Sunday, April 30, 2017

முத்தலாக்கும் அதை வைத்து அரசியலும்

ஒருவரோடு வாழ விருப்பமில்லை எனில்
முத்தலாக் முறையை
ஆணும் சொல்லலாம் பெண்ணும் சொல்லலாம்.
தலாக் என்பது சம நிலையில் தான் உள்ளது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் சொல்ல வேண்டும்,
ஒரே மூச்சில் சொல்வதில்லை
அப்படி சொன்னால் அது செல்லாது
என்பது அந்த மதத்தின் விதி.

வெகு சிலரே இது தெரியாமல் தவறாக பயன்படுத்துகிறார்கள்.

சிறுபான்மை அமைப்பில் நிகழும் சிறு கூட்டம் செய்கிற தவறை
வெளியில் இருக்கும் பெருபான்மை அமைப்பு கழுகு கண்ணில் பார்ப்பது ஏன்.

ஒரு நாட்டின் பிரதமர் தொடர்ந்து இதை பற்றியே பேசி வருகிறார்.

ஒருவேளை இந்த முறையினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால், அதன் எண்ணிக்கையை வெளிபடுத்த வேண்டும்.(Statistical Report ).

இதை கண்காணிக்க அவர்களுக்குள்ளே பல அமைப்புகள் வைத்து இருக்கிறார்கள்.
அதன் செயல்பாடு சரி இல்லை என்றால் அதை சுட்டி காட்டலாம் (தவறில்லை)

(சென்ற நூற்றாண்டு வரை
கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டையேறுதல் என்கிற வழக்கம் இருந்தது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த சட்டத்தை எழுதியவனின் நோக்கம் என்ன தெரியுமா ...
தனக்கு பிறகு தன் மனைவி பிறரை திருமண செய்துவிட கூடாது என்பது தான் ..
ஆனால் அதையும் மாற்றி தனக்கு பிறகு தன் மனைவி கஷ்டப்படக்கூடாது என்று அப்படி செய்ததாகவும் இன்று சொல்லுவார்கள். இப்படி எண்ணற்ற கொடுமைகளை பெண்களுக்கு எதிராக செய்து வருகிற சமுகம் தான் இது)

முத்தலாக் என்பது அந்த மதத்தில் உள்ள ஒரு விவகாரத்து சட்டம்.
(Mutual understanding and Mutual Concern )

நாம் நம் அரசியல் அமைப்பில் குடும்ப நல நீதிமன்றம் மூலமாக கடந்த 30 -40 வருடமாகத் தான் விவகாரத்து சட்டத்தை ஒளளவு சரியாக பயன்படுத்தி வருகிறோம்.
அதிலும் பல குழப்பங்கள் இருக்கிறது.
சொத்து பிரச்சனை முதல் மறு மனம் வரை

முதலில் அதை சரி செய்யவும்

உன் கண்ணில் இருக்கும் துரும்பை முதலில் எடு
பிறகு அடுத்தவர் கண்ணில் இருப்பதை எடுக்கலாம்

(இருக்கிற பொண்டாட்டியை ஒழுங்கா பாத்துக்க வக்கில்ல,அடுத்தவனுக்கு எதுக்கு அறிவுரை,
என்று நமக்கு நாமே நமோ என்று செல்ல வேண்டியது தானே)

முத்தலாக் முறையை வைத்து அரசியல் காய் நகர்த்துவது ஏன்


Krishna Kumar G

Saturday, April 29, 2017

படைப்பு தொழில் நுட்பம் தேவை

வட கொரியாவுடன் மூன்றாம் உலக போர் சூழலில்.
அமெரிக்க தென் கொரியாவிடம் தங்கள் தொழில்நுட்ப
ஏவுகணை எதிர்ப்பு குண்டுகளை நிறுவ 1$பில்லியன் டாலர் பணத்தை அட்வான்ஸ்சாக தர வேண்டும் என்று கேட்டுள்ளது.- செய்தி.
(இதுக்கு தென் கொரியா சண்டைக்காரன் காலிலேயே விழுந்துடலாம்,)
----
படைப்பு தொழில் நுட்பத்தில் எந்த நாடு முன்னேறுகிறதுதோ அதுவே அதிக வருமானம் ஈட்டும்.
இந்தியா போன்ற தொழில் நுட்பத்தை காசு கொடுத்து வாங்கும் நாடுகள் ... 1$ பில்லியன் டாலர் பணத்தை, நாட்டின் வளர்ச்சி என்று பொய் சொல்லி பெருமையாக கட்டும் FDI- பாடம்
ஒரு உயிர்கொல்லி பக்டீரியாவை கண்டுபிடித்தால் கூட வருமானம் தான்,
மொபைல் போன் கவர் கண்டுபிடித்தால் கூட வருமானம் தான்,
இப்படி எதையும் செய்வதற்கு அரசு உந்துவதுமில்லை ஊக்கப்படுத்துவதுமில்லை.... அனால் திட்டங்கள் மட்டும் இருக்கிறது பல பெயர்களில்.
மனித வளத்தை கூட சரியாக பயன்ப்படுத்துவதில்லை
அதுவும் நாம் முதல் தர தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில்லை
நாம் பயன்படுத்துவது மூன்றாம் தர தொழில்நுட்பம் .

