Sunday, January 15, 2017

தனிமை பயணம்

தனியாக பயணிப்பவர்கள்
தனிமையில் பணிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும்
தனிமையில் இயற்கையை இரசித்ததாகவும்
தனிமை பயணம் சுவாரசியமாகவும் பல அனுபவங்கள் நிறைந்து இருந்ததாக
மகிழ்ச்சியாக சொல்வார்கள்

உண்மையில் தனிமை பயணம் சுவாரசியமும் அனுபவம் நிறைந்ததாகவும் இருக்கும்
ஆனால் முழுமையான மகிழ்ச்சியாகவோ இரசனை நிறைந்ததாகவோ இருக்காது.
பயமும் படபடப்பும் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு அற்றதாகவே இருக்கும்

குழுவாக பயணிப்பவர்களை காட்டிலும் தனிமை பயணத்தில் பல மடங்கு அனுபவங்களை பெற முடியும் .
தனியாக பயணிப்பவருக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் பல மடங்கு அதிகமாக இருக்கும் .
இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு துணையுடனாவது பயணிப்பது நலம்.
அந்த பயணம் அலுப்பு தெரியாமல் போகும் , ஆறுதலாய் இருக்கும் 
தனிமை அற்று போகும் . 


இந்த பயணம் வாழ்க்கைக்கும் பொருந்தும்