Friday, May 26, 2017

Whats the purpose of life ?

Whats the purpose of life ?
No one can give the right answer
Same way no one can define which is the right answer .
So this is the question
Which has no answer according to human thoughts, it's beyond human capability of thinking
nature.. Just carry forwards eat drink sleep f*ck from generations to generations...

One day it will end

On that day

We will be not there to check this face book status. ..
But today you have time to look over and read this
So honestly like this and show me your your your
Love or hate upon me and everyone ..

இந்திய கடன் வாழ்வு

கணவனும் மனைவியும் வங்கியில் கடன் வாங்கி படித்தவர்கள்....
அகவே கல்விக் கடனை அடைத்து முடித்த பின்

வாகனக் கடன் ,வீட்டுக் கடன் , கிரெடிட்கார்டு கடன்
என்று வாங்கி  கடன் வாழ்க்கை வாழ்ந்து கஷ்ட்டப்பட்டு
வாங்கிய வங்கி கடன்களை அடைத்தப்பின் .

லே ஆப் ,,வேலை இல்லை  என்கிற நிலை வந்து விட்டது ...
தற்போது கையில் கடனில் வாங்கிய வீடு சொந்தமாக
கடனில் வாங்கிய வாகனம் சொந்தமாக ....
இருக்கிறது ... ( சிலருக்கு இன்னும் கடனில்)
ஆனால் வேலை இல்லை....
இதை எல்லாம் வாங்குவதற்காக தான் கடந்த பத்து ஆண்டாக வேலை செய்ததை போல உணருகிறார்கள்.

நாடும் இந்த பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்காகவே ...அவர்களை வேலைக்கு அமர்த்தியதாவே கருதுதும் நிலை,,

பொருட்களும் கல்வியும் வீடும் விற்கப்பட்டதே மிட்சம்... (திணிக்கப்பட்டதே மிட்சம்)

அதை எல்லாம் வாங்கி அனுபவிக்க வழி ஏதும் இல்லை என்பது நிதர்சனம்..

இந்தியா வாழ்வு .... (வங்கி கடனில்)

GDP எனபது வளர்ச்சி அல்ல ...

மக்கள் மனம் சந்தோசமாக (மகிழ்ச்சியாக) இருக்கிறதா என்பதே வளர்ச்சி..

(ஒருவேளை இது தான் அனைவருக்கும் வீடு திட்டமோ)

நமக்கு கடன் ஏதும் இல்லை என்கிற சந்தோசத்தில் இதை சொல்கிறேன்

கல்வியும் கடனும் = கல்விக் கடன்

கல்வி கடன் வங்கிகள் தாராளமாய் தருவதாக கூறுகிறார்கள் முதலில் அதுவே ஒரு பொய்....

அப்படி மாணவர் ஒருவர் பயிலும் கல்வி ஆண்டில் வாங்கப்படும் கல்வி கடனுக்கு ...
கடன் வாங்கிய முதல் நாளில் இருந்தே வட்டியை நிர்ணயம் செய்து விடுகிறார்கள் அது சட்டப்படி தவறு ..

கல்வி கடன் பெற்ற மாணவர் படித்து முடித்த பிறகு ..

வேலை கிடைத்தால் 6 வது மாதம் முதல் தான் வாங்கிய கல்வி கடனுக்கு முதல் வட்டியே போட முடியும்..

அல்லது வேலை கிடைக்காத பட்சத்தில் ஒரு வருடம் கழித்து தான் முதல் வட்டியே போட முடியும்...

ஆனால் வங்கிகள் கல்லூரியில் மாணவர் சேர்ந்த பொழுது கல்வி கடன் பெறப்பட்ட நாள் முதல் வட்டியை போடுகிறார்கள்....
அதாவது மாணவர் பயிலும் போதே அவர் தலை மீது வட்டி சேர்ந்து விடுகிறது,,,
நான்கு ஆண்டுகள் கல்லூரியில் பயிலும் போது ஒருவரால் எப்படி கடனை அடைக்க முடியும் ...
(இப்படி சட்டமே கிடையாது ஆனால் வங்கிகள் இந்த நடைமுறையை பின்பற்றுகின்றன..)