R&D should be encouraged

+krishna kumar GDA DI Tamil Words (டா ,டி) understanding the right meaning

'DA' 'DI' Non classic cultural word in Tamil (DA=டா ,DI=டி)

I hate when my parents call me "DI" not only parents I hate when people call me "DI"

- Tamil Girl

But girls love calling boys "DA" !
(ironic)

If so we will also call "DI" - Tamil Boys
(Only for those irrespective behaviour person)

There are few types of "DA" "DI"s used in Tamil language

Sollu DA Sollu DI (While in love mood)
Poh DA Poh DI (While in anger mood)

Poh DI
Va DI
Sollu DI
Vantha va varaatti poh DI & DA

DI is a Tamil word which represents the female person
DA is a Tamil word which represents the male person

Usually DA or DI were the words come after a word, and that word gives out the full meaning for the entire words or sentence .
Sometimes it gives different types of expression at different times by the way of using it.

That's it but using it at different times at different levels gives a different meaning

However using this DA DI words towards a unknown person is a disrespect behaviour.
and should not be used on calling an elder person (disrespect) .

usually this word is used in between known persons.
sometimes its used on unknown person or known person while fights to show their disrespect on them.

DA,DI is itself a ironic word which also can be used to show love upon a person .
but expression changes,Slang changes,

Expression ,Slang and the situation decides this word meaning

Actually its a great word it also can be used to represent a group of people
pohnga da ,pohnga  di .
Vanga da , Vanga di

Even Tamilians don't know enough much about this word and you can't even find this in Tamil grammar books.
actually we have to do some research to know how this word is being used and from when it being exits or it intruded from other languages

Even Malayalis people who tries to talk Tamil for first the time usually use this word DA.. Para DA (Sollu DA)

If you like this post Like (Podunga DI & DA s) it
(disrespect)
Like podunga Sir Like Podunga Madam
(respectful) (just by carrying some English word instead of DA,DI)
But parents can't use the word sir or madam on their children it seems to be over respectful
So they can use the word DA DI on their children.nothing wrong.
Instead of DA DI they can also use another common word PAA ,(Inga va PAA, Poh PAA)

PAA (பா) is a common word used in between both gender which also even represents both genders.

டோய் (DOHAI , டாய் (DAAI), these word are also similar to DA . which gives out different meaning

+krishna kumar G


குப்பை போடும் மக்கள்

நீரோட்டத்தின் மேல்
குப்பைகளை போடுவதில்
நம் மக்களுக்கு எதோ ஒரு
இன்பம் இருக்கிறது

குப்பைகளை போடுவது இயல்பு தான்
ஆனால் அதை எங்கே போடுகிறார்கள்
என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது

