Saturday, December 3, 2016

நாட்டு வெடி கலாசாரத்தில் தகிக்கும் தேசம

வெடி மருந்தை கலசத்துக்குள்ளே குத்தும் போதே கொலைநடுங்கும்... எதுக்குடா இவனுங்க இந்த வேலையை செய்றானுங்கன்னு ..
உடம்பு முழுவதும் மருந்தின் நிறம் அடர்ந்து படர்ந்து இருக்கும்..
அவர்கள் முகத்தில் ஒரு பயமும் இருக்காது .,
இந்த வெடி பாறைக்கு , இந்த வெடி கிணத்துக்கு , இந்த வெடி திருவிழாவுக்கு என்று அவர்கள் ஓர் முழம் அளவுள்ள பெரிய பெரிய வெடிகளை கைகளால் செய்வதை நம்மால் நம்பவே முடியாது ...

இது வெடிச்ச என்ன ஆகும் என்று நாம் வெகுளித்தனமாய் கேட்கா ...
அவர்கள் அவ்வளவு தான் 100 அடிக்கு இந்த இடமே இருக்காது ,
இரண்டு மாசத்துக்கு முன்னாடி கூட 4 பேர் இறந்துட்டாங்க.
என்று சொல்லிவிட்டு அசட்டு தனமாய் சிரிப்பார்கள்..

நமக்கு பயம் அதிகரித்து விடும் .

ஒரு 100 வேட்டு ஒரு பத்து 100 சரம் ஒரு 10 கலசம் ஒரு 1000 சரம் போதும் கொஞ்சம் சிக்கிரம் கொடுங்க என்று வாங்கியப்பின் அந்த இடத்தை விட்டு உடனே காலி செய்யத்தான் தோன்றும் .

பிறகு ஒரு ஆறு மாதம் கழித்து ..செய்திதாளில் அந்த இடத்தில் ஒரு வெடி விபத்து 3 நபர்கள் பலி.
அரசு முறையற்ற வெடி தயாரிப்பு ஆலைகளுக்கு சீல்.
என்பது செய்தியாக இருக்கும் ..

இது இப்படியே தொடர்கிறது .....
இதற்க்கு மாற்று வழி இல்லையா ...
என்றால்
எல்லாத்துக்கும் நாம் தான் காரணம்...
வெடி வெடிப்போம் டா
ஊரையே அதிர செய்வோம் டா
நாங்க யாருன்னு காட்டுவோம் டா

Standard பட்டாசு எல்லாம் சத்தம் வராது டா
நாட்டு வெடி வெடிப்போம் டா

என்கிற எண்ணமும் ஒரு மறைமுக காரணம்.

அனுமதி இல்லாத பட்டாசு ஆலைகளில் பட்டாசுகளை
வாங்குவதை தவிர்க்க வேண்டும் .

வெடி செய்யும் ஒரு ஏழையீன் வாழ்வாதாரம் போகுதே என்று இந்த விசியத்தில் மட்டும் கரிசனம் காட்டவே கூடாது.

Krishna Kumar G