 இதுகுறித்து எந்த நபர்களும் சரியான புரிதலோடு பேசியதாக தெரியவில்லை....

இந்த கல்வி கடன் கொள்கையே HRD Ministry யின் கீழ் வருகிறது..

வங்கிகள் Finance Ministry கீழ் இயங்குகிறது ...

இந்த தூர இடைவெளியை வங்கிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டு அப்பாவி மாணவர்களிடம் இருந்து பணத்தை பிடுங்குகிறார்கள்...

வங்கிகளிடம் இருந்து
கல்வி கடன் பெறுவது மட்டும் தான் பொது பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது ...
ஆனால் அந்த கடனுக்கான வட்டிக் கொள்கையை யாரும் கண்டு கொள்வதில்லை...

கடனை திருப்பி செலுத்த முடியாத மாணவர்கள் வெளிநாட்டில் கிடைக்கும் வேலைக்கு கூட செல்ல முடியாது என்பது வேதனையான விசியம்...

இன்னும் பேசலாம் .....
(உங்களுக்கு தெரிந்த தகவல்களை சொல்லவும்)

Krishna Kumar G

Wednesday, May 3, 2017

NEET and 50% for service quota reservation ordinance

1603 MD,MS seats in Tamilnadu Medical colleges
50% goes to the NEET
Remaining 50% goes to the doctors who work in village govt hospitals.

In other states 100% goes to NEET.
Villages has no doctors.

By providing 50% seats to the doctors who work in villages will encourage the doctors to work in villages and also the village people will get medical facilities .
This is the reason TN govt wants 50% reservation.

Without 50% reservation ,Are they will not work in villages ?
You may ask ,
Answer is
Sometimes yes they will not.

Demand for doctors still exists , Even in cities .

Think of village people and provide 50% reservation on service quota

This is not blackmail
It a request on basis of saving poor people's life.

Why does NEET gets more priority than humanity

Government should think on basis of humanity

Indian Gov should bring ordinance 50% for service quota on PG Medical courses all over India.

எமெர்ஜென்சி முதல் டிமானிடைசேசன் வரை Emergency to Demonetisation

கடந்த 30 வருசமா இந்தியா முழுவது பிரபலாமாக இருக்கிற பெரும்பாலான அரசியல் வாதிகள் எல்லாருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கு .

ஊழல ? ஆமாம் ,

சரி அதைவிட இன்னொரு ஒற்றுமை இருக்கு
இவங்க எல்லாருமே எமெர்ஜென்சி பிரியட்டுல ஜெயில்ல இருந்தவங்க.(1975 to 1977).

இதுல பெரும்பாலான அரசியல் வாதிகள் ரூம்மேட்டாக இருந்தவங்க (ஜெயில் ரூம்மேட்) (Probably they were in teenage or young age )

அங்க தான் பல கொள்கைகளை உள்வாங்கி இருக்காங்க

இவங்களோட கொள்கைகள் தான் இந்தியா முழுவதும் பல வருடமாக ஆளுகிறது

இப்ப இன்னொரு விசயம் என்னன்னா இவங்க எல்லாரும் 65 வயசை தாண்டிட்டாங்க.

அரசியலில் அடுத்த தலைமுறைக்கான தேடல் தன்னாலே வரப்போகுது .