Monday, April 24, 2017

ஆண் ஆதிக்க சினிமாக்கள்

சினிமா பாக்காத லைப்பும்
சிங்காரிச்சிக்க தெரிஞ்சிக்காத wifeபும்
இருந்து என்ன பிரோஜனம்
RP115 - 1968 (ரகசிய போலிஸ் 115)
FEMINISTS - ஆண் ஆதிக்க வசனம்
LIBERALS - சும்மா பொழுதுபோக்குக்காக எழுதப்பட்ட வசனம்
FEMINISTS - அழகி , ஆட்டோகிராப், போன்ற திரைப்படங்கள் எல்லாம் பெண்களை கொச்சைப்படுத்துகிறது..
LIBERALS - இப்ப என்ன செய்ய சொல்லுரிங்க ?
உங்களுக்கு வேற வேலையே இல்லையா ?
சிந்து சமவெளி போன்ற படங்களை இங்கு ஆண்கள் இயக்குகிறார்கள்,அதற்க்கு பலத்த எதிர்ப்பு வருகிறது.
Parched ,Fire,Kama Sutra போன்ற படங்களை அங்கு பெண்கள் இயக்குகிறார்கள்.பெரிய வரவேற்ப்பு கிடைக்கிறது.
(சில சலசலப்பு இருக்கும் தான்)
இங்கு உங்களை யாரு பெண்களுக்கான 'ஆட்டோகிராப்' போன்ற படங்களை இயக்க வேண்டாம் என்று சொன்னது..
நீங்க எடுங்க நாங்க பாக்க தயாரா தான் இருக்கோம்
வரவேற்கவும் தயாரா தான் இருக்கோம்.
(நாங்க எடுப்போம்,நீங்க யாரு வரவேற்க என்று வீண் வம்புக்கு வந்தால்...என்னை விடுங்க நான் இந்த அஜெண்டாவில் இருந்து விலகி கொள்கிறேன்)
யாரும் உங்களை இங்கே முடக்கவில்லை
உங்களை நீங்களே முடக்கிக் கொள்வதைப்போல


ஆண் ஆதிக்க சினிமாக்கள் ஒரு காலத்தில் இருந்தது உண்மை தான்
ஆனால் தற்போது உலகத்தின் வாசல் திறந்து கிடக்கிறது
பல பெண்கள் சினிமா துறையில் சாதிக்கிறார்கள்
அது வரவேற்க தக்கது

ஆனால் குறிப்பாக தமிழ் படங்களில் அவர்களின் ஒரு சில திறன்களை அவர்கள் வெளிபடுத்துவதில்லை...

அதை நான் எதிர்ப்பார்க்கிறேன்

சமுகத்தில் நடக்கும் உண்மை நிலைகளை
உங்கள் படைப்பின் மூலம் வெளிப்படையாக சொல்லுங்கள்
எதையும் பூசி மொழுக வேண்டாம் .

சமுகத்தில் பெண்களுக்கு இருக்கும்
தடைகளை உங்களால் தான் எளிதில் உடைக்க முடியும்

+krishna kumar G

வெத்து கெத்து

ஏதோவொரு ஆறுதல் நிலையை தேடிக்கொண்ட இருக்கும் வேலையில்
(ஆறுதல் சொல்வோரை நோக்கி)
எனக்கு ஆறுதல் பிடிக்காது என்று அழுதுகொண்டே சொல்லிவிட வேண்டியது தான் ..
அது தானே வெத்து கெத்து


கணவன் மனைவி ஊடல் கூடல்கள்

(இப்படி ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள்)
கணவன் மனைவியை கேலி செய்யும் பழக்கம் இந்தியர்களுக்கு மட்டுமே உள்ளது.
வெளிநாட்டு ஆண்கள் பெண்களை எப்படி மதிப்பார்கள் தெரியுமா ?
நீங்க பாத்திங்களா ?
ஏன்மா புரியாம பேசிகிட்டு !
---------------
தலைவன் தலைவியிடம் ஊடல் கொண்டால்
உடனே தலைவனை விட்டு விலகுங்கள்
விவாகாரத்து கோருங்கள்
தற்போது சமுகவலை தளத்தில் 40 வயதை கடந்த பெண்ணியவாதிகளின் கற்பனை சொற்கள் .
எந்த தலைவியும் இப்படி செய்ய மாட்டாள்
ஒருவேளை நீங்கள் இப்படி செய்யும் எண்ணத்தில் இருந்தால்
உங்களுக்காக வருந்துகிறேன்.
குடும்ப வன்முறை என்பது வேறு ஊடல் என்பது வேறு.
இதை புரியாத தலைவனும் தலைவியும் எந்த நாட்டில் இருந்தால் தான் என்ன ....
தமிழ் சான்றோர் ஊடல் கூடலுக்கு வழிவகுக்கும் என்று சொல்ல வில்லையா ?
தலைவன் தலைவியை சீண்டாமல்
தலைவி தலைவனை சீண்டாமல்
வேறு என்ன செய்வது
துறவியாக இருவரும் சேர்ந்து வாழ்வதா ?
புரிதல் இல்லாத வாழிவில்
அகங்காரமும் இறுமாப்பும்
தலைக்கு மேல் ஏறிக்கொண்டால்
தனிமையையும்
துரவரத்தையுமே
தரும்
ஆசைக்கு திருமணம் செய்து
ஒப்புக்கு பிள்ளையை பெற்று
ஒரு பக்கம் முகத்தை திருப்பி வைத்து கொண்டு
காலமெல்லாம் வெறும் சுவரை பார்த்துக்கொண்டு
வாழும் வாழ்க்கை தான் இன்பமெனில்
நீங்கள் சொல்வது சரி தான்
--------------
இதுக்கு தான் I'm not a Feminist என்று சுருக்காமா
சொல்லிட்டு போய்டுவேன்....
-----------
எனக்கே என்ன சொல்லுறேன்னு புரியல
புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி

