Wednesday, April 19, 2017

VIP Culture in India

ஒரு மாவட்ட ஆட்சியருக்கு காவல் துறை பாதுகாப்பு தரலாம்,தவறில்லை.
ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு காவல் துறை பாதுகாப்பு தருவது தவறு .
(போலிசுக்கு போலிசே பாதுகாப்பா ?
என்கிற கேள்வி என் மக்களிடம் வர வேண்டும்.)
பொதுவாக சட்டத்திலே இதற்க்கு இடம் கிடையாது .
இருந்தாலும் தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட SP க்கள் இந்த VIP அந்தஸ்த்தை அனுபவித்து வருகிறார்கள்.
(தினமும் ஒரு 50 காவல் துறையினர் SP பாதுகாப்பு பணியில்)
(UNOFFICIAL)
(மக்கள் பணி தேக்கம்)
அரசியல்வாதி 5 வருடம் செய்கிறதை விட
பணியில் இருக்கும் அதிகாரிகள்
செய்கிற VIP அட்டகாசங்கள் அதிகம்
ஊழலும் அதிகம்.
அமைச்சரவை செயலாளர் என்றால் VIP அந்தஸ்த்து
நீதிபதி குமாஸ்தா என்றால் VIP அந்தஸ்த்து
இப்படி எல்லாத்துக்கும் VIP அந்தஸ்த்து

-------------------

எனக்கும் இன்றைய பிரதமர் மோடி இணையதள குழுவுக்கும் உள்ள நூறு வித்தியாசங்கள்.



நேற்று NLC தலைமையகத்தில், இந்த சாலையை VIPக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒரு அறிவிப்பு பலகையை பார்த்தேன்.

(என்னோடு இருந்தவரிடம் இது என்ன கொடுமையா இருக்கு,இது என்ன ஜனநாயகம் ?
VIP யா எவன் இந்த Chairman னா ? என்று அவரிடம் ஆதங்கமாக கேட்டுவிட்டு வந்தேன்.
யாராவது நாளை அந்த பலகையை எனக்கு புகைப்படம் எடுத்து அனுப்பவும்.
Block 1, NLC தலைமையக வாசலில் இருக்கிறது)

இதுபோல் பல VIP சாலைகள்,VIP பகுதிகள் இருக்கிறது இந்தியாவில்
அங்கே சாமானியனுக்கு அனுமதி இல்லை

-------------------

சுருங்க சொன்னால்
ஜெ தீபா லாம் பிறக்கும் போதே மனசுக்குள்ள ஒரு VIPன்னு நினைப்பு.
அதன் வெளிப்பாடு தான்
இன்று அவர்
இதுபோல பல வெத்து Born with a Silver Spoon இருக்கிறார்கள்.
நான் எவளோ பெரிய ஆளு தெரியுமா, ரேஷன் கடைக்குலாம் போகலாமா ?
என்று
கல்வியின் தரத்தால் வந்த விளைவு
இணையத்தால் திருத்த முடியுமா
என்றொரு சிறு முயற்சி

--------------

+krishna kumar G