Monday, May 1, 2017

திராவிட அரசியல் மேலோட்ட பார்வை

திராவிடம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
To know more about Dravidam click here நீதிக்கட்சி , திராவிட கழகம் போன்ற இயக்கங்களின் கொள்கைகளை அதன் தொடர்ச்சியாக வந்த திமுகவால் பாதி குறைந்தது அதிமுகவால் முழுவது காணாமல் போனது.
குறிப்பாக ஜெயலலிதா பதவிக்கு வந்த போதே திராவிட கட்சிகளின் கொள்கைகள் காற்றில் போனது.
அதன் பிறகு இந்த நாட்டில் இருப்பது வெறும் கவர்ச்சி அரசியல் மட்டும் தான்
திராவிட அரசியல் என்பது வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளது.
அதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.
அப்பனுக்கு பிறகு சித்தப்பன்
மகனுக்கு பிறகு பேரன்
மச்சானுக்கு பிறகு மருமகன்
என்று

50 ஆண்டு கால திராவிட அரசியல் சமுக பெரும்பான்மை வாதத்தை ஊக்குவித்தது.
இனி மதவாதத்தை ஊக்குவிக்குமா ?
என்கிற சந்தேகம் தற்போது அனைவருக்கும் உள்ளது

அதை  விடமாட்டேன் என்கிறது தற்போதைய இளைஞர் அமைப்புகள்

(திராவிட அரசியலுக்கு வித்திட்ட பெரியாரின் சாதிய ஒழிப்பு கொள்கையே இன்றைய திராவிட கட்சிகளின் அரசியலிலேயே இல்லை)

திமுகாவில் நாத்திகம் பேசும் தலைமை இனி இல்லை.
இணையத்தில் பேசுபவர்களை தவிர

ஆனால் இதை பயன்படுத்தி ஜாதிய மதவாத அமைப்புகள் உள்ளே நுழைந்துவிட கூடாது , என்பதிலும் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

திராவிட நிலத்தின் பண்புகள் வேறு
அதில்
தற்போது இருக்கும்
திராவிட கட்சிகளின் கொள்கைகள் வேறு
(முரண்)
----------

Edited 26 May 2017

திராவிடம் திராவிடன் பற்றி உங்களுக்கு நான் ஏற்க்கனவே சொல்லி இருக்கிறேன் ...
திராவிட நிலப்பரப்பில் பல மொழிகள் இருந்தாலும் அதில் சில மொழிகளே பிராதானமாக உள்ளது ...
தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு,மலையாளம் ...etc

தற்போது தமிழர் வாழும் நிலப்பரப்பில் தமிழ் பிராதான மொழியாக இருக்கிறது...
திராவிட நிலப்பரப்புக்குள் இருக்கும் இந்த மொழிகள் நிலப்பரப்பை மாற்றி பயனித்தற்க்கான அடையாளங்களும் இருக்கிறது ...
(அது நிலத்தை ஆண்ட அரசனை பொறுத்து அமையும்)

சரி இது கிடக்கட்டும் ....

தற்போதைய காலத்த்துக்கு வருவோம்.....

யார் நிஜமான தமிழர் என்றால்
அல்லது யார் தான் தமிழ் மொழியின் மூத்த குடிகள் என்றால் பெரும் குழப்பம் தான் வரும்...

(அதை கூட விரிவாக பேசலாம் ஆனால் நேரம் போதாது, இதையும் ஓராமாக வைத்துவிட்டு புதிய கதைக்கு வருவோம்)

சவுக்கார் பேட்டையில் சில நூற்றாண்டுகளாக சேட்டு இனம் வாழலாம்..... ஆனால் அவர்கள் தமிழர்கள் இல்லை
அவர்களும் அதை விரும்புவதில்லை

இன்னும் பல ஜாதிகளை எடுத்து பேசுவேன் ....
ஆனால் பசங்க தப்பா புரிஞ்சிப்பாங்க ....

என்னாடா இவன் ஜாதி இல்லைன்னு சொல்லுறான் ஆனா ஜாதியை பற்றி பேசுகிறான் என்று ....

இருந்தாலும் மாற்றம் வேண்டும் என்றால் சொல்லித் தானே ஆகணும்... அப்போது தானே புரிதல் வரும்...

இன்றைய குழப்பத்திற்கு பெரும் காரணமே கிருஷ்ணா தேவ ராய அரசன் தான் ...

தமிழகத்தில் வரி வசூலிக்க சில இன குழுக்களை அனுப்புகிறான் ....

அந்த குழுக்களின் மொழி தெலுங்கு என்றாலும் அவர்கள் இங்கே வந்த பிறகு சில ஆண்டுகளிலே அந்த ஆட்சி முடிகிறது...

அது முடிந்தது கூட தெரியாமல் மக்களிடம் தொடர்ந்து வரி வசூல் செய்தவர்கள் , பெரும் பொருளை ஈட்டி...இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள்...

பிறகு காலப்போக்கில் அவர்கள் தாய் மொழி தெலுங்கை மறந்து தமிழை தழுவுகிறார்கள்....

தற்போதைய காலக்கட்டத்தில் இவர்களில் சிலருக்கு தெலுங்கு தெரியும் ...ஆனால் பலருக்கு தமிழ் மொழிதான் தாய் மொழி என்று எண்ணி இருக்கிறார்கள் ...

இவர்கள் சொத்துகள் எல்லாமே தமிழகத்தில் தான் இருக்கிறது...

( இவர்களும் வழக்கம்போல்  பிற ஜாதிகளில் திருமணம் செய்வதில்லை ...)

தற்போது இவர்கள் பேசும் தெலுங்கும் ...ஆந்திராவில் பேசும் தெலுங்கும் வேறு படும்...

இந்த சூழலில் இவர்கள் தெலுங்கா தமிழரா என்கிற  குழப்பம் அவர்களுக்குள்ளே வரும்.....

------
இதேபோல் பல குழுக்கள்  தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் ...உதாரணத்துக்கு மேலே ஒரு குழுவை பற்றி சொல்லி உள்ளேன் ....
-----
சோழ மன்னர்களும் சில தவறுகளை செய்து இருக்கிறார்கள்...

அந்த தலைப்பை எல்லாம் எடுத்தால் நேரம் வேஸ்ட் ...

ஆகவே தற்போதைய காலத்திற்கு நாம் வர வேண்டும் ....

ஜாதி மொழி என்று எல்லாவற்றையும் தாண்டி நல்ல மனிதர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும் ...

ஆனால் சினிமா கார்கள் வேண்டாம் ....(இதற்க்கு காரணம் இருக்கிறது)

இவர்களை சும்மாவே நாம் பார்க்க முடியாது ...

MLA வாகவோ CM ஆகவோ ஆகிவிட்டால் நாம் அவர்களிடம் நெருங்கவே முடியாது ....

மீண்டும் திரையில் தான் பார்க்க முடியும்....

Krishna Kumar G