+krishna kumar G


நீட்டுக்கு(NEET) மாற்று தமிழ்நாடு அரசு மருத்துவ நுழைவு தேர்வு

மத்திய மருத்துவ கல்லூரிகளுக்கு மட்மே நீட் NEET தேர்வு வைத்தால் போதும்.
மாநில கல்லூரிகளை இதில் சேர்க்காமல் இருப்பது நல்லது..
தேவைப்பட்டால் மாநில அரசுகள் தங்கள் மாநில மருத்துவ கல்லூரி இடங்களை நிரப்ப தனியாக தகுதி தேர்வு / நுழைவு தேர்வு வைத்துகொள்ளட்டடும்.
என்கிற சட்டம் தான் சரியாக இருக்கும்..
தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது..
இந்த கல்லூரிகளுக்கு அனுமதி பெற ஒவ்வொரு அரசும்
எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளை எண்ணிப் பார்க்க வேண்டும்
இதில் உள்ள இடங்களை பிற மாநில மாணவர்கள்
NEET தேர்வின் மூலம் சுலபமாக எடுத்து செல்வதை எப்படி அனுமதிப்பது.
நீட் NEET தேர்வு மத்திய மருத்துவ கல்லூரிகளுக்கு மட்மே இருக்கட்டும்
மாநில அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு வேண்டாம்.
ஆனால் மாநில அரசுகள் NEET க்கு இணையான தேர்வை தனியாக நடத்த வேண்டும்...
நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை வேண்டாம்.
(ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வதைவிட)
மருத்துவ கல்லூரி இடங்கள் விலை போகாமல் தடுக்கலாம்.
இதில் தனியார் கல்லூரிகள்
எந்த தேர்வு முறையை பின்பற்றுவது என்கிற குழப்பம் வரும்.
அதை அவர்கள் விருப்பம் போல விட்டுவிடுவதே நல்லது
ஆனால் நுழைவு தேர்வு இல்லாமல் எந்த ஒரு சேர்க்கை இருக்க கூடாது
தற்போது மாநில அரசு தனியாக நுழைவு தேர்வை அறிவித்தால்
நீட் தேர்வை மாநில அரசு கல்லூரிகளில் இருந்து விளக்கி வைக்க வாய்ப்பு உள்ளது
Thursday, April 20, 2017

சத்தம் எழுப்பும் நிசப்த மதங்கள்

உச்சநீதிமன்றம் ஏற்க்கனவே வழிப்பாட்டு தளங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
(100 decibel அளவுக்குள் இருக்க வேண்டும்)
அது கோவில் ஆனாலும் சரி ,மசூதி ஆனாலும் சரி , சர்ச் ஆனாலும் சரி,
அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த கூடாது.
(அரங்குக்கு வெளியே ஒலிபெருக்கியை கட்ட கூடாது)

இல்லை எங்கள் பக்தர்கள் பாடல்களை தினமும் கேட்டுத் தான் ஆகா வேண்டுமென்றால்.

ஒவ்வொரு வழிப்பாட்டு தளத்திலும் ஒரு Fm சேனல் ஆரம்பித்து விடுங்கள்
அல்லது உங்கள் பக்தர்களுக்கு Bluetooh Speaker அல்லது Headset வாங்கி கொடுத்துவிடுங்கள்
அல்லது Mobile Apps பயன்படுத்த சொல்லி கொடுத்துவிடுங்கள் அதில்
அவரவர் வீட்டில் இருந்த படியே பாடல்களை மந்திரங்களை கேட்டுக்கொள்ளட்டும்
இதை தவிர்த்து தேவையில்லாமல்
அடுத்தவர் காதில் வாயை வைத்து
'Friend டு லவ் மேட்டரூ பீல் ஆயிட்டாப்பல
ஆப் சாப்பிட்டா கூல் ஆயிடுவாப்பல'
என்று சுப்பிரபாதத்தை loudspeakerயில் வாசிக்க வேண்டாம்.