கடந்த ஆண்டு வந்த பணமதிப்பு நிக்க நடவடிக்கையோடு அவர்களின் அரசியல் முடிந்தது..அவர்களின் கொள்கைகளும் முடிந்தது,அவர்களின் சிந்தாந்தங்களும் முடிந்தது.
(Demonetisation Nov to Dec 2016)


Dear Youngsters you are next

+krishna kumar G


Tuesday, May 2, 2017

பள்ளி கல்வித்துறை மேம்பாடு அவசியம்

பல லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கும் அரசால்
ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்க முடியவில்லை
என்பது கொடுமை

ஆசிரியர்களுக்கு
தினமும் மூன்று வேலை கார்டு அடிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்

கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்கு செல்வதை தடுக்க வேண்டும்

கணவனுக்கு மனைவி கையெழுத்து போட்டால்,அதற்க்கு தலைமை ஆசிரியர் அனுமதித்தால் ...அந்த மூன்று ஆசிரியர்களுக்கு உடனே VRS கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

ஆசிரியர் சங்கங்களின் பஞ்சாயத்துகளை ஒழித்துக்கட்ட வேண்டும்...

இதுபோன்ற அதிரடி நடவடிக்கை எடுத்தால்.

உடனே சாலையில் இறங்கி போராடுவார்கள்...

அப்படி போராடும்போது ..

வேலைக்கு வருபவர்களுக்கு 50 ருபாய் படிகாசு என்று ஆணை பிறப்பிக்கவும் ...
உடனே எல்லா ஆசிரியரும் வேலைக்கு திரும்பி விடுவார்கள்...

(இன்னொரு முறை இருக்கு அதை இப்போது சொல்ல மாட்டேன்)

இப்படி செய்தால் கல்வியின் தரம் உயரும் என்று சொல்லவில்லை..
ஓரளவு பள்ளிகள் ஒழுங்காக செயல்படும்.

மாநில அரசிடம் இருந்து பல லட்சம் கோடிகளை பள்ளி கல்வித்துறை வருடம் வருடம் பெறுகிறது ஆனால் அது சரியாக பயன்படாமல் போகிறது.

Krishna Kumar G

                                                                                  

Monday, May 1, 2017

சிந்தனையும் இலக்கும் சாதியை ஒழிப்பதில்

பசங்களுக்கு மிகவும்  (சிக்கலான) typical ஆனா விசியத்தை பற்றி பேசினால் மிகவும் confuse ஆகிடுறாங்க....ஒன்னும் புரியாது அவங்களுக்கு.

மேலோட்டாமா பேசுனா கவனம் செலுத்தாம போய்டுவாங்க.

So அவங்களை உள்ள இழுத்துவுட்டு
கண்டதை பேசி கவனத்தை இழுத்து
பரபரப்பா நாலு செய்தியை போட்டா தான்
லைட்டா அவங்களுக்கு புரியும்.

அதுக்குள்ள நமக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்...

என் கூட பல வருஷம் பழகிட்டு (நண்பன்)
ஒரு 25 வயசு இருக்கும்போது
அறிஞர் அண்ணா யாருன்னு கேட்டவன்லாம் இருக்கான்
ஆனா தன் ஜாதி பெருமையை மட்டும் சரியா பேசுவான்..
அதை மட்டும் எப்படியோ தேடி தேடி படிக்கிறான்.
முழு கவனமும் தன் ஜாதி பெருமையின் மேலே மட்டும் தான் வச்சி இருக்கான்.

பொண்ணுங்க கொஞ்ச different ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் தான் infatuation love இருக்கும் அதுக்கப்பறம்
(அப்பறம் சொல்லுறேன் ஏற்க்கனவே ரவுண்டு கட்டி நிக்குறாங்க)

என்ன சொல்ல வரேன்னா பசங்களுக்கு அரசியல் புரிதலை விட ஜாதி புரிதல் மிக தெளிவா இருக்கும்.

90 களில் பிறந்த பசங்க கிட்ட இந்த தாக்கம் கொஞ்சம் குறைவா இருக்கு ....
ஆனா அவங்க மனசுலையும் இந்த அரசியல் வாதிகளின் மூலமாக மீண்டும் அது விதைக்கப்படுகிறது

2000 ஆண்டுக்கு பிறகு பிறந்த பசங்க மனசுலையும் இதன் தாக்கம் வந்துவிட கூடாது
என்ன செய்யலாம்
என்பதுதான்

நம் சிந்தனையும் இலக்காகவும் இருக்கணும்.

