வட்டி சேர்ந்து விடுகிறது,,,
நான்கு ஆண்டுகள் கல்லூரியில் பயிலும் போது ஒருவரால் எப்படி கடனை அடைக்க முடியும் ...
(இப்படி சட்டமே கிடையாது ஆனால் வங்கிகள் இந்த நடைமுறையை பின்பற்றுகின்றன..)

 இதுகுறித்து எந்த நபர்களும் சரியான புரிதலோடு பேசியதாக தெரியவில்லை....

இந்த கல்வி கடன் கொள்கையே HRD Ministry யின் கீழ் வருகிறது..

வங்கிகள் Finance Ministry கீழ் இயங்குகிறது ...

இந்த தூர இடைவெளியை வங்கிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டு அப்பாவி மாணவர்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகிறார்கள்...

வங்கிகளிடம் இருந்து
கல்வி கடன் பெறுவது மட்டும் தான் பொது பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது ...
ஆனால் அந்த கடனுக்கான வட்டிக் கொள்கையை யாரும் கண்டு கொள்வதில்லை...

கடனை திருப்பி செலுத்த முடியாத மாணவர்கள் வெளிநாட்டில் கிடைக்கும் வேலைக்கு கூட செல்ல முடியாது என்பது வேதனையான விசியம்...

இன்னும் பேசலாம் .....
(உங்களுக்கு தெரிந்த தகவல்களை சொல்லவும்)

Krishna Kumar G