நிம்மதியாய் மற்றவரை
தூங்க விடுங்கள்
படிக்க விடுங்கள்
லவ் பண்ண விடுங்கள்


#NoSoundPollution

+krishna kumar G


பள்ளிகளில் மாநில மொழி கொள்கைகள்

வட மாநில பள்ளிகளில் பெரும்பாலும் 3 மொழி கொள்கை உண்டு,(கர்நாடகா,குஜராத்)
1.குஜராத்தி
2.ஹிந்தி
3.ஆங்கிலம்
-----------------
ஹிந்தியை தவிர்த்து
மாநில மொழி என்று ஒன்று இல்லாத மாநிலங்களில் இப்படி இருக்கும் .(UP,MP,டெல்லி,)
1.ஆங்கிலம்
2.மார்டன் ஆங்கிலம்
3.ஹிந்தி.
அது என்னடா "மார்டன் ஆங்கிலம்" என்றொரு கேள்வி உங்களுக்கு வரவேண்டும் ...
அது தான் என்னவென்று எனக்கும் தெரியவில்லை
பாட புத்தகத்தை வாங்கி தான் பார்க்க வேண்டும்
மார்டன் ஆங்கிலம்
மார்டன் ஆங்கிலம்
அப்படின்னா என்ன மொழி ?
(Slangக்கும் - Languageக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா?)
ஒருவேளை Grammar தனியாக படிக்கிறார்களா ?
----------------
தமிழ்நாடு இரண்டு மொழி கொள்கை
1.தமிழ்
2. ஆங்கிலம்
(தேவைப்பட்டால் வேறு மொழியும் படிக்கலாம்)
மற்ற மாநிலங்களில் மூன்று மொழியை கற்று.
அதிக நேரத்தை மொழிகளை கற்ப்பதிலேயே செலவிடுகிறார்கள்.
இதில் சர்வதேச மொழி என்று பிரெஞ்சு ,ஜேர்மன்,வேறு இருக்கிறது.....

(இன்னும் சில மாநிலங்களைப் பற்றிய தகவல் எனக்கு தெரியாது


எல்லாம் சாம்பல் தான்

நவீன மின் சுடுகாட்டில் பிணத்தை கொடுத்ததும்
அதை ஒரு (chamber) அறைகுள் உள்ளே தள்ளி கதவை மூடிவிட்ட பின்
உங்களிடம் அஸ்தியை நாளைக்கு வந்து வாங்கிக்கோங்க என்று சொல்வார்கள்
நீங்கள் போன பிறகு இன்றொரு பிணம் வரும் வரை காத்து இருப்பார்கள்.
அதை அதற்க்கு மேல் உள்ள chamberல் வைப்பார்கள்
இரவு ஏழு எட்டு மணி வரை பொறுப்பார்கள்
அதற்குள்ளாக இன்னொரு பிணம் வந்தால்
அதையும் வாங்கி இன்னொரு chamberகுள் வைப்பார்கள்.
பிறகு ஸ்விட்ச்சை போடுவார்கள்.
மூன்று பிணமும் ஒன்றாக எரிந்து பஸ்பமாகும்.
வேலை மிச்சம் , மின்சாரம் மிச்சம்

அதில் பெண் பிணமும் இருக்கும்
ஆண் பிணமும் இருக்கும்
பல்வேறு ஜாதிய,மதவாத பிணமும் இருக்கும்
எல்லாம் காற்றில் ஒன்றாக கலக்கும்
அடுத்த நாள் யார் சாம்பல் யாருடையது என்பதும் தெரியாது...
மூன்றையும் ஒரு குடுவையில் போட்டு வைத்திருப்பார்கள்
முதலில் வருபவனிடம்
கையில் அகப்படும் ஏதோவொரு குடுவையை எடுத்து கொடுப்பார்கள்.
அந்த அஸ்த்தி தான் தன்னுடைய அப்பாவின் அஸ்த்தி என்று நம்பி ஒரு பெண்ணின் அஸ்த்தியை வாங்கி செல்லவும் வாய்ப்பு உண்டு.
(முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கோ என்கிற ரீதியில் இருக்கும்)