Krishna Kumar G

Edited
10 June at 16:08 ·

கிருஷ்ணா
ஜாதியை ஒழிக்கணும்ன்னு சொல்லுற, எல்லாம் சரி தான் ஆனா நீ வருற வழி சரி இல்ல.போய் வேற வழியில வா.
- உயர் சாதி நண்பன்.
++++×××+++
அப்போ இது தான் சரியான வழி !.
===================+
#(இந்த வழியை பிடிக்கவே 10 வருஷம் ஆச்சி, மீண்டும் திரும்பி போய் வேற நல்ல வழியை பிடிச்சி வந்தா அதுவும் சரி இல்லைன்னு தான் சொல்லுவா )
எனக்கு தெரியும் எது நல்ல வழின்னு ,
தப்பான வழியா இருந்தா கூட நல்லதா திருத்திட்டு போயிடுவேன்...
நம்பிக்கை எனக்கு இருக்கு.
======+
தோற்றாலும் பரவாயில்ல
தோல்வி எனக்கு புதிதல்ல..

திராவிட அரசியல் மேலோட்ட பார்வை

திராவிடம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
To know more about Dravidam click here 



நீதிக்கட்சி , திராவிட கழகம் போன்ற இயக்கங்களின் கொள்கைகளை அதன் தொடர்ச்சியாக வந்த திமுகவால் பாதி குறைந்தது அதிமுகவால் முழுவது காணாமல் போனது.
குறிப்பாக ஜெயலலிதா பதவிக்கு வந்த போதே திராவிட கட்சிகளின் கொள்கைகள் காற்றில் போனது.
அதன் பிறகு இந்த நாட்டில் இருப்பது வெறும் கவர்ச்சி அரசியல் மட்டும் தான்
திராவிட அரசியல் என்பது வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளது.
அதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.
அப்பனுக்கு பிறகு சித்தப்பன்
மகனுக்கு பிறகு பேரன்
மச்சானுக்கு பிறகு மருமகன்
என்று

50 ஆண்டு கால திராவிட அரசியல் சமுக பெரும்பான்மை வாதத்தை ஊக்குவித்தது.
இனி மதவாதத்தை ஊக்குவிக்குமா ?
என்கிற சந்தேகம் தற்போது அனைவருக்கும் உள்ளது

அதை  விடமாட்டேன் என்கிறது தற்போதைய இளைஞர் அமைப்புகள்

(திராவிட அரசியலுக்கு வித்திட்ட பெரியாரின் சாதிய ஒழிப்பு கொள்கையே இன்றைய திராவிட கட்சிகளின் அரசியலிலேயே இல்லை)

திமுகாவில் நாத்திகம் பேசும் தலைமை இனி இல்லை.
இணையத்தில் பேசுபவர்களை தவிர

ஆனால் இதை பயன்படுத்தி ஜாதிய மதவாத அமைப்புகள் உள்ளே நுழைந்துவிட கூடாது , என்பதிலும் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

திராவிட நிலத்தின் பண்புகள் வேறு
அதில்
தற்போது இருக்கும்
திராவிட கட்சிகளின் கொள்கைகள் வேறு
(முரண்)
----------

Edited 26 May 2017

திராவிடம் திராவிடன் பற்றி உங்களுக்கு நான் ஏற்க்கனவே சொல்லி இருக்கிறேன் ...
திராவிட நிலப்பரப்பில் பல மொழிகள் இருந்தாலும் அதில் சில மொழிகளே பிராதானமாக உள்ளது ...
தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு,மலையாளம் ...etc

தற்போது தமிழர் வாழும் நிலப்பரப்பில் தமிழ் பிராதான மொழியாக இருக்கிறது...
திராவிட நிலப்பரப்புக்குள் இருக்கும் இந்த மொழிகள் நிலப்பரப்பை மாற்றி பயனித்தற்க்கான அடையாளங்களும் இருக்கிறது ...
(அது நிலத்தை ஆண்ட அரசனை பொறுத்து அமையும்)

சரி இது கிடக்கட்டும் ....

