Friday, December 9, 2016

உங்கள் கற்பனையில் கதை சொல்ல போகிறேன்

ஒருவேளை ஒரு திரைப்படத்தின் பெயர் இதுவாக இருந்தால்
"என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா "
அதன் கதை என்னவாக இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு இன்நேரம் வந்திருக்கும்...
ஆமாம் அதே தான்
அதே கதையில் சில காதபத்திரங்களை சேர்ப்போம்
முதலாவதாக பிரேம்ஜி அமரன் மற்றும் அவரது குழுவினரை இதில் சேர்த்து பார்ப்போம் .
இதோ உங்கள் கற்பனையில் அனைத்து காட்சிகளும் ஒரு படமாய் ஓட தொடங்கி இருக்கும் ...
ஆரம்பமே நண்பர்களுடன் ஒரு ரவுண்டு டேபிளில் சரக்கடித்து போதையில் இருப்பதை போல் ஒரு காட்சி வந்து இருக்கும் ...
அதில் SPB சரண் போல் ஒருவர் ..என் பொண்டாட்டி ஊருக்கு போறா ..நாம இனிமே எங்க வீட்டுல ஜாலியா சரக்கு அடிக்கலாம் என்பதை போல் இருக்கும் ..
அந்த அப்பாவி முகம் உள்ள பொண்டாட்டி ஊருக்கு சென்ற பின்பு அதே போல் அவரது வீட்டில் சரக்கு அடிக்க ஆரம்பித்திருப்பார்கள் .
போதை தலைக்கு எரிய நிலையில் ... ஊர் சுற்றி வரும் வழியில் மேலும் உல்லாசமாக இருக்க கருதி ஒரு விலை மாதுவை வீட்டுக்கு அழைத்தும் வருவார்கள் ...
பிறகு பஞ்சதந்திரம் படத்தின் கதையை உள்ளே சேர்க்கவும்..
படம் இறுதி கட்சியில் பெரும் குழப்பத்துடன் ...என்ன செய்வது என்று தெரியாமல் ...
ஒரு ஆடல் பாடல் காட்சியுடன் நிறைவு பெரும் ..வகையில் அது அமைந்து இருக்கும்
(இதுவும் உங்கள் கற்பனையை தூண்ட தான் )
(நீங்க படமாய் எடுத்தால் நான் Copyrights claim செய்ய மாட்டேன் )
நான் இதில் சொல்லவருவது என்னவென்றால் நான் இங்கு எதையும் முழுமையாக சொல்லவில்லை அனைத்தையும் உங்கள் கற்பனையிலே அவரவர் போக்கிலே இந்த கதையை சொல்லி இருக்கிறேன் .
இதுபோலத்தான் இருக்கிறது இன்றைய நிகழ்வுகளும்

Krishna Kumar G