எல்லாம் முடிஞ்ச பின்னே ஜாதி என்ன மதம் என்ன
எல்லாம் சாம்பல் தான்
என்கிற வசனம் வெட்டியானிடம் இருந்து சிரிப்புடன் எதிரொலிக்கும்


Wednesday, April 19, 2017

பிழை கவிதைகள்

என் கவிதை முழுவது எழுத்து பிழையாம்.
இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால் நான் எழுதியவைகளை
கவிதை என்று ஒப்புகொண்டதற்கு நன்றி

பிழை ஒரு பொருட்டல்ல
'பிழை கவிதைகள்' என்று அதையும் ஒப்பேத்திவிடுவேன்

+krishna kumar G
(பல கவிஞர்கள் இப்படி தான் செய்து வருகிறார்கள்)


VIP Culture in India

ஒரு மாவட்ட ஆட்சியருக்கு காவல் துறை பாதுகாப்பு தரலாம்,தவறில்லை.
ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு காவல் துறை பாதுகாப்பு தருவது தவறு .
(போலிசுக்கு போலிசே பாதுகாப்பா ?
என்கிற கேள்வி என் மக்களிடம் வர வேண்டும்.)
பொதுவாக சட்டத்திலே இதற்க்கு இடம் கிடையாது .
இருந்தாலும் தனக்கு இருக்கிற அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட SP க்கள் இந்த VIP அந்தஸ்த்தை அனுபவித்து வருகிறார்கள்.
(தினமும் ஒரு 50 காவல் துறையினர் SP பாதுகாப்பு பணியில்)
(UNOFFICIAL)
(மக்கள் பணி தேக்கம்)
அரசியல்வாதி 5 வருடம் செய்கிறதை விட
பணியில் இருக்கும் அதிகாரிகள்
செய்கிற VIP அட்டகாசங்கள் அதிகம்
ஊழலும் அதிகம்.
அமைச்சரவை செயலாளர் என்றால் VIP அந்தஸ்த்து
நீதிபதி குமாஸ்தா என்றால் VIP அந்தஸ்த்து
இப்படி எல்லாத்துக்கும் VIP அந்தஸ்த்து

-------------------

எனக்கும் இன்றைய பிரதமர் மோடி இணையதள குழுவுக்கும் உள்ள நூறு வித்தியாசங்கள்.நேற்று NLC தலைமையகத்தில், இந்த சாலையை VIPக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒரு அறிவிப்பு பலகையை பார்த்தேன்.

(என்னோடு இருந்தவரிடம் இது என்ன கொடுமையா இருக்கு,இது என்ன ஜனநாயகம் ?
VIP யா எவன் இந்த Chairman னா ? என்று அவரிடம் ஆதங்கமாக கேட்டுவிட்டு வந்தேன்.
யாராவது நாளை அந்த பலகையை எனக்கு புகைப்படம் எடுத்து அனுப்பவும்.
Block 1, NLC தலைமையக வாசலில் இருக்கிறது)

இதுபோல் பல VIP சாலைகள்,VIP பகுதிகள் இருக்கிறது இந்தியாவில்
அங்கே சாமானியனுக்கு அனுமதி இல்லை

-------------------

சுருங்க சொன்னால்
ஜெ தீபா லாம் பிறக்கும் போதே மனசுக்குள்ள ஒரு VIPன்னு நினைப்பு.
அதன் வெளிப்பாடு தான்
இன்று அவர்
இதுபோல பல வெத்து Born with a Silver Spoon இருக்கிறார்கள்.
நான் எவளோ பெரிய ஆளு தெரியுமா, ரேஷன் கடைக்குலாம் போகலாமா ?
என்று
கல்வியின் தரத்தால் வந்த விளைவு
இணையத்தால் திருத்த முடியுமா
என்றொரு சிறு முயற்சி

--------------

+krishna kumar G 

Thursday, April 13, 2017

Future Gadgets will be made at your home

In future we won't buy smart phones or any other electronic devices directly from shop,Instead we will built our own desired electronic gadgets in our home just buy buying its parts from various local markets,At last it will come into a cheap price, Just by fixing the parts we will have a new smart phone by our self.
Now this is possible in China .
Were we can buy circuit board ,Batteries,Screen,panels & etc .
Even they have a chance to built up a iphone by their own at a low price.
This system may soon enter into online markets.
Already Google (The Project Ara) Planned this method but they dropped it.
You can upgrade your phone hardware features just by removing and fixing new parts.
3D printers and laser technologies will play an important role in it.