தற்போதைய காலத்த்துக்கு வருவோம்.....

யார் நிஜமான தமிழர் என்றால்
அல்லது யார் தான் தமிழ் மொழியின் மூத்த குடிகள் என்றால் பெரும் குழப்பம் தான் வரும்...

(அதை கூட விரிவாக பேசலாம் ஆனால் நேரம் போதாது, இதையும் ஓராமாக வைத்துவிட்டு புதிய கதைக்கு வருவோம்)

சவுக்கார் பேட்டையில் சில நூற்றாண்டுகளாக சேட்டு இனம் வாழலாம்..... ஆனால் அவர்கள் தமிழர்கள் இல்லை
அவர்களும் அதை விரும்புவதில்லை

இன்னும் பல ஜாதிகளை எடுத்து பேசுவேன் ....
ஆனால் பசங்க தப்பா புரிஞ்சிப்பாங்க ....

என்னாடா இவன் ஜாதி இல்லைன்னு சொல்லுறான் ஆனா ஜாதியை பற்றி பேசுகிறான் என்று ....

இருந்தாலும் மாற்றம் வேண்டும் என்றால் சொல்லித் தானே ஆகணும்... அப்போது தானே புரிதல் வரும்...

இன்றைய குழப்பத்திற்கு பெரும் காரணமே கிருஷ்ணா தேவ ராய அரசன் தான் ...

தமிழகத்தில் வரி வசூலிக்க சில இன குழுக்களை அனுப்புகிறான் ....

அந்த குழுக்களின் மொழி தெலுங்கு என்றாலும் அவர்கள் இங்கே வந்த பிறகு சில ஆண்டுகளிலே அந்த ஆட்சி முடிகிறது...

அது முடிந்தது கூட தெரியாமல் மக்களிடம் தொடர்ந்து வரி வசூல் செய்தவர்கள் , பெரும் பொருளை ஈட்டி...இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள்...

பிறகு காலப்போக்கில் அவர்கள் தாய் மொழி தெலுங்கை மறந்து தமிழை தழுவுகிறார்கள்....

தற்போதைய காலக்கட்டத்தில் இவர்களில் சிலருக்கு தெலுங்கு தெரியும் ...ஆனால் பலருக்கு தமிழ் மொழிதான் தாய் மொழி என்று எண்ணி இருக்கிறார்கள் ...

இவர்கள் சொத்துகள் எல்லாமே தமிழகத்தில் தான் இருக்கிறது...

( இவர்களும் வழக்கம்போல்  பிற ஜாதிகளில் திருமணம் செய்வதில்லை ...)

தற்போது இவர்கள் பேசும் தெலுங்கும் ...ஆந்திராவில் பேசும் தெலுங்கும் வேறு படும்...

இந்த சூழலில் இவர்கள் தெலுங்கா தமிழரா என்கிற  குழப்பம் அவர்களுக்குள்ளே வரும்.....

------
இதேபோல் பல குழுக்கள்  தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் ...உதாரணத்துக்கு மேலே ஒரு குழுவை பற்றி சொல்லி உள்ளேன் ....
-----
சோழ மன்னர்களும் சில தவறுகளை செய்து இருக்கிறார்கள்...

அந்த தலைப்பை எல்லாம் எடுத்தால் நேரம் வேஸ்ட் ...

ஆகவே தற்போதைய காலத்திற்கு நாம் வர வேண்டும் ....

ஜாதி மொழி என்று எல்லாவற்றையும் தாண்டி நல்ல மனிதர்களை நாம் தேர்வு செய்ய வேண்டும் ...

ஆனால் சினிமா கார்கள் வேண்டாம் ....(இதற்க்கு காரணம் இருக்கிறது)

இவர்களை சும்மாவே நாம் பார்க்க முடியாது ...

MLA வாகவோ CM ஆகவோ ஆகிவிட்டால் நாம் அவர்களிடம் நெருங்கவே முடியாது ....

மீண்டும் திரையில் தான் பார்க்க முடியும்....

Krishna Kumar G