Tuesday, April 11, 2017

Future of Casteism

வர்ணம் Varna = Class, Colour (literally)
Racism
Jobs defined Casteism (Past)

Industrialisation
Intercaste Marriage
Will eradicate everything this was the thought.

Industrialisation brought discrimination forcefully
Intercaste Marriage brought honour killing
Industrialisation and Intercaste marriage is needed but they have a loophole to clear that.

Erase the surnames
Erase the caste certificate's
Ban caste organisations
Bring strict laws

Then after next 10 years everything will slowly start to change.
After 15 to 20 years there will be no reservation, I mean caste based reservation.
but I can't assure there may not be discrimination .

(During Digitalisation, In digital world shortly Social Network age: I wrote this.Its not the complete freedom Its the open gateway gave us First open source oppurtunity to land our thoughts to the rest of the world .)

More .....

No Caste SystemPart -2 

[Edited 13/04/2017]

ஜாதியை அழித்தால்
தன்னாலே இட ஒதுக்கீடு ஒழியும்.
மாறாக
இட ஒதுக்கீடை ஒழித்தால்
ஜாதி அழியுமா?
தேவை ஜாதி அழிப்பா
இல்லை
இட ஒதுக்கீடு ஒழிப்பா ?
இந்த கேள்வி உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அல்ல

Instead of scrapping reservation in colleges remove the total caste system,Then there is no need of Reservation.

Without removing caste from society
people continuously focusing on caste reservation removal in education and jobs.

Only in Education and Jobs people wanted revolution ? What about the social factors (injustice) ....comes behind caste.. There must be a equal justice . Social Justice.
There must be no caste in Marriages .
There must be no caste in Temples.
There must be no separate colonies in villages .
There must be no separate drinking water taps in villages.

Why people don't talk about this ?


+krishna kumar G


Thursday, April 6, 2017

சைக்கிள் நாட்கள்

தந்தையோ / நண்பனோ
நம்மை உட்கார வைத்து சைக்கிள் ஒட்டி செல்லுபோது

அவர்கள் பெடல் மிதிக்க கஷ்டப்படும்போது

நாம் உடனே கிழே இறங்கி
சைக்கிளை பின்னால் இருந்து முன்னோக்கி நம் முச்சு இறைக்க  வேகமாக தள்ளிவிட்டு

பின் ஓடி வந்து அந்த சைக்கிளில் ஏறிக்கொள்ளும் போது

இருந்த இறக்க குணமும் உதவும் மனமும்

சைக்கிள் காலத்தோடு உருண்டோடிய அந்த அன்பையும் பண்பையும்

தற்போது ஏதோ ஒரு மோட்டார் வாகனம் வந்து  திருடி சென்றுவிட்டது

லிப்ட் கேட்டால் கூட யாருக்கும் நிர்ப்பதில்அண்ணே நான் ஒட்டுறேன்னே நீங்க உட்காந்துட்டு வாங்க
என்று சொல்லி எளிமையாக பலரிடம் சைக்கிளில்  லிப்ட் கேட்டு பெற்று ஒட்டி சென்று இருக்கிறேன் .

இதே (formulaவை) யுத்தியை மோட்டார் வாகனத்தில் வருபவரிடம் செய்ய முடியுமா ?

யார் என்னிடம் லிப்ட் கேட்டாலும் எந்த முக சுழிப்பும் இன்றி அவரை உட்கார வைத்து கடைசி வரை சைக்கிளை மிதித்து செல்லுவேன்.

நடந்து வரும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு என் சைக்கிள் triplesசில் தான் பள்ளி செல்லும்.

அது என் கால்களுக்கு பலம் சேர்த்தது .

மனதுக்கும் நிறைவை சேர்த்தது

+krishna kumar G 

Wednesday, April 5, 2017

இறந்த தெய்வங்கள்

இறந்த தெய்வங்கள் எத்தனையோ யாருக்கும் தெரியாது
புதிதாக பிறந்த தெய்வங்களின் எண்ணிக்கை எத்தனையோ யாருக்கும் சரியாக தெரியாது.

நம்மால் புது தெய்வங்களை உருவாக்கவும் முடியும்
அதை அழிக்கவும் முடியும்

ஏன் நாமே புது தெய்வமாகவும் உருவாக முடியும்

அந்த நிகழ்வுகளை நம்பி வழிபடுபவர்களை பொறுத்தே புது மதம் பிறக